Tuesday, November 4, 2008

அல்லாவும் ஈஸ்வரனும் வால்பையனும்

இதற்கு முந்தைய சினிமா பற்றிய தொடர்பதிவில் ஒரு கேள்வி

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பழையதில் கிழக்குச் சீமை - இன்றுவரை அண்ணண் தங்கை பாசம் என்றால் பாசமலர் படத்தைத்தான் சொல்வார்கள். ஆனால் எனக்கு என்னவோ கிழக்குச் சீமை முன்னதை முந்திவிட்டதாகத் தோன்றுகிறது. ஏ.ஆர்.ஆர். இசையும் ஒரு காரணம். புதியதில் அரண் - படம், சினிமா கலை, நுணுக்கம் இதையெல்லாம் தாண்டி நம் நாட்டிலேயே நம் இராணுவத்தால் பாதிக்கப்படும் கஷ்மீரிகளின் சோகங்கள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.

இந்த பதிவுக்கு நண்பர் வால்பையன் பின்னூட்டமிட்டிருந்தார். நானும் பதில் கூறியிருந்தேன்.சாட்டிலும் பேசினோம். அவற்றை கீழே தருகிறேன்.

வால்பையன் said...
//அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது!
ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு

புகழன் said...
---வால்பையன் said... /
அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது!ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு
---ராமன் அப்துல்லா படத்துல என்ன பாட்டு வரும்? நான் அந்தப் படம் பார்க்கவில்லை.

புகழன் said...
இப்பத்தான் கூகுள்ல தேடினேன்.
அந்தப் படத்தில் வரும் பாடல் “உன் மதமா” பாடல்
அதுவும் பிடிக்கும்.
கேட்டிருக்கிறேன்.

வால்பையன் said...
நானும் அதைத் தான் சொன்னேன். மதத்தை தேடி நாம் போகவேண்டியதில்லை.நல்லவர்களை தேடி மதம் வரும்.

புகழன் said...
அது சரி “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடலில் எங்கே மதம் வருகிறது?
இந்த அளவு கொஞ்சம்கூட புரியாமல் கண்ணில் கடவுள் மறுப்பு என்னும் திரையைப் போட்டு எல்லாவற்றையும் பார்ப்பது ஏன்?
எனக்குப் பிடிக்கும் என்று சொன்ன அந்தப் பாடலில் கஷ்மீரிகளின் துயரம் பற்றிய வரும் அவ்வளவே..
மதம் பற்றியோ, கடவுள் பற்றியோ அதில் குறிப்பிடப்படவே இல்லை.
யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வால்பையன் said...
அல்லா என்பதன் சரியான அர்த்தம் எனக்கு தெரியாது தான். ஆனாலும் பள்ளியில் படிக்கும் சிறுவனைக் கேட்டாலும் அல்லா என்பது முசல்மான்களின் கடவுள் என்று தான் சொல்லுவான். உண்மையில் அந்த பாட்டை நான் கேட்டதில்லை. அந்த பாட்டில் எங்கேயெனும் மக்களின் துயரம் இருக்கலாம். முதல் வரியில் அது எனக்கு தெரியவில்லை.

வால்பையன் said...
//யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.//
கடவுள் மறுப்பு என்பது திரை அல்ல. அதுவே விளிப்பு நிலை.

இனி சாட்
11:40 AM வால்: :)
11:42 AM me: ஏங்க நான் பொதுவா யதார்த்தமா எழுதுறதயெல்லாம் ஒருசார்பா எழுதுற மாதிரி கமென்ட் போடுறீங்க?
வால்: :)
11:43 AM appati illai
manathil iruppathu thaan veliyil varum
athu ungkalukkum enakkum porunthum
me: அந்த பாடல் கேட்டுள்ளீர்களா?
11:44 AM வால்: illaiyenru terkanave sollivitten
me: லிங்க் தருகிறேன் கேளுங்கள்
-------------------------------------------------
அதுவே இந்தப் பதிவு இப்படி இருந்திருந்தால்?

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
........................... ......... ....
புதியதில் கண்ணெதிரே தோன்றினாள் - படம், சினிமா கலை, நுணுக்கம் இதையெல்லாம் தாண்டி நட்புக்கும் காதலுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை யதார்த்தமாக சொல்லியிருப்பார்கள். அதில்வரும் “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.

வால்பையனுடைய பின்னூட்டம் இப்படித்தான் இருந்திருக்குமோ?

வால்பையன் said...
//அதில்வரும் “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது! ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு

புகழன் said...
---வால்பையன் said... //அதில்வரும் “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது! ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு
---ராமன் அப்துல்லா படத்துல என்ன பாட்டு வரும்? நான் அந்தப் படம் பார்க்கவில்லை.

புகழன் said...
இப்பத்தான் கூகுள்ல தேடினேன்.
அந்தப் படத்தில் வரும் பாடல் “உன் மதமா” பாடல்
அதுவும் பிடிக்கும்.
கேட்டிருக்கிறேன்.

வால்பையன் said...
நானும் அதைத் தான் சொன்னேன். மதத்தை தேடி நாம் போகவேண்டியதில்லை. நல்லவர்களை தேடி மதம் வரும்.

புகழன் said...
அது சரி “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடலில் எங்கே மதம் வருகிறது?
இந்த அளவு கொஞ்சம்கூட புரியாமல் கண்ணில் கடவுள் மறுப்பு என்னும் திரையைப் போட்டு எல்லாவற்றையும் பார்ப்பது ஏன்?
எனக்குப் பிடிக்கும் என்று சொன்ன அந்தப் பாடலில் நட்பின் பயன்கள் பற்றி வரும் அவ்வளவே..
மதம் பற்றியோ, கடவுள் பற்றியோ அதில் குறிப்பிடப்படவே இல்லை.
யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வால்பையன் said...
ஈஸ்வரா என்பதன் சரியான அர்த்தம் எனக்கு தெரியாது தான். ஆனாலும் பள்ளியில் படிக்கும் சிறுவனைக் கேட்டாலும் ஈஸ்வரா என்பது இந்துக்களின் கடவுள் என்று தான் சொல்லுவான். உண்மையில் அந்த பாட்டை நான் கேட்டதில்லை. அந்த பாட்டில் எங்கேயெனும் நட்பு இருக்கலாம். முதல் வரியில் அது எனக்கு தெரியவில்லை.

வால்பையன் said...
//யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.//
கடவுள் மறுப்பு என்பது திரை அல்ல. அதுவே விளிப்பு நிலை.

பி.கு: எப்டில்லாம் யோசிக்கிறாங்கப்பா................ தாங்க முடியல....

Monday, October 27, 2008

தமிழ் சினிமா இழந்தது...

முன் குறிப்பு: கடைசியில் பின் குறிப்பு உள்ளது தவறாமல் படித்து விட்டுச் செல்லவும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
5 வயதிருக்கும் (சரியாகத் தெரியவில்லை). முதலில் பார்த்த படம் நன்றாக நினைவு இருக்கின்றது. எங்க அப்பா வேலை செய்த கடையின் முதலாளி ஒரு தியேட்டர் வைத்திருந்தார். எங்கப்பா எங்களையெல்லாம் அங்கதான் கூட்டிட்டு போவாங்க. என்னைய முதல்ல கூட்டிட்டு போன படம் ரஜினி நடித்த பில்லா. படத்துல வர்றது எல்லாம் உண்மைதான்னு நினைக்கிற வயசுதான அது. அதனால எங்க அப்பாகிட்ட கேட்டேன். ரஜினி செத்த பிறகு மறுபடியும் எப்படி வந்து நடிக்கிறார்னு. அப்பத்தான் எங்க அப்பா டபுள் ஆக்ட் பற்றியும் சினிமா என்பது உண்மை அல்ல என்பது பற்றியும் விளக்கிச் சொன்னாங்க. அதனால எனக்கு விவரம் தெரிந்த பின் எந்த படமும் எந்த உணர்வையும் ஏற்படுத்தல. ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்காகத்தான் எடுத்துக்கிட்டேன். எனவே எந்தப் படமும் அவ்வளவாக மனசில் நிக்கல. அப்புறமா உமர் முக்தார் நினைவில் உள்ளது. தற்போது பழைய படங்களை மீண்டும் தற்கால அறிவு, அரசியல், சமூக நிலை இவற்றோடு ஒப்பிட்டு கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக பார்க்கிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
ரமணா - அழகி இரண்டில் எதுவென்று தெரியவில்லை. ஏனெனில் இரண்டுமே 5 வருடங்களுக்கு முன் பார்த்தது. அதன் பின் படம் ஏதும் பார்க்கவில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம் - விசிடிலதான்.
இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்களே. நாம ஜாலியா இங்க திருட்டு விசிடில பார்க்கிறோமேன்னு உணர்ந்தேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பழையதில் கிழக்குச் சீமை - இன்றுவரை அண்ணண் தங்கை பாசம் என்றால் பாசமலர் படத்தைத்தான் சொல்வார்கள். ஆனால் எனக்கு என்னவோ கிழக்குச் சீமை முன்னதை முந்திவிட்டதாகத் தோன்றுகிறது. ஏ.ஆர்.ஆர். இசையும் ஒரு காரணம். புதியதில் அரண் - படம், சினிமா கலை, நுணுக்கம் இதையெல்லாம் தாண்டி நம் நாட்டிலேயே நம் இராணுவத்தால் பாதிக்கப்படும் கஷ்மீரிகளின் சோகங்கள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
ரஜினியின் குசேலனைத் தொடர்ந்த கர்நாடகப் பிரச்சினை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
தொழில்நுட்பம் பற்றியெல்லாம் தெரியாது. தசாவதாரம் கொஞ்சம் திகைக்க வைத்தது. நல்ல பிரமாண்டம் (ஓசில பார்த்தா அப்படித்தான் இருக்கும் போல) :)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறையவே படிப்பேன். என் நண்பர்கள் கூட சொல்வார்கள். படமே பார்க்கிறதில்லைன்னு சொல்ற. பின்ன எப்படி எல்லா படத்தப் பத்தியும் கரெக்டா சொல்லுறன்னு. இப்பல்லாம் விமர்சணங்கள் படித்தாலே பாதி பார்த்தமாதிரி ஆகிடுது. அப்புறம் இருக்கவே இருக்கு ப்ளாக் முழுப்படத்தையும் இன்ஞ் பை இன்ஞ்சா விவரிச்சு எழுதி கண்ணு முன்னால கொண்டு வந்துடுறாங்க.

7. தமிழ்ச்சினிமா இசை?
இசை என்றாலே இளையராஜாதான் சட்டென்று ஞாபகத்துக்கு வரும்.
அடுத்து ஏ.ஆர்.ஆர்.
ஆனா இப்பல்லாம் நிறைய இசைக்கு பஞ்சமாகிவிட்டதுபோல் தமிழ் இசையமைப்பாளர்கள் நடந்து கொள்கின்றனர். காப்பி பேஸ்ட் பண்ணுற பிளாக்கர்கள் பரவாயில்லையோ என்று தோனுது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஹிந்தியில் - லகான்,
ஆங்கிலம், ஈரானியப் படங்கள் எப்பவாவது பார்ப்பதுண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படி ஒரு வாய்ப்பை தமிழ் சினிமா இழந்து விட்டது. இனிமேலும் அந்த பாக்கியம் தமிழ் சினிமாவிற்கு இல்லை என்றே தோன்றுகிறது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொழுதுபோக்குக்காக என்றால் எதிர்காலம் நன்றாகவே இருக்கும் (எவ்வளவு மோசமாக இருந்தாலும் தலிவா என்று கையசைத்து விசிலடிக்கும் ரசிகர்கள் இருக்கும்வரை). ஆனால் மக்கள்ஸ் அதை மட்டும் எதிர்பார்த்து படம் பார்க்கச் செல்வதில்லையே.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அந்த நாளை ரெம்பவே எதிர்பார்க்க வேண்டும் நாம். வாசிப்புப் பழக்கம் குறைந்ததற்கு தற்கால அதிவேக கலாச்சாரத்துடன் சினிமாவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே வாசிப்புப் பழக்கம் பெருகும்.

பின்குறிப்பு: எல்லோரும் தொடர் பதிவு எழுதி வெளையாடுறாய்க. நம்மல சேத்துக்கவே மாட்டிங்கிறாய்களேன்னு ரெம்பவே வருத்தமா இருந்திச்சு. யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ஒவ்வொரு தொடர்பதிவையும் விடாம படிப்பேன். ஆனா பூச்சாண்டி என்னைய எழுத அழைத்ததும் எனக்கு திக்குனு ஆகிப் போச்சு. (தொடர்பதிவு எழுத அழைத்தால் மறுக்கக் கூடாது என்பது பதிவுலகில் எழுதப்படாத விதியாமே) அப்பறம்தான் யோசிச்சேன். ஆசைப் பட்டது ரெம்பத் தப்புன்னு. என்ன எழுதுறது. நாம என்ன பெரிய்ய எழுத்தாளரா என்ன?

சினிமா பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
இசை பத்தி என்ன நினைக்கிறீங்க?
தொழில்நுட்பம் பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று விழாக்காலங்களில் பிரபல்ய ஹீரோ ஹீரோயின்களிடம் பேட்டி எடுப்பது போல் இருந்தால் என்ன பதில் சொல்றதுன்னு திகைச்சுப் போயிட்டேன். (மவனே மத்தவங்க எழுதுனத படிக்க மட்டும் தெரியுது எழுதமாட்டியோன்னு யாரும் திட்டாதீங்க) இப்படியான சிக்கல்கள் ஒருபுறம் அதிகப்படியான ஆபீஸ் வேலைகள் மறுபுறம் (ஆமா... அப்படியே வேளை இல்லைன்னாலும் எழுதிக் கிழிச்சன்னு யாரோ சொல்றது கேட்குது)
இப்ப தீவாளி லீவுல அதுனால இதுக்கு ஒரு முடிவு கட்டிறனும்னு எழுதிட்டேன்.

அதுக்கப்புறம் முக்கியமான விஷயம் இந்த ஆட்டத்தைத் தொடர யாரையாவது அழைக்கனுமாமே? என்னதான் ரூல்ஸ் இருந்தாலும் பரவாயில்லை அய்யோ பாவம் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு சும்மா இருக்கலாம்னு நினைச்சா சட்டுன்னு ஒன்னு தோனி்ச்சு...
(ஏற்கனவே நிறைய பேர் எழுதிட்டாங்கடா சோம்பேறி... நீ யாரைக் கூப்பிட்டாலும் அவங்க எழுதியிருப்பாங்க)
அய்யோ யாரு திடீர்னு திட்டுறது? (ஓ! மனசாட்சியா?)

நம்மல மாதிரியே தொடர்பதிவு எழுத ஆசைப்பட்டு யாராலும் அழைக்கப்படாமல் சிலர் இருப்பாங்க. அப்படித் தேடி மூன்று பேரை மட்டும் அழைக்கிறேன்.

மின்னல் - சுமதி
ஊஞ்சல் - தாரணி பிரியா
நல்ல நண்பன் - பாபு

Sunday, October 12, 2008

கா.மு - கா.பி. - ரிவர்ஸபுல் (Reversable)

பதிவுலக நண்பர் வால்பையன் அவர்களின் ர்ரிவர்ஸபுல்(irreversable) ஒரு புதிய முயற்சி என்ற இந்தப் பதிவையும் இதற்கு முந்தைய ர்ரிவர்ஸபுல் பற்றிய பதிவையும் படித்து விட்டு இதுபோல் ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

பாவம் சக பதிவர்களை கஷ்டத்திற்குள்ளாக்க வேண்டாம் என்ற நல்ல நோக்கத்தில் அந்த முயற்சியை மறந்திருக்கும் போது இன்று தினமணி இணைப்பு இதழான தினமணி கதிரில் ‘பேல் பூரி’ என்ற பகுதியைப் படித்தேன். அதில் வந்த ஒரு பகுதி மிகவும் பிடித்திருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இனி ரிவர்ஸபுல்

காதலிப்பதற்கு முன்

அவன்: “ஆம். எதிர் பார்த்துதான் காத்திருக்கிறேன்”.

அவள்: ‘‘என்னை விட்டு பிரிய நினைக்கிறாயா?”

அவன்: “இல்லை. அப்படி நினைக்காதே.”

அவள்: “என்னைக் காதலிக்கிறாய் தானே?”

அவன்: “நிச்சயமாக... நிச்சயமாக...”

அவள்: “உன்னை நம்பி மோசம் போய் விடமாட்டேனே?”

அவன்: “தயவு செய்து இப்படியெல்லாம் கேட்காதே...”

அவள்: “என்னை முத்தமிடுவாயா?”

அவன்: “வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்...”

அவள்: “எப்போதாவது என்னை அடிப்பாயா?”

அவன்: “உனக்கு என்ன பைத்தியமா? அப்படியெல்லாம் யோசிக்காதே”

அவள்: “எப்போதும் என்னோடுதானே இருப்பாய்?”

அவன்: “யெஸ்... யெஸ்...”

அவள்: “டார்லிங்!”

காதலித்ததிற்குப் பின்னான கதையைக் கீழே இருந்து மேலே படித்துப் போகவும்.

Saturday, October 11, 2008

அது ஒரு காகம்!

நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்ற போது அங்கு கிடந்த புத்தகத்தில் படித்தது.
நீங்களும் படிக்கலாமே!

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது!
80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை படித்துக் கொண்டிருக்கிறார்.
நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
'என்ன இது?' என்று கேட்டார் முதியவர்.
லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார்,
'அது ஒரு காகம்'
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், 'என்ன இது?'
'இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்' என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், 'என்ன இது?'
சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், 'அது ஒரு காகம், காகம்!'
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், 'என்ன இது?'
மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், 'அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, 'அது ஒரு காகம்' என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?'
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை.
அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது. அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்த தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
'எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் 'அது என்ன' என்று 23 தடவைகள் கேட்டான். 'அது ஒரு காகம்' என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது'.
இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன.
23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.
திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.
“(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் 'சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக!
(திருமறை அத்தியாயம் 17 - வசனம் 23, 24)
தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, 'என்னுடைய இறைவனே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் உனக்கு வழிப்படுகின்றவர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்' என்று அவன் கூறுகின்றான்.
(திருமறை அத்தியாயம் 46 - வசனம் 15)

Thursday, August 7, 2008

தேவயானியும் ஹிலாரி கிளின்டனும்...

(முன்னுரையாக கசனின் கதை மிக மிகச் சுருக்கமாக)



தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் கட்டளைக்கிணங்க அசுரகுல குரு சுக்கராச்சாரியாரிடம் மாணவனாக சேர்ந்தான் பிரகஸ்பதியின் மகன் கசன்.


இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்பதுதான் நோக்கம்.

கசனின் நோக்கம் தெரிந்திருந்தும் சம்பிரதாயப்படி கசனை சீடனாக ஏற்றார் சுக்கராச்சாரி. எனினும் சஞ்சீவினையை மட்டும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று உறுதிபூண்டார்.


சுக்கராச்சாரியாருக்கு தேவயானி என்றொரு தேவதை மகளாய் இருந்தாள்.

வாதங்களில் தந்தையையே திணறவைத்த அந்த வாலிபனை வியந்து பார்த்தாள் தேவயானி. வியப்பு விரைவில் காதலானது.


மெல்ல மெல்ல இந்த நெருக்கம் அசுரர்களுக்குத் தெரிந்ததும், எங்கே சுக்கராச்சாரியார் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சி கசனை தீர்த்துக்கட்ட உத்தரவிட்டார் மன்னராக இருந்த விருஷபர்வா.

அதன்படியே கசனை கொன்று துண்டு துண்டாக்கி நாய்களுக்குப் போட்டுவிட்டனர்.


கசனைக் காணாது தேவயானி தவித்துப் போய்விட்டாள். “கசனுக்கு ஏதோ ஆகிவிட்டது. அவனை உயிரோடு கொண்டு வந்தே ஆக வேண்டும்” என்றாள். சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்தார் சுக்ராச்சாரியார். கசன் நாய்களின் உடலைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டான்.


செய்தியறிந்து விதிர்விதிர்த்துப் போனாலும் தனது முயற்சியைக் கைவிடாத விருஷபர்வா, கசனைக் கொன்று எதித்து அந்தச் சாம்பலை மதுவில் கலந்து சுக்கராச்சாரியாருக்கே கொடுத்துவிடும்படி தனது ஆட்களை ஏவினார். அவர்களும் அப்படியே செய்துவிட்டனர். மீண்டும் கசனைக் காணாது கண்ணீர் விட்டாள் தேவயாணி. அன்பு மகளின் கலக்கத்தைக் காணப் பெறாத அவளின் தந்தை சஞ்சீவினியை உச்சரிக்கத் தொடங்கினார். அவரின் வயிற்றுக்குள் இருந்த கசன் மெல்ல மெல்ல உணர்வுபெற ஆரம்பித்தான். இதனை அறிந்த குருவானவர் மந்திரத்தைப் பாதியிலேயே நிறுத்தி விட்டார்.


“மகளே! கசன் என் வயிற்றுக்குள் இருக்கிறான். மந்திரத்தை முழுவதும் சொல்லி முடித்தால் என்னைப் பிளந்து கொண்டு வெளிப்படுவான். நான் மாண்டு போவேன். எனவே நீ கசனை மறந்து விடு. அவன் கதை முடிந்து விட்டது.”


தேவயானியின் மனோநிலை விசித்திரமாக இருந்தது. தனது உயிருக்கு ஆபத்து என்றதும் கசனை மறந்து விடுவாள் என்றுதான் சுக்கராச்சாரியாரும் நினைத்தார். அவளோ புலம்பினாள்.


“எனக்கு நீங்களும் வேண்டும் கசனும் வேண்டும். இருவரும் எனது இரு கண்கள். எந்த ஒன்றையும் நான் இழக்க முடியாது.”


சுக்ராச்சாரியார் எதையோ இழந்தது போலானார். தனக்கு சமதையாக இன்னொரு உயிரைத் தனது மகள் கருதக்கூடும் என்கிற உண்மை அந்தத் தந்தைக்கு உள்ளூரப் பெரும் வேதனையைத் தந்தது.


“இருவரில் ஒருவரைத்தான் காக்க முடியும். இருவரையும் எப்படிக் காக்க முடியும்?”


“அதற்கு வழி இருக்கிறது தந்தையே. சஞ்சீவினி மந்திரத்தை முதலில் எனக்குச் சொல்லிக் கொடுங்கள் பின்னர். தாங்கள் துவங்கிய மந்திரத்தை முழுமையாகச் சொல்லி கசனை உயிர்ப்பியுங்கள். சஞ்சீவினி கொண்டு உங்களை நான் எழுப்பி விடுகிறேன்.”


சுக்ராச்சாரியார் முகத்தில் லேசான புன்னகை. எதையோ யோசித்தார்.

“மகளே! சற்று நேரம் அப்பால் இரு. நாங்கள் இருவருமே உயிருடன் வருவோம்.”


அப்படியே தேவயானி வேறுபுறம் சென்றாள். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது குருவும் சீடனும் குதூகலத்துடன் பேசிக் கொண்டிருநதனர். அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி. உலகத்தையே வென்றுவிட்ட உற்சாகம். கசனைக் கட்டிப் பிடித்துக் கூத்தாடினாலள். இதுதான் தருணம் என்று கசனை தான் மனதில் வரித்திருக்கிற விஷயத்தையும் தந்தையிடம் கூறிவிட்டாள். குருவுக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் சீடனுக்கு...?


பல்வேறு சமாதானங்கள் கூறி தேவலோகம் சென்றுவிட்டான் கசன்.


திகைத்துப் போன தேவயானி நெடுநேரம் அழுதாள். திடீரென்று ஒரு ஞாபகம் எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த தந்தையே நோக்கினாள்.


“எப்படி இருவருமே உயிரோடு வந்தீர்கள்?”


“ம்... முதலில் சஞ்சீவினியை வயிற்றுக்குள் இருந்த கசனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். பிறகு அவனை உயிர்ப்பித்தேன். என்னைப் பிளந்து கொண்டு வெளியே வந்த அவன். அதே மந்திரத்தின் மூலம் என்னை உயிர்ப்பித்தான். என்ன இருந்தாலும் சொன்ன சொல்லைத் தட்டாத சீடன். எனக்குத் துரோகம் இழைக்கவில்லை.”


“ஐயோ! சஞ்சீவினியைக் கற்றுக் கொண்டு போய்விட்டானே! அதற்கு பதிலாக எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே?”


“மகளே! பெண்ணுக்கு எந்த வித்தையையும் கற்றுத் தரக்கூடாது. உனக்குத் தெரியாதா? ஆணுக்குத்தான் உபநயனம். பெண்ணுக்கு உபநயனம் அவளது திருமணமே.”


கசன் தன்னை விட்டுப் போன சோகத்தைவிட வேறு ஒரு சோகம் தன்னைத் தனது பிறப்பிலிருந்தே சூழ்ந்திருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள் தேவயானி. பெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா? எதிரியின் மகனுக்குக் கற்றுத்தரும் வித்தையை பெற்ற மகளுக்குக் கற்றுத் தரக்கூடாதா? சுக்கராச்சாரியாரையும் கசனையும் முதன்முதலாக வெறுப்போடு நினைத்தாள்.

அமெரிக்காவுக்கு அதிபர் தேர்தல் வரப்போகிறது.

அதற்கு முன் தேர்தலில் யார் வேட்பாளராக போட்டியிருவது என்பதற்கு ஒரு தேர்தல் நடந்தது.

அதில் ஜனநாயகக் கட்சியில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்களில் இருவர் முக்கியமானவர்கள்.
1. பராக் ஒபாமா
2. ஹிலாரி கிளின்டன்.


இருவருக்கும் இடையே நிகழ்ந்தது கடும் போட்டி. ஒவ்வொரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அளவில் விவாதிக்கப்பட்டது.


இறுதியில் ஹிலாரியை தோற்கடித்துவிட்டு பராக் ஒபாமா வெற்றி பெற்றார்.

பராக் ஒபாமா வெற்றி பெற்றதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம்.

ஆனால் ஹிலாரி கிளின்டன் தோல்வியடைய என்ன காரணம்?

வெற்றிக்கு காரணங்கள் சொல்லலாம் தோல்விக்கு எப்படி காரணம் சொல்ல முடியும்?


ஹிலாரி ஒரு அமெரிக்க வெள்ளைக்கார்.
ஆனால் ஒபாமாவோ கருப்பினத்தவர்.


ஹிலாரி கிறிஸ்தவர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் ஒபாமா கிறிஸ்தவர்தானா என்பதிலேயே சந்தேகங்கள் கிளப்பி விடப்பட்டது. பராக் ஹுஸைன் ஒபாமா என்ற அவரது பெயரை வைத்து அவர் முஸ்லிம் என்றெல்லாம் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.


இப்படி அமெரிக்கர்கள் ஹிலாரியை வெற்றிபெறச் செய்வதற்கு என்னற்ற காரணங்கள் இருந்தும் ஹிலாரி தோல்வியடைந்தார்?


அதுதான் ஏன் என்று புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை பதிவை முதலில் இருந்து படித்துக் கொள்ளுங்கள்.

Wednesday, August 6, 2008

ஆத்துல போட்டாலும் அளந்து போடு...

இந்த தலைப்பு ஒரு பழமொழி.
இதற்கு என்ன விளக்கம் என்று பலரும் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
நான்கூட யோசிச்சேன்.
ஆனா ஒருநாள் ரேடியோ எஃப்.எம். (எந்தச் சேனல்னு மறந்து போச்சு)
கேட்கும்போது அதுல இந்த பழமொழிக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
தேங்காய ஆத்துக்குள் போடும்போது சைஸ அளந்து போடனும் அப்படி இப்படின்னு ஒரு கலாய்த்தல் நிகழ்ச்சி அது.
இந்த நிகழ்ச்சியைக் கேட்டதும் இந்தப் பழமொழியைப் பத்தி ரெம்ப சீரியஸா யோசிக்க ஆரம்பிச்சேன்.
அப்ப எனக்கு தோன்றிய கருத்தை இப்ப உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“ஆத்துல போட்டாலும் அளந்து போடு”
இதுக்கு பொதுவா சொல்லுற கருத்து என்னன்னா... ஆறு பிரம்மாண்டமானது அது தனக்கு தேவையில்லாத பொருட்களையெல்லாம் ஆத்துல போட்டுதான் கழிவை நீக்குவாங்க.
அப்போது அப்படி போடும் போது அளந்து அதாவது கவனித்து தேவையா இல்லையா என்பதைப் பார்த்து போடனும் என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்
அவாள்கள் பாஷையில்
ஆத்துல - வீட்டுல
இதன் படி
வீட்டுக்கே - குடும்பத்துக்கே செலவு செய்தாலும் கணக்கிட்டு செய்ய வேண்டும்.

டிஸ்கி: இதற்கு நீங்களும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Wednesday, July 23, 2008

தமிழச்சிக்கு ஓர் வேண்டுகோள்

என்னமோ உங்களுக்கு மட்டும்தான் பெண்ணியம் தெரியும் என்பது போலவும் நீங்கள் மட்டும்தான் பெண்ணியத்தை உயர்த்திப் பிடிப்பது போலவும் ஏதேதோ கிறுக்கி விடுகின்றீர்கள். (கிறுக்கல் என்று சொன்னதற்கு மன்னிக்கவும். இது என் வார்தை அல்ல. இந்தப் பதிவில் கண்டது.) உங்களை விடவும் பெண்களைவிடவும் எவ்வளவோ பெண்களை மதிக்கும் ஆண்கள் உள்ளனர். பெண்ணியம் பேசுவது இன்று ஃபேஷனாகி விட்டது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அல்லது பெண்களே படிக்கக் கூசும் அளவு வக்கிரமாக எழுதி விட்டால் இன்று பெண்ணிய வாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். இந்த வக்கிரங்களை ரசிப்பதற்கும் புகழ்வதற்கும் (எனக்குத் தெரிந்து இளையகவி, லக்கி லுக் போல்) ஒரு கூட்டம் இந்த ஜொள்ளர்களின் ஜொள்ளுக்குப் பின் ஒழிந்திருக்கும் ஆணாதிக்கத்தைக்கூட அறியாத தமிழச்சியெல்லாம் பெண்ணியம் பேசும் போதாத காலம் இது.தமிழச்சி அவர்களே! உங்களை மதிக்கிறோம். உங்கள் கருத்துக்களைப் போற்றுகிறோம். இந்த நவநாகரீக உலகில் பெண்களுக்கு எதிராய் பெண்களே செயல்படும்போது பெண்ணியம்பேச உங்களைப் போல் ஒருவர் இருக்கின்றார் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் அதில் சேற்றை வாரியிறைப்பதாக உங்கள் எழுத்துக்கள் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் தாழ்மையான வேண்டுகோள்.இந்த வேண்டுகோள் தமிழச்சிக்கு மட்டுமல்ல. பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகள் அனைவருக்கும்தான். அல்லது இப்படித்தான் பெண்ணியம் பேசுவோம் என்றால் அப்படிப்பட்ட பெண்ணியம் எங்களுக்குத் தேவையில்லை என்று பெண்கள் குரல் கொடுப்பார்கள்.எனது இந்தப் பதிவையும் கொஞ்சம் படித்துக் கொள்ளுங்கள்.

Monday, July 21, 2008

அதுதானா இது?


இது ஒரு பொருளின் ஒரு பகுதி
என்ன பொருள் அது?
இது தானா?
இது இப்ப ரெம்ப சர்வசாதாரணமா ஆயிடுச்சி.
பொட்டி தட்டுறவங்க எல்லோருமே இத இப்ப அதிகமா பயன்படுத்துறாங்களாம்.
டிஸ்கி: நல்லா பார்த்து என்னதுன்னு சொல்லனும்
பின்னூட்டத்துலயும் “அதுதானா இது?” என்று சும்மா சொல்லிட்டு போகக்கூடாது.

Thursday, July 17, 2008

இங்கிதமில்லாத இளையராஜா

ஸ்ரேயா கோஷல் பாடும் இந்தப் பாடலிலும் இந்தக் காட்சியிலும் பாராட்ட வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றது.

குரல் அழகு

மேனரிஸம்

புத்திசாலித்தனம்

புரிந்துணர்வு

தன்னடக்கம்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜானகியின் அதே குரலில் கேட்பதைவிட இந்தப் பாட்டை ஸ்ரேயாவின் குரலில் கேட்பதற்கு இன்னும் நன்றாக இருக்கிறது.

பல்லவியை ஒவ்வொருமுறை முடிக்கும் போதும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதுபோல் ஒரு சுற்று சுற்றிவருவது மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.

அந்நிய மொழியில் அற்புதமாக பாடுகிறார்.

பிறமொழிப் பாடகர்கள் தமிழில் பாடும் போது தமிழை மட்டுமல்ல எதை எதையெல்லாமோ கொலை செய்கின்றார்கள். “ஈஸ்வரா வானும் மண்ணும் ஹேண்ட்ஷேக் பன்னுது உன்னால் ஈஸ்வரா” என்ற பாடலைப் பாடச் சொல்லும் போது அந்தப் பாடகர் (பெயர் தெரியவில்லை) “பிரியமான பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லே” என்று பாடுவதற்கு பதில் பெரியம்மாவின் பொண்ணை ரசிக்கலாம்” என்று பாடினாராம்.

அந்த அளவு மோசமாகப் பாடாவிட்டாலும் ரெம்பவே அழகாகப் பாடியிருக்கிறார் ஸ்ரேயா.

இதில் ஒரு சிறிய தவறு “காணாத ஒன்றைத் தேடுதே” என்பதற்கு பதில் ‘தோடுதே’ என்று பாடிவிட்டார். ஆனால் பார்வையாளர்களின் ரியாக்ஸனைப் பார்த்து விட்டு அதனை கடைசியாகப் படிக்கும் போது சரியாக ‘தேடுதே’ என்று படித்து விட்டார். ரசிகர்கள் கைதட்டியதும் சிரிக்கவும் செய்கிறார். எவ்வளவு அருமையான அப்ஸர்வேஷன். ரியலி கிரேட்.

இவருடைய இந்த திறமையைப் பாராட்டி இளையராஜா கூறியதுதான் சற்று அல்ல ரெம்பவே நெருடலான விஷயம்.

“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”

எதற்கு எந்த உதாரணத்தைக் கூற வேண்டும் என்ற முறையின்றி கூறியிருக்கிறார்.

நல்லவேளை ஸ்ரேயாவுக்கு தமிழ் தெரியாது. ஏதோ இளையராஜா தன்னை ரெம்பவே பாராட்டுகிறார் என்று சிரித்துக் கொண்டே நின்றார் ஸ்ரேயா. பின்னால் ஒருநாள் தமிழ் தெரிந்து இந்த கிளிப்பை பார்க்க நேரிட்டால் கண்டிப்பாக வருந்துவார்.
இதற்கு பதிலாக இளையராஜா பாராட்டாமலேயே இருந்திருக்கலாம்.

டிஸ்கி: எப்படியே ஸ்ரேயா ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவரின் தரிசனம் இந்தப் பதிவின் மூலம். என்ஜாய் மக்கள்ஸ்.

Monday, June 23, 2008

கடந்த காலத்திற்கு போக முடியுமா?

எனக்கு வந்த ஒரு SMS இது.

Believe It or Not:
Time can be reversed once in your lifetime.
If you leave Tokyo by Plane at 7.00am.,
you will arive in Honolulu (US) at approx 4.30pm
the previous day...

உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

டிஸ்கி: இதை யாராவது அழகிய தமிழில் மொழியாக்கம் செய்து இன்னும் விரிவாக விளக்கி பதிவு போடவும்.

Sunday, June 8, 2008

நான் எழுதிய கவிதை

நான் எழுதிய கவிதைகளில் அழகானதை கீழே கொடுத்துள்ளேன்.
படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்










































ஒரு ஒயிட் போப்பரை எடுத்து அதில கவிதை கவிதைன்னு நிறைய எழுதிப் பார்த்தேன்.

அதுல இது மட்டும்தான் அழகா இருந்துச்சு அதனாலதான். அதை நீங்களும் பார்க்கனுமேனுதான்......

Wednesday, June 4, 2008

சந்தேகம்

தரணியின் நடத்தையில் கடந்த ஒருவாரமாக மாற்றங்களைக் கண்டாள் சங்கீதா.

இன்று இரவு கேட்டும் வைத்தாள். “ஏங்க, இன்னிக்கு பூ வாங்கிட்டு வரலையா?” ரொம்பவும் ஆசையுடன் கேட்டாள்.

“இல்ல, மறந்துட்டேன். நாளைக்கு வாங்கிட்டு வாரேன்” எந்தவொரு அக்கறையும் இல்லாமல் சொன்னான் தரணி. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வாங்கிவரவில்லை.

திருமணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து, தனிக்குடித்தனம் நடத்தும் சங்கீதாவுக்க மனதே சரியில்லை.

முதன் முறையாக கணவனின் நடத்தையில் சந்தேகம் கொண்டாள். ‘வேலை முடித்து வீட்டுக்கு சீக்கிரம் வருபவர், கொஞ்ச நாளா ரொம்ப லேட்டா வர்ராரே?’ மனதின் எண்ணங்கள் தப்பாக கணக்குப் போட்டது.

ஒருநாள் இரவு தாமதமாக வந்த சமயம் பார்த்து சங்கீதா தாண்டவமாடத் துவங்கினாள்.

“எவ கூட சுத்திட்டு வர்ரீங்க... ஒரு மாசமா பார்க்கிறேன், உங்க நடத்தையே சரியில்லை. யாரு அந்த சக்களத்தி..” தலையணையில் முகம் புதைத்து அழுதுவிட்டாள்.

இப்போதும் எதுவுமே கேட்காமல் தரணி தூங்கிவிட்டான்.

மாதத்தின் முதல்நாள். மாலை சீக்கிரமே வீ்ட்டுக்கு வந்த தரணி கையில் ஸ்வீட்பாகஸ், சேலை, மல்லிகைப்பூ சகிதமாக வீட்டிற்குள் நுழைந்தான்.

சங்கிதா முகம் கொடுக்காமல் திரும்பியிருந்தாள். தரணி வாய் திறந்தான்.

“சங்கீ... போன மாதத்தி்லேர்ந்து வேற கடையில சேர்ந்துட்டேன். ”

அவன் பேசிக் கொண்டிருக்க சங்கீதா அமைதியாயிருந்தாள்.

“ஏற்கனவே வேலை செய்த டெய்லி சம்பளம் தரும் கடையலிருந்து நின்னுட்டதால கையில காசு இல்லாம உனக்கு எதுவுமே வாங்கி வர முடியலை.”

சங்கீதா அவனைப் பார்க்க, “இப்ப மாதச் சம்பளம் தரும் கடையில் வேலை செய்கிறேன். நமக்கு குழந்தை பிறந்தவுடன் செலவு அதிகமாயிருக்கும், பின்ன அதை நல்ல படிக்க வைக்கனும் இப்படி எல்லாத்துக்கும் சேர்த்து இப்பவே அதிகமாக சம்பாதிக்கனும் சேர்த்து வைக்கனும். எக்ஸ்ட்ரா டைம் ட்யூட்டி பார்த்தால் அதிக சம்பளம் கிடைக்கும். அதான் டெய்லி லேட்டா வர்ரேன்” என்றான்.
அவள் கண்கலங்கினாள். அவள் கண்களைத் துடைத்தவனாக, “இன்னிக்கு சம்பள நாள், உனக்கு....” என்று வாங்கி வந்த அனைத்தையும் நீட்டினாள்.
ஆக்கம்: மால்கம்
பதித்தது: புகழன்.
நானும் சொந்தமா கதை எழுதலாம்னு நினைக்கிறேன். ஆனா அதை இந்தப் பதிவுலகம் ஏத்துக்குமான்னு நினைச்சாத்தான் ரெம்ப யோசனையா இருக்கு. அதனாலதான் என் நண்பன் எழுதிய கதைகள் இங்கே பதிவாக...
வெகு விரைவில் நானும் கதை எழுதுவேன் (அந்தக் கஷ்டத்தையும் நீங்க சகிச்சுக்கிட்டுதான் ஆகனும்).

Wednesday, May 14, 2008

“ஏண்டா எனக்குப் பின்னாடி பொறந்த?”

அத்தை மகள்.
முதல் முறையாக அவள் என்னை இழுத்து நிற்கவைத்து, “ஏன்டா எனக்குப் பின்னாடி பொறந்த?” என்று கேட்டபோது, எனக்கு வயது பதினொன்றிருக்கும். அவள் பத்தாவது எழுதியிருந்தாள். அவள் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல், அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்கத்தான் தெரியும் அப்போதெனக்கு.
சும்மா பார்த்துக் கொண்டு நிற்கிற என் கண் முன்னேயே அவள் வளையல்களையெல்லாம் கழற்றி, என் கையில் திணித்து
“போட்டு விடு” என்று கைகளை நீட்டிக் கொண்டு நிற்பாள்.
சின்னச் சின்னதாக ஈரம் ஒட்டியிருக்கிற உடையில் என்னை வந்து எழுப்பி... காபி கொடுப்பாள். குடித்துக் கொண்டிருக்கையில்
பிடுங்கிக் குடிப்பாள்.
குளித்துவிட்டு வருகிற என்னை அருகில் வைத்துத் தலை துவட்டி விடுவாள்.
“ஏண்டி முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கிட்டுப் பொறந்த... பொறுத்துப் பொறந்திருந்தா இந்த வீட்டுக்கே
ராணியாயிருக்கலாமில்ல...” அம்மா அவளிடம் சொல்லும்போதெல்லாம் அவள் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். அது
சிரிப்பில்லை என்பது எனக்குப் புரிய ரெம்ப வருடங்களானது.
அவள் கடைசியாக இங்கு வந்திருந்தபோது, நான் பத்தாவது எழுதியிருந்தேன். எப்போதும் இருக்கிற உற்சாகம் இல்லாதவளாக
இருந்தாள். அந்தச் சிரிப்புச் சத்தம் கேட்கவே முடியவில்லை.
“ஏன்டி உம்முனு இருக்கே வந்ததிலேர்ந்து?” - கேட்டது அம்மா.
“இல்லையே... நால்லாதானே இருக்கேன்...” அவள் சொல்லி முடிப்பதற்குள் அம்மாவை யாரோ கூப்பிட்டார்கள்.
அம்மா போனதும், “நீ கேட்கமாட்டியா, ஏன் உம்முனு இருக்கேனு” என்றாள் என்னைப் பார்த்து.
நான் பேசாமல் அமைதியாக அவள் முகம் பார்த்து நின்றேன்.
“எனக்குக் கல்யாணம் ஆகப் போகுதுடா...’’
அப்போதும் அப்படியே நின்றிருந்தேன்.
“உங்கிட்ட போய்ச் சொன்னேனே” - நெற்றியில் அடித்துக் கொண்டு போனாள்.
அப்புறம் சத்தமற்றவளாக சில நாள் இருந்துவிட்டு, ஊருக்குக் கிளம்பும் அன்று...
நான் முற்றத்தில் காலைத் தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தேன். கொலுசுச் சத்தத்துடன் என்னருகில் வந்து நின்றாள்.
“டேய்... இந்த வீட்டில் உனக்குப் பிடிச்ச இடம் எதுடா?” என்றாள்.
பீரோவின் பக்கத்தில் இருக்கிற இருட்டைக் கைகாட்டினேன்.
என் கையைப் பிடித்து இழுத்துப் போய் அங்கே நிற்க வைத்து... கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று என்னை இழுத்து அணைத்துக் கொண்டாள். தன் இரு கைகளாலும் என் முகத்தை ஏந்தி, “ஏண்டா எனக்குப் பின்னாடி பொறந்த?” கேட்டபோது, என் முகத்தில் சில சொட்டுக் கண்ணீர் விழுந்தது. சட்டென்று விலக்கிவிட்டுப் போய்விட்டாள்.
காலத்தின் போக்கில், அந்த நேர அற்புதம் நெஞ்சில் ஊற ஊற... அதன் அர்த்தம் விளங்க விளங்க... என் முகத்தில் சிந்திவிட்டுப் போன அவளின் கண்ணீர் துளிகளில் கரைந்துகொண்டிருப்பேன் அந்த இடத்தில். அவள் இங்கிருந்து போயிருந்தாலும், எனக்கான
அவளை மட்டும் விட்டுவிட்டுப் போயிருந்தாள் அந்த இருட்டின் வெளிச்சத்தில்.


தபூ சங்கருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமோ இல்லையோ. அவர் கற்பனையில்கூட இப்படி எழுதியிருக்கலாம்.ஆனால் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதெல்லாம் (இதை மட்டும் அடிக்கடி எடுத்துப் படிப்பேன்) எனக்கு என் பழைய நினைவுகள் வந்துவிடும்.

என் அக்கா மகள்.

தூரத்து உறவுதான். ஆனால் பக்கத்து வீடு. அவர் வீட்டுக்கு நான் போகும்போதெல்லாம் என் அம்மாவிடம்
“கொஞ்சம் பெரிய பையனா இருந்தா நானே கட்டிக்கொள்வேன்” என்று கூறுவார்கள்.

என் அம்மாவிற்கு மொத்தம் 5 அண்ணன்கள் 1 தம்பி. சிலநாட்கள் கழித்து 10வது முடித்து மேலும் படிக்க வெளியூர் சென்று ஒருநாள் விடுமுறையில் திரும்பி வரும்போது என் அம்மாவின் தம்பிக்கு (என் மாமா)
திருமணம். எனக்கு அத்தையாக வந்தது ‘என்னைக் கட்டிக்கொள்கிறேன்’ என்று கூறிய என் அக்காவின் மகள்தான். என்னை மாமா என்று கிண்டலுக்காக அழைத்த அவங்க இன்று எனக்கு அத்தை. ஆனால் அப்படியே மாறாமல் இன்னமும் மாமா
என்றே அழைப்பார்கள். எனக்கே சங்கடமாக இருக்கும். என் ஆறு அத்தைகளை விட இவர்கள்தான் என் மீது அதிக அன்புடன்
இருப்பார்கள். மாமா வீட்டிற்கு சென்றால் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார்கள். ஹோட்டல், பார்க், பொருட்காட்சி, சினிமா என்று
எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வேன் என்று பிடிவாதமாக இருப்பார்கள். (அப்போதும் எனக்கு சின்னவயதுதான்). ஒருநாள் எங்க மாமா வீட்டில் ஒரு ஃபங்ஷன். எல்லா மாமா அத்தைகளும் ஒன்றாக இருக்கும் போது பேச்சு அவர்களின்
பிள்ளைகளைப் பற்றி போனது. எங்க வீட்டுலதான் உங்க மகனுக்கு பொண்ணு கட்டனும் என்று எல்லா அத்தையும் போட்டி
போட்டுக் கொண்டு சொன்னபோது, என் அக்கா மகள் என் அத்தை என்னிடம் “இங்க பாரு... என் மகளத்தான் நீ கட்டிக்கனும்.
இல்லை நடக்குறதே வேற” என்று ரெம்பவே சீரியஸாகக் கூறினார்கள். பின் பேச்சு வேறு பக்கம் சென்று எல்லோரும் இந்த
டாபிக்கையே மறந்து விட்ட நிலையிலும் எல்லோரும் சென்ற பின் என் அக்கா மகள் என்னிடமும் என் அம்மாவிடமும்
கூறினார்கள். என் மகளை நீ தான் கட்டிக்கனும். அதற்கு எம் அம்மா அவனுக்கே 17வயது
ஆகிவிட்டது இனிமேல் நீ பிள்ளை பெற்று அவளை கட்டிக்கவா? இதெல்லாம் நடக்குற காரியமா? சும்மா பேச்சுக்கு கிண்டல்
பண்ணு சரி. ஆனால் நீ ஏன் இவ்வளவு சீரியஸாகப் பேசுற

ஒரு நாள் லீவில் வந்திருக்கும் போது என் அம்மா சொன்னார்கள். மாமிக்கு கர்ப்பப்பையிலே கேன்சராம். ஆபரேஷன்
செய்தால்தான் பிழைக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். ஆனால் இது மாமிக்கு தெரியாது என்று சொன்னார்கள். அத்தையைப் பார்க்க மாமா வீட்டிற்கு சென்றபோது ஹாஸ்பிடல் சென்று கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் என் மாமி
கூறினார். “நான் கர்ப்பமாயிருக்கேன். எனக்கு கண்டிப்பாக பொம்பளப் பிள்ளைதான் பிறக்கும். நீதான் கட்டிக்கனும்.” என்று
சொன்னபோது எனக்கு வந்த அழுகையை அடக்கிக் கொள்ள ரெம்பவே கஷ்டப்பட்டேன். கடைசிநேரம் வரை கர்ப்பப்பையை எடுக்க சம்மதிக்காமலேயே இறந்து விட்டார். என் நினைவில் நின்றவர்களில் முதலிடம் அவருக்கு மட்டுமே என்றும்.

Friday, May 9, 2008

+2 தேர்வு முடிவுகள் 2008 ஒரு பார்வை

தேர்வு முடிவுகள் பற்றி விரிவான பதிவு 10 மணிக்கு பதியப்படும் எதிர்பாருங்கள் என்று அறிவிப்பு செய்து விட்டேன்.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு.
ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டேன். பின்புதான் தெரிந்தது இது எவ்வளவு கஷ்டம் என்று.
முன்பெல்லாம் 10, 12 ன் தேர்வு முடிவுகளை அறிவதற்காக ரெம்பவே கஷ்டப்பட்டிருக்கின்றோம்.
மாலை பேப்பரில்தான் முதலில் முடிவுகள் வெளியாகும்.
அன்றைய மாலை மலர் (அ) மாலை முரசு அமோக விற்பனையாகும்.
12, 1 மணிக்கெல்லாம் கடைக்காரரிடம் நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள் அண்ணே பேப்பர் வந்திருச்சா? அண்ணே பேப்பர் வந்திருச்சா? என்று.
அதில் முடிவுகளைப் பார்த்தாலும் தேறாத மாணவர்கள் ஏதாவது பிரிண்டிங் மிஸ்டேக் இருந்திருக்கும் நாளை காலை பத்திரிகையில் இறுதிமுடிவு வரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் சிலர்.
இன்டர்நெட் வந்த பிறகு எல்லாமும் ரெம்பவே சுலபமாகி விட்டது.
அது சரி இந்த வருட ரிசல்ட் பற்றி சில குறிப்புகள்.
கடந்த வருடங்களைப் போலல்லாமல் இந்த வருடம் வெற்றிபெற்றவர்களின் சதவிகிதம் அதிகரி்த்துள்ளது.
முதல் இரண்டு இடத்தைப் பெற்றவர்கள் ஆண்கள் - பெண்களும்தான்.
1182
1181

முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்கள் தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்தவர்கள் என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

கணிதவியல் கவிழ்த்து விட்டது. நிறைய பேர் அதில்தான் தோல்வியுற்றுள்ளனர்.

தோல்வியுற்றவர்கள் ஒருமாதத்திற்குள் மறுதேர்வு எழுதலாம்.
இது போன்ற வசதி முன்பு இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு வருடமே வேஸ்ட்டாகும் நிலை மிக வருத்தத்திற்கு உரியது.
கல்வித்துறை இதுபோன்ற நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அப்படியே கல்விமுறையையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவி்ட்டால் நல்லது.

சிறு வயதிலிருந்தே நீ என்னவாகப் போற? என்று கேட்டு கேட்டு (தன் கருத்தைத் தினித்து, சுய விருப்பத்தைத் தொலைத்த) குழந்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் பெற்றோர்கள்.
எங்க மாமா மகன் ஒருத்தன்ட நீ இன்ஜினியராக ஆகனும் என்று கூறியே வளர்த்தனர். அவன் 10வது வந்ததும் “அசோகர் மரம் நட்டதும், கஜினி முஹம்மது படையெடு்த்ததும் படிச்சா எப்படி இன்ஜினியர் ஆக முடியும்”னு கேட்டான்.
நல்ல கேள்விதான்.

இந்த வரலாறையெல்லாம் 10வது வரை படிச்சுக் கொடுக்கனுமா?

அப்புறம்................................

+2 என்பது பள்ளி இறுதிதானே தவிர கல்வி இறுதியல்ல.
இதை நிறைய பேர் தவறாக விளங்கி படிப்பை நிறுத்தி விடுகின்றார்கள்.
குறிப்பாக பெண்களுக்கு முதலில் 8வது வகுப்போடு நிறுத்தினார்கள். பின் 10வது வகுப்புடன் நிறுத்தினார்கள். தற்போது +2 உடன் நிறுத்தி விடுகின்றனர்.
கல்விக்கு எந்த வரம்பும் இன்றி விருப்பப்படி படிக்க வைக்க வேண்டும். படிக்கும் ஆர்வத்தையும் விருப்பத்தையும் தூண்ட வேண்டும்.

அடுத்த முக்கியமான விஷயம், கற்றல் என்பது இன்று வேலைசெய்வதற்கும் சம்பாதிப்பதற்கும் என்று ஆகி விட்டது. கற்பித்தல் என்பது வியாபாரமாகிவிட்டது.
அறியவேண்டும் என்பதற்காக கற்க வேண்டும். ஆராய வேண்டும். அப்படிப்பட்ட தலைமுறையை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் இந்தக் கல்வியாண்டிலிருந்து உறுதிஎடுப்போம்.
என்றும் மனதோடு மனதாய்...
உங்கள் புகழன்

பிளஸ் டூ ரிசல்ட் - வாழ்த்துகள்

தேர்வில் பங்கேற்று
வெற்றிபெற்ற அனைவருக்கும்
வாழ்த்துகள்


மனதோடு மனதாய்
வாழ்த்துவது
உங்கள் புகழன்
(குறிப்பு: தேர்வு முடிவுகள் பற்றி விரிவான பதிவு சென்னை நேரப்படி இன்று இரவு 10. மணிக்கு.... காத்திருங்கள்)

Wednesday, May 7, 2008

என்ன பதில்?

மலராத மொட்டே -
நீ பூக்க மாட்டாயா?

கசந்துவிட்ட கனியே -
நீ இனிக்க மாட்டாயா?

வளராத செடியே -
நீ உயரமாட்டாயா?

அணையாத விளக்கே -
நீ ஒளிரமாட்டாயா?

வாய் மூடிய குயிலே -
நீ கூவ மாட்டாயா?

வலுவிழந்த காற்றே -
நீ வீசமாட்டாயா?

இறங்காத மழையே -
நீ பொழியமாட்டாயா?

தளர்ந்து விட்ட அறிவே -
நீ உணர மாட்டாயா?


என்ன ஆயிற்று உங்களுக்கு?
காரணமென்ன தடைகளுக்கு?

நீங்களும் இன்று வேலை நிறுத்தமா?!

உங்கள் இயக்கம் எங்கே?
அகிலம் இருளுகிறது இங்கே!

பதில் ஒன்றைத் தாருங்கள் - இல்லையேல்
அழிந்து சாகுங்கள்!

தொடுத்த வினாக்களுக்கு
கிடைத்த விடை -
ஒரே விடை -

“மனிதனே இன்று அழிவுப் பாதையில்...
நாங்கள் மட்டும் ஏன் நேர் பாதையில்.....?”

Tuesday, April 22, 2008

நீ எந்த ஊர் ஆப்பிள்?


பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்களைக் காட்டி
‘இது எந்த ஊர் ஆப்பி்ள்’
‘அது எந்த ஊர் ஆப்பிள்’ என்று
கேட்டுக் கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம்
ஒன்றுகூடி உன்னிடம் கேட்டன
‘நீ எந்த ஊர் ஆப்பிள்?’


- தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை புத்தகத்திலிருந்து

Thursday, April 17, 2008

கண் தெரியாத இருவர் எப்படிப் பேசுவார்கள்?

தகவல் தொடர்பு என்பது இன்று எவ்வளவோ முன்னேறி விட்ட காலம்.

புறா காலில் கடிதத்தை கட்டிவிட்ட காலம் ஒன்று இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி போஸ்ட் ஆபீஸ், தந்தி, தொலைபேசி, பேஜர், செல், ஈமெயில், வாய்ஸ் சாட்டிங், வீடியோ சாட்டிங் என தகவல் தொடர்பு இன்று எங்கோ போய் விட்டது.

ஆண்டிப்பட்டியில் உட்கார்ந்து கொண்டு ஆஸ்திரேலியாவிலிருக்கும் அண்ணனுடன் ஒருவன் நேருக்கு நேராகவே பார்த்துப் பேச முடியும்.

இவ்வளவு முன்னேறியதாலோ என்னவோ இன்று உள்ள தலைமுறையிடம் தகவல் தொடர்பில் பல communication Laps.

நவீன வசதிகள் இல்லாத இடங்களுக்கு சிலநேரங்களில் சிலர் மூலம் தகவல்களைச் சொல்லி அனுப்பும் போது அது அப்படியே நேர்மாறாக எப்படியெப்படியெல்லாமோ மாறி .... அப்பப்பா அதை நினைக்கையில் ரெம்பவே வருத்தமாக இருக்கிறது.

இப்படி மாறிச் சென்ற ஒரு சம்பவம் என் வாழ்க்கையிலும்...

என்னுடைய அப்பாவுடைய அண்ணன் (பெரியப்பா) இறந்து விட்டார்.
அவருடைய மகளுடைய மகன் கடையநல்லூர் அருகில் ஒரு கிராமத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு இந்த மரணச் செய்தியை அறிவித்து அவரை உடனே எங்கள் ஊருக்கு வரச் சொல்ல வேண்டும்.

அந்த ஏரியா நாட் ரீச்சபிளி்ல் உள்ளது போல. எங்கள் அவசரம் தெரியாமல் நாங்கள் கால் பண்ணும் ஒவ்வொரு தடவையும் ஒரு லேடி எடுத்து ஏதேதோ ஆங்கிலத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.

எப்படியாவது இன்னும் ஒரு மணி நேரத்தில் கூறினால்தான் அவர் உடனே புறப்பட்டு இறுதிச் சடங்குகள் முடியும் முன் எங்கள் ஊருக்கு வர முடியும் என்பதால் அருகில் உள்ள தென்காசியில் உள்ள எனது நண்பர் ஒருவரிடம் (அங்கு எனக்கு நட்பு வட்டம் அதிகம்) சொல்லி அவரிடம் செய்தியைத் தெரிவிக்கச் சொன்னோம்.

அவர் அவருடைய நண்பரிடம் சொல்லி, அவர் இன்னொரு நண்பரிடம் கூறி, அவர் இன்னொரு நண்பரிடம் கூறி (இந்த மூன்றாமவரும் எனக்கு நண்பர்தான்) செய்தி சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் என் அக்கா மகன் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார்.(அவர் ஏற்கனவே ஏதேச்சையாக புறப்பட்டு விட்டதால்)

அதற்குள் எனக்கு போன் அந்த மூன்றாமவரிடமிருந்து...

“என்ன உங்க அப்பா இறந்துட்டாங்களாமே? நல்லாத்தானே இருந்தாங்க”

எனக்கு ஒரே குழப்பம். அவரிடம் விஷயத்தை கூறி முடிப்பதற்குள் லைனில் இன்னொரு போன். இப்படி போனுக்கு மேல் போன்.

திருநெல்வேலியிலிருந்து ஒரு நண்பன் எங்கள் ஊருக்கே வந்து விட்டான்.

“அடப்பாவி ஒரு போன் பண்ணிவிட்டு வந்திருக்கக் கூடாதா?“ என்றதற்கு
“அவசரத்தில் என்ன பண்ணணும்னே தெரியல அதான் கிளம்பி வந்துட்டேன்” என்று சொன்னான்.

இப்படி எங்கேயோ ஒரு சின்ன கம்யூனிகேஷன் லேப்ஸ் நடந்து பல பிரச்சினைகள் விளைந்து விடுகிறது.

என் பிரச்சினை ஒன்றும் அவ்வளவு பெரியதாக இல்லை.

சில நேரம் இதுபோன்ற தகவல் தொடர்புப் பிழைகள் மிகப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விடும்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் தகவல் தொடர்புக்கு உண்டான முக்கிய அம்சங்களை நாம் சரியாகக் கடைப்பிடிப்பதி்ல்லை என்பது தான்.

தகவல் தொடர்பில் மிகவும் முக்கியமானது “சொல்லப்படும் விஷயங்களை முதலில் நன்றாக கவனிப்பது; அப்ஸர்வ் செய்வதுதான்.”

எவ்வளவு அவசரமாக இருந்தாலும் சரியாக கவனிக்காமல், அதனைக் கிரகிக்காமல் இருந்தால் அதனை வெளிப்படுத்தும் போது தவறு ஏற்படவே செய்யும். பொதுவாக நன்கு அப்ஸர்வ் செய்தாலே அவுட்புட்டில் 100% சரியாக வரும் என்று சொல்ல முடியாது.
அப்படியிருக்க inputலிலேயே மிஸ்டேக் என்றால்?

என் நண்பன் ஒருவனிடம் “டேய் பெரியமேடு அருகில் உள்ள ‘சூளை’யில் நடராஜா தியேட்டர் முன்பு வந்து நில். அரை மணி நேரத்தில் நான் அங்கு வந்து விடுகிறேன் என்று போனில் கூறினேன்.

“அரை மணி நேரம் கழித்து போன் வந்தது. டேய் இங்கே நடராஜா தியேட்டரே இல்லையே” என்றான்.
“ நீ எங்கே நிற்கிறாய் என்றேன் நான் சூளைமேட்டில்தான் இருக்கிறேன்.” என்றான்.
“நீ ஏன் சூளை மேட்டிற்கு போன?” என்றேன்.

“நீ தானே சொன்னாய் சூளைமேட்டிலுள்ள பெரிய பண்ணை மளிகை அருகில் நடராஜா தியேட்டர் முன்பு வா என்று” அவன் சொன்னான்

என்ன செய்வது டிரைவிங்கில் பேசும் போது பெரிய மேட்டில் உள்ள சூளை என்பது அவனுக்கு சூளைமேட்டிலுள்ள ஏதோ பெரிய என்று விளங்கி சூளைமேடு சென்று பெரிய பண்ணை மளிகை கண்ணில் படவும் அங்கே நடராஜா தியேட்டரைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறான்.

இப்படித்தான் என்னோட டீம்ல இந்தக் கம்யூனிகேஷன் ஸ்கில் பற்றிய விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது இது சம்பந்தமாக பல விஷயங்களைக் கூறி விட்டு நான் கேட்டேன்

“தகவல் தொடர்பு என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இரண்டு நபர்கள் பேசிக் கொள்வது கூட தகவல் தொடர்பு தானே.
உதாரணமாக நாம் எல்லோரும் சாதாரண சராசரி மனிதர்கள் எப்படிப் பேசுவோம்?”
(எல்லோரும் சாதாரணமாகத்தான் பேசுவோம் என்று முழித்துக் கொண்டிருந்தனர்.)

“சரி அப்ப கண் தெரியாத இருவர் சந்தித்துக் கொள்கின்றனர் அவர்கள் எப்படிப் பேசுவார்கள்? என்று கேட்டேன்.

உடனே எல்லோரும் (அதிகமானோர்) “சைகையால் பேசிக் கொள்வார்கள்” என்றனர்.
“ஏங்க எப்படிங்க சைகையால் பேசினால் எப்படி அவர்களுக்குத் தெரியும் அவர்களுக்குத்தான் கண் தெரியாதே என்றேன்.”
“அதான எப்படி தெரியும்” என்று சிறிது நேரம் யோசித்து விட்டு “அட அவங்களும் வாயாலதான் பேசுவாங்க” என்று கூறினர்.

இப்படித்தாங்க இன்றைய தலைமுறை இருக்கு.

அதனால பதிவுகளைப் படிக்கும் போது நன்றாகப் படித்து பிறகு கமென்ட்ஸ் கொடுக்கவும்.
இல்லையெனில் கண் தெரியாத இருவர் சைகையால் பேசியது போன்றுதான் இருக்கும்.

என்றும் மனதோடு மனதாய் உங்கள் புகழன்

Sunday, April 6, 2008

இழக்காமல் இழந்தது...

விதவிதமான மொபைல் வச்கிக்கிறதுக்கு எனக்கு ஆசையே கிடையாது. ஆனாலும் சைனா செட் புதிதாக வந்திருந்த சமயம் அது.
என் ஃபிரண்ட் தமீம் ஒரு செட் வச்சிருந்தான். செட் பெயர் NOKlA (இதை நீங்க எப்படி வாசிப்பீங்கன்னு பின்னூட்டத்துல சொல்லவும்)
அதை எடுத்து அடிக்கடி யூஸ் பண்ணுவேன். அதுல உள்ள வீடியோக்களை போட்டுப் போட்டு பார்த்துக்கிட்டு இருப்பேன்.
இதைப் பார்த்துட்டு டேய் கொஞ்ச நாளைக்கு நீயே இதை வெச்சுக்கோடான்னு எங்கிட்டயே கொடுத்துட்டு என்னோட ஓல்டு நோக்கியா 3310வை எடுத்துக்கிட்டான்.
பெருந்தன்மையா திருப்பிக் கேட்டகவே இல்லை.
அன்னைக்கு காலேஜுக்கு அதைக் கொண்டு போய் ஒரே ரவுசுதான்.
கிளாஸ் டைம் தவிர மத்த டைத்துல என்னேரமும் அதைக் கையிலயே வைச்சுக்கிட்டு திரிஞ்சேன்.
எங்கிட்ட உள்ள பெரிய கெட்ட பழக்கம் (சத்தியமா நம்புங்க எனக்கு தண்ணியடிக்கிறது, தம் அடிக்கிறது போன்ற பழக்கங்கள் எல்லாம் கிடையவே கிடையாது) கையில உள்ளதை பேசிக்கிட்டு இருக்கும் போது டேபிள் மேலேயே வைச்சிட்டுப் போயிருவேன். குறிப்பா மொபைல்.
எங்கப்பா அடிக்கடி என்னைத் திட்டுவார். மொபைலை டேபிள் மேலே வைக்காதே. எடுத்து பாக்கெட்டில் வை. எத்தனை தடவை சொன்னாலும் கேட்காமல் அப்படியே டேபிள் மேலேயே வைக்கிற பழக்கத்தை மட்டும் மாத்த முடியலை இன்னைக்கு வரைக்கும்.
அன்னைக்கும் இப்படித்தான் கையில வெச்சுக்கிட்டே அப்பல்லோல மருந்து வாங்கப் போனேன்.அப்படியே மொபைல மறந்து வைச்சிட்டுப் போயிட்டேன்.கடையை விட்டு ஒரு இருபதடி நடந்ததும்தான் மொபைலைக் காணோம்னு மண்டைல உதைத்தது.
வேகவேகமா திரும்பி அப்பல்லோக்குள்ள போனதும் அங்க ஒரு ‘குடிமகன்’ கையில என் மொபைல். சார் இந்தாங்க சார் உங்க மொபைல்னு எங்கிட்ட குடுத்தான்.... ஆனா குடுக்கல. ஙஅ மொபைலை மறந்து விட்டுட்டுப் போனதுக்கு ஃபைன் குடுங்க. நூறு ரூபாய் ஃபைன். என்ன சார் நான் சொல்றது சரிதான. இத நான் அப்படியே உங்கள்ட சொல்லாம இருந்திருந்தா உங்களுக்கு எவ்வளவு நஷ்டம்? பத்தாயிரம் ரூபாய் மொபைல விட்டுட்டுப் போறீங்கள்ள இத எடுத்துக் கொடுத்ததிருக்கேன். ஒரு நூறு ரூபாய் கொடுங்க நான் மொபைல தர்ரேன். (உண்மையிலேயே அந்த மொபைலோட ரேட்டு என்னன்னு எனக்கும் அப்ப தெரியாது. நானும் ரெம்ப அதிகமான விலைதான்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். பின்னாடிதான் அது 3000 ன்னு தெரிஞ்சது) அவர் என்னிடம் விளையாட ஆரம்பிச்சதும் எனக்கு என்ன பண்ணுறதுன்னே புரியல. பேசாம நூறு ரூபாயயைக் கொடுத்துரலாம்னு நெனச்சேன்.உள்ளுக்குள்ள அழுதாலும் வெளியில சிரிச்சிக்கிட்டே நின்னேன். தேறாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு சரி எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுங்கன்னு சொன்னார். சரி வாங்க வாங்கித் தர்ரேன்னு பக்க்ததுல உள்ள பேக்கிரிக்கு கூட்டிட்டுப் போனேன்.
என்ன வேணும்னு கேட்டதுக்கு நான் எதுவும் சாப்பிடல எனக்கு பப்ஸ் வாங்கித்தாங்க என் கூட 4 பேர் இருக்காங்க அவங்களுக்கும் சேர்த்து வாங்கித்தாங்கன்னு கேட்டார். சரி பத்தாயிரம் ரூபாய் மொபைலுக்கு ஒரு பத்து இருபது ரூபாய் செலவு பண்ணுறதுல தப்பே இல்லைன்னு வாங்கிக் கொடுத்தேன்.
இதெல்லாம் எனக்குப் பெரிசா தெரியல. ஆனா மொபைல அவரு திருப்பிக் கொடுத்ததுக்கு அப்புறமும் ஒரு அரை மணி நேரம் எங்கிட்ட வம்படியா பேசி அவராவே நன்றிய வாங்கிக்கிட்டாரு. ‘என்ன சார் நான் உங்கள்ட பப்ஸ் வாங்கிக் கேட்டதில தப்பில்லதான’ இதையே கிட்டத்தட்ட ஒரு நூறு தடவை சொல்லி என்னைய வெறுப்பேத்திட்டாரு. நம்ம குடிமகன்களோட பேச்சு எப்படி இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன். அன்னைக்குதான் முதல் தடவையா பார்த்தேன். இன்னும் அவரு அறுத்தது நிறைய. பேசாம மொபைல நீயே எடுத்துக்கிட்டு போயிருக்கலாம்னு சொல்லனும்னு தோனுச்சு
அதையெல்லாம் சொல்லி உங்களை அறுக்க வேணாம்னு இதோட நிறுத்திக்கிறேன்.
அப்புறம் மறக்காம பின்னூட்டத்துல நான் இழக்கமால் இழந்த மொலைல் பெயர் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா அறிவாளிங்களா!

இப்படிக்கு உங்கள் புகழன்

Friday, April 4, 2008

இன்பத்தைத் தேடி...

அவர் ஒரு கம்பெனிக்கு மானேஜர். அவருக்கு அழகான ஒரு பெண் பி.ஏ.வாக வேலைக்குச் சேர்ந்தாள். அந்தப் பெண்ணுக்குத் தன்னிடம் ஒரு மயக்கம் இருப்பதாக மானேஜர் நினைக்கிறார். அது உண்மையாக இருக்கக்கூடாதா என்று அவர் உளமாற விரும்புகிறார்.
தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி ஒருநாள் மானேஜருக்கு அந்தப் பெண் அழைப்பு விடுக்க... இப்போது மானேஜருக்குச் சந்தேகமே இல்லை. “இந்தப் பெண் என்னைப் பார்த்து மயங்கிவிட்டாள்....’ என்று இவர் உறுதியான நம்பிக்கையோடு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அன்றிரவே விருந்து சாப்பிடப் போகிறார்.
அந்தப் பெண்ணின் வீட்டில் யாருமே இல்லை. டைனிங் டேபிளில் மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிக்கிறது. அந்தப் பெண் தன் மீது மோகம் கொண்டிருக்கிறாள் என்பது நூறு சதவிகிதம் உறுதி என்று தனக்குத்தானே மீண்டும் ஊர்ஜிதம் செய்து கொள்கிறார். இருவரும் விருந்து சாப்பிட உட்காருகிறார்கள். இரவு 11.30 மணி ஆகிறது. மானேஜரின் சந்தேகத்துக்குத் துளியும் இடமில்லை. ‘இவள் இன்று எனக்குத் தன்னையே கொடுக்கப் போகிறாள்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.
நள்ளிரவு 12.00 மணி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த அறைக்குப் போகலாம் என்று அந்தப் பெண் மானேஜரை அழைக்க... தான் அணிந்திருந்த கோட்டையும் சட்டையும் கழற்றிவிட்டு மானேஜர், அந்தப் பெண்ணின் பின்னே போகிறார். அந்த அறை இருட்டாக இருக்கிறது. ‘சரி, அவள் விளக்கைப் போடுவதற்கு முன்பே தயாராக இருக்கலாமே...’ என்று மிச்சமிருந்த அனைத்து உடைகளையும் மானேஜர் கழற்றிவிடுகிறார்.
அப்போது சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு அடிக்க... இருட்டைக் கிழித்துக் கொண்டு அந்த அறையில் விளக்குகள் பளிச்சென்று உயிர் பெருகின்றன. அந்த அறை முழுவதும் இவரின் ஆபீஸில் பணிபுரியும் எல்லா ஊழியர்களும் ‘ஹேப்பி பர்த்டே’ என்று கைதட்டிப் பாட்டுப் பாட ஆரம்பிக்கிறார்கள். மானேஜரோ, பர்த்டே என்று நிஜமாகவே பிறந்த மேனியுடன் அசடு வழிய நின்றிருக்கிறார்.
தனது பிறந்த நாளையே மறந்து அந்தப் பெண்ணின் பின்னால் சென்ற அந்த மானேஜரைப் போலத்தான் நாமும் பல சமயம் இன்பத்தை நமக்கு வெளியிலேயே தேடிக் கொண்டிருக்கிறோம்.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற நூலில் படித்தது.
இப்படிக்கு உங்கள் புகழன்

Saturday, March 15, 2008

முரண்

உலகம்
விசித்திரமானது!
எப்போதும் அது
முரணாகவே சிந்திக்கிறது!
நீ கல்லை எத்தியதும்
கல் உன்னைத்
தட்டிவிட்டது என்கிறார்கள்!
நீ முள்ளை மிதித்தாய்
முள் உன்னைக்
குத்தியது எனக் கூறுகிறார்கள்!
அடியே!
இப்போதும் என்னை
விரும்பியது நீதான்!
உன் மனதைக் கெடுத்து விட்டேன்
நான் என்கிறார்கள்!
பழி என் மீது என்றாலும்
வலி எப்போதும்
உனக்கு மட்டும்
என்பதால் தானோ...?
என்றும் அன்புடன்
உங்கள் புகழன்

தாமரை கவிதைகள்

ஒரு கவிப்பொருளே
கவி எழுதுகிறது
தாமரையைப் எழுதாத
கவிஞர்கள் இல்லை
இன்று
(கவிஞர்) தாமைரை எழுதாத
கவிப் பொருள்கள்
இல்லை
“ஏணிப்படி - ஏன் இப்படி?” முதல்
எல்லாமே புரியும் விதத்தில்
அமைந்துள்ளது.
தமிழில் எழுதும் பெண் கவிஞர்களில்
பெண்ணுரிமை பற்றியும் பெண்ணியம் பற்றியும்
தெளிந்த சிந்தையுடன் படிப்பதற்கு விகாரமின்றி எழுதுவது
கவிஞர் தாமரை மட்டுமே.
முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் ஏதுமின்றி
கலாச்சார கட்டுக்குள் பெண்ணியம் பேச ‘சல்மா’, ‘குட்டி ரேவதி’ போன்றவர்களுக்கு ஏன் இயலவில்லை?
சமூக அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக சமூகத்தையே நாறடிக்கும் செயல்களை எப்பொழுதுதான் இவர்கள் விடப்போகிறார்களோ?
பெண்ணியம் வேண்டும்!
அது பெண்களைக் கேவலப்படுத்தும் விதத்தில் அமையக் கூடாது என்பதுதான் இன்று பெண்களே எதிர்பார்க்கும் சிந்தனை.

முரண் சிந்தனைகள்

தான்தோன்றித்தனமாக கைக்கு வந்ததையெல்லாம் தட்டி விட்டுப் போக வேண்டும் என்ற வரைமுறையற்ற வரையறைகளில் சிக்கி விடாமல் உருப்படியாக எழுத வேண்டும் என்றுதான் இந்தத் தளத்தைத் துவங்கினேன்.
வலைதளத்திலிருந்து எடுத்து காப்பியடித்து எழுதி அதை விவாதமாக்கிக் கொண்டுள்ளனர் பலர்.
இன்று பல வலைதளத்தில் நுழைந்து வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஏதோ ஒன்றைத் தேடப்போக எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
இவற்றை வாசிக்கும்போது எனக்கு என் சீனியர் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.
“டேய், ஃபேமஸ் ஆனனும்னா கண்டதையும் எழுதனும்டா. எல்லாரும் சொல்லுற விஷயத்தை நீ எப்படி மறுத்துக் கருத்துச் சொல்லுறங்குறதப் பொறுத்துத்தான் உன் பிரபல்யம் ஊர்ஜிதமாகுது. நமக்குன்னு ஒரு தளத்தை வாசிப்பவர்கள் மத்தியில கிரியேட் பண்ணிட்டு, பிறகுதான் நம்ம கருத்தை மக்கள் மத்தியில வைக்க வரணும். அவர்கள் நமக்கு வாசகர்களாகத்தான் இருக்கனும்னு இல்லை. விமர்சணம் பண்ணுறவங்களாகக்கூட இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் விமர்சணம் பண்ணுறவங்கள அதிகமா இருந்தாத்தான் நீ சீக்கிரமே ஃபேமஸ் ஆக முடியும். அதுக்கப்புறம் நீ நினைக்கிற கருத்தை சொல்லும்போது அது மக்கள்ட்ட சீக்கிரமே ரீச் ஆகும். இது ஒண்ணும் நாம கொண்டிருக்கிற கொள்கைக்கு மாற்றமாகவோ முரணாகவோ செய்யிறது இல்லை. நல்லா யோசிச்சுப்பாரு தெரியும்.” என்று சொன்னார்.
இதுவும் ஒரு வகையில் சரியாத்தான் பட்டது.
உண்மைய சொல்லப்போனா இப்படியான முரண் சிந்தனைகள் எனக்கு ரெம்பப் பிடிக்கும். எதையுமே முரணாகவே சிந்தித்து கருத்துக் கூறுவதே என் வழக்கம்.ஃபவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் என்ற புத்தகத்தைப் படித்ததும் எனக்குள்ள ஒரு ஆசை நாமலும் இங்கிலீஸ்ல தெறமைய வளர்த்துக்கிட்டு எப்படியாது ஒரு புக் எழுதனும் “ஃபவர் ஆஃப் நெக்கட்டிவ் திங்கிங்ஸ்” ன்னு.ஆனா இன்னைக்கு வரை ஆங்கில அறிவை வளர்க்க ஒரு சின்ன துரும்பைக் கூட அசைச்சதில்லை.சில நேரங்களில் இந்த முரண் சிந்தனை என்னை ரெம்பவே அதிகம் தெரிய வச்சிடுச்சி.
ஒருத்தர் சொல்லுற கருத்து சரியாவே இருந்தாலும் அதை முரணா சிந்திச்சிதான் ஏத்துக்குவேன்.
இப்படித்தான் அந்த சீனியர் சொன்னதையும் முரணாவே சிந்திச்சேன்.
ஏன் ஒழுங்காவே எழுதி ஃபேமஸ் ஆனவங்க யாருமே இல்லையான்னு அவர்கிட்ட திருப்பிக்கேட்டேன்.
இப்படியாக பல விவாதங்கள் எங்களுக்குள் நடந்தது.
இது இருக்கட்டும். இப்பல்லாம் அதிகமான நேரம் நெட்டில் உட்கார நேரம் கிடைக்கிறது. நிறைய படிக்க முடியுது. அதனால நிறைய எழுதனும் தோனுது. ஆனாலும் அது எல்லாத்தையும் முரண் சிந்தனையிலேயே எழுதினா என்னன்னும் தோனுது. இனி வரும் பதிவுகள் கூட (எல்லாமே இல்லாவிட்டாலும்) ஒரு சிலதாவது என் முரண் சிந்தனையோட பதியப்படும்.
எதிர்க்கருத்துக்களை எதிர்பார்த்து
என்றும் உங்கள் புகழன்

முதல் மாதச் சம்பளம்

“அம்மா... அம்மா...” கூப்பிட்டுக் கொண்டே ஒயிட் அன் ஒயிட் யூனிபார்மிலேயே வீட்டிற்குள் நுழைந்தான் கலைச்செல்வன். அம்மா அடுப்படியிலிருந்து ஹாலுக்கு வர, அவர்களுடைய கையில் ஜவுளிக்கடை கவரைத் திணித்தான்.
“என்னடா இது?”
“என் முதல் மாதச் சம்பளத்தின் சின்ன பரிசும்மா உனக்கு” சொல்லிவிட்டு தங்கையின் பக்கம் திரும்பினான்.
“யாழினி, இந்தா... நீ படிக்கிறியோ இல்லையோ தலைக்கு வெச்சு தூங்குற அளவுள பெரிய புத்தகம் உனக்கு, சுஜாதாவோட சிறுகதைத் தொகுப்பு...”


“ரொம்ப தேங்ஸ் அண்ணா...”


“ராஜா இந்தாடா... உனக்கு எஃப்.எம். ரேடியோ. சூரியன் எஃப்.எம்.மோட ‘சின்னதம்பி... பெரிய தம்பி...’ புரோகிராம் கேட்க காலையிலேயே நீ டீக்கடை வாசல்ல போய் இனி உட்காரத் தேவையில்லை.”


“எப்படி அண்ணா? இப்படி பாசமழை பொழியிறே...’’


நன்றாகப் படித்து, கடின முயற்சிக்குப் பின் ரயில்வேயில் கலைச் செல்வனுக்கு வேலை கிடைத்தது. எலெக்ட்ரிக் ட்ரெயின் டிரைவராக வேலை.
“அப்பா எங்கம்மா?” ஆர்வமுடன் கேட்டாடன்.
“கண்ணாடி மாத்துறதுக்கு போயிருக்காங்க, ரொம்ப நாளாச்சுல்ல... அப்புறம் யாரோ அவரோட நண்பர் இறந்துட்டாங்களாம், அங்கேயும் போயிட்டுத்தான் வருவாரு...’’
இரவு மணி பத்து. இன்னும் அப்பா வரவி்ல்லை.
‘முதல் நாள் வேலைக்குக் கிளம்பும் போது நாள், நட்சத்திரம், நல்லநேரம், நல்ல சகுணம் அது இதுன்னு தாமதப்படுத்தினாரு... இப்ப என்னடான்னா முதல் மாதச் சம்பளத்தை வாங்குவதற்கும் தாமதம்.கோபமான சிந்தனையுடன் சம்பளக் கவரை கையில் வைத்துக் கொண்டு ஹாலின் குறுக்கே அங்கும் இங்கும் உலவினான்.
அப்பா உள்ளே நுழைந்தார். ஆர்வமுடன் கவரை நீட்டினான்.
“இந்தாங்கப்பா என் முதல் மாதச் சம்பளம்”
“வெரிகுட்... இரு நான் குளிச்சிட்டு வந்துடறேன். சாவு வீட்டுக்குப் போயிட்டு வரேன்ல...”
சுளீரென கோபம் வந்தது கலைச் செல்வனுக்கு. அப்பாவை இடையில் மறித்து,
“பிடிங்கப்பா இதை” கவரைக் கையில் திணித்தான்.
“எப்ப பாரு இப்படித்தான்... கண்ணாடிய மாத்தினா மட்டும் போதாதுப்பா கண்ணையும் சேர்த்து மாத்துங்க.
இதுவரைக்கும் பதினேழு பேர் நான் ஓட்டுற ட்ரெயின்ல குறுக்கே விழுந்து செத்திருக்காங்க. அதுக்கும் சேர்த்துத்தான் இந்தச் சம்பளம்.
கலைச் செல்வனின் வார்த்தையில் சமாதியானது அவனது அப்பா பார்த்த சகுணங்களும், சாங்கியங்களும்.
ஆக்கம்: மால்கம்
பதிவு: உங்கள் புகழன்

Wednesday, March 12, 2008

காளியம்மா பாட்டி...

ஊரே கோலாகலமாக இருந்தது. தெரு முழுவதும் விதம் விதமாகப் பாட்டு... வெடிச்சப்தம்...காளியம்மா பாட்டிக்கு இனம்புரியத மகிழ்ச்சி.
சுருக்கம் விழுந்த கருப்பு தோல், ஓலைக் குடிசையில் ஒரு மூளையில் படுத்துக் கிடக்கும் காளியம்மாவுக்கு காது அவ்வளவாகக் கேட்காது. கண் பார்வையும் மங்கி விட்டது.
“வேணாங்க, எனக்கு சொன்னதே போதும். பாட்டி என்ன வரவாப் போறாங்க?” காளியம்மாவின் பேத்தி வஸந்தி அவரைத் தடுத்தாள். கதர் வேட்டி சட்டையில், சம்பிரதாயத்துக்காக தோளில் துண்டைத் தொங்கவிட்டவராக கும்பலோட வந்தவர், “இல்லம்மா... அம்மாவ கூப்பிடாம எப்படி?... அவங்கள அழைச்சிட்டு போறதுக்கு ஏற்பாடு பன்றேம்மா...” ரொம்பவும் குழைவாகப் பேசினார்.“அம்மா... எப்படிம்மா இருக்கீங்க...” அவர் கரிசனையுடன் விசாரிக்க, “யாருய்யா நீ?” கிணற்றுக் குரலில் கேட்டாள் பாட்டி.
“நான்தாம்மா தலையாரி காத்தமுத்தோட மூத்த பையன் இசக்கி........” குடும்ப உறவுகளை நீட்டி முழக்கினாலும், பாட்டிக்கு ‘தலையாரி’ என்ற வார்த்தையைத் தவிர, வேறு எதுவும் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை.“சரி பாட்டி... போயிட்டு வாரேன். நம்ம பசங்க உங்களை பத்திரமா அழைச்சிட்டு வந்து, வீடு வரைக்கும் விட்டுருவாங்க... மறந்திடாம வந்திடுங்க...” விடைபெற்றார்.
“வருடா வருடம் நடக்கும் திருவிழாவா? ஊர்ப்பஞ்சாயத்து தலைவர் வீட்டுக் கல்யாணமா? எதுக்காக என்னைக் கூப்பிடுறாங்க?” தொண்டைக் குழியில் மூச்சுத் திணறும் அந்திமக் காலத்தில்கூட ஆழ்ந்து சிந்தித்தாள் காளியம்மா பாட்டி.அடுத்த நாளும் இதே மாதிரியே கும்பல்...வஸந்தியின் மறுப்பு... பாட்டிக்கு விசேஷ அழைப்பு. ஆனால் இன்று வந்தவர் தமிழ் வாத்தியார் ராமசாமி!காளியம்மா பாட்டிக்கு ஓரளவு புரிந்து விட்டது.
‘வாத்தியார் பொண்ணுக்கும் தலையாரி பையனுக்கும் கல்யாணம் போல... அதான் வந்து கூப்பிடுறாங்க...’அந்த நாளும் வந்தது. ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு பாட்டியை அழைத்துப் போகிறார்கள்.‘வாத்தியார் பொண்ணு கல்யாணமில்ல... அதான் பள்ளிக்கூடத்துல விருந்து வைக்கிறாங்க போல...’ என்று மனதுக்குள் நினைத்த காளியம்மா பாட்டியின் சிந்தனை தெளிவாக இருந்தது.
வகுப்பறைக்குள் தூக்கிச் செல்லும் போது ஒருவன் பாட்டியின் காதில் ஓதினான்.
“ஏலே கிழவி! சொன்ன மாதிரி நாங்கதான் உன்னை தூக்கியாந்தோம். அதனால எங்க தலைவரு நிக்கிற பானைச் சின்னத்தைப் பாத்து ஓட்டைக் குத்திப்புடு... மறந்திடாதே பாட்டி...”
ஆக்கம்: மால்கம்
பதிவு : உங்கள் ‘புகழன்’

Monday, February 18, 2008

படிப்பாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்

படிப்பாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்
கதை நன்றாக இருந்தால் உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்
இல்லையெனில் என்னிடம் கூறுங்கள்.
இப்படிக்கு
உங்கள் புகழன்

காட்டு மிராண்டி

என் நண்பன் நல்ல படிப்பாளி. சிறந்த படைப்பாளியும் கூட. ஆனால் அவனது படைப்புகள் பல அவனின் காகிதங்களிலேயே புதைந்து விட்டது. எழுதிய சிறுகதைகள் பல. ஆனால் வெகு ஜன இதழ்களில் எதிலும் அவனுடைய படைப்புகள் வெளிவர வில்லை. ஒன்றைத் தவிர. இந்தப் பதிவில் வரும் கதை மட்டும் தினமணி கதிர் இதழில் ஒரு முறை வெளிவந்தது.
அந்த இதழ் இப்போது என்னிடம் இல்லை. ஆனால் அவன் எழுதிய காகிதங்கள் கிடைத்தது. அதை இங்கு பதிக்கிறேன்.
இனி கதை...
காட்டு மிராண்டி!
“அவன் என்ன கொம்பனா? அவன கொல்லாம விடமாட்டேன். எங்கடி என்னை கொண்டு போறே... விடுறீ... அவன ஒரு கை பார்க்குறேன்...”
மூச்சிறைக்க மேகரலை கத்தினாள். தொடர்ந்து உளறிக் கொண்டே இருந்தாள். கூட்டம் முழுவதும் அவளையே திரும்பிப் பார்த்தது.
மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று மேகலையின் தங்கை ராஜேஸ்வரி அவளின் உளறலை குறைக்க முயற்சி செய்தாள்.
மேகலை ரயிலின் வாசலில் உட்கார வைக்கப்பட்டிருந்தாள். கால்களும் கைகளும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. மொட்டையடிக்கப்பட்ட தலை. ஐம்பது வயதிருக்கும்.
ரயிலின் அந்தப் பெட்டி முழுவதிலுமே நிசப்தம் நிலவியது. சிலர் முணுமுணுத்தனர். இன்னும் சிலர் அவளை அசூசையாகப் பார்த்து விலகி நின்றனர்.
மனநோய் முற்றிய நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துமனைக்கு அவளை அழைத்துச் செல்லும், தங்கை ராஜேஸ்வரி கொஞ்சம் படித்தவள் போல் காணப்பட்டாள்.
“ஏம்மா, உனக்குமா அறிவில்லை? அவதான் பைத்தியம்... வேலைக்குப் போறவங்க டிரெயின் ஃபுல்லைா இருக்காங்கல்ல. இப்படி காட்டுக் கத்தல் கத்டதி டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு...”
எப்படி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், நாகரிகமாக ஆடை அணிந்திருநத அந்த வாலிபன் மட்டும் துணிச்சலாக ராஜேஸ்வரியிடம் கேட்டான்.
“அது காட்டுமிரான்டி மாதிரி கத்திக்கிட்டே இருக்கில்ல... லேட்டா அழைச்சிட்டு போக வேண்டியது தானே! “ சீட்டிலிருந்து எழுந்து அதிகார தோரணையில் அவன் கத்தினான்.
பயணிகள் பலருக்கு இது ‘சரி’ என்று பட்டது. சிலரின் மனம் ‘அவள் பைத்தியம் தானே, என்ன செய்வாள்... இவனுக்கு என்ன?’ என்றது.
“ஐயா மன்னிச்சருக்க... இதுக்கு கொஞ்ச நேரம் முன்னால போற ரயில்லதான் நேத்து கிளம்பினோம். அப்பவும் இதே மாதிரிதான் திட்டினாங்க... இன்னும் நேரங்கழிச்சி போனா ஆஸ்பத்திரியில சீட்டு கிடைக்காதுங்க. இவள கத்தாம பாத்துக்கிறேன்” . காலில் விழாத குறையாக கெஞ்சினாள் ராஜேஸ்வரி.
மீண்டும் நிசப்தம். மேகலையும் அமைதியானாள்.
“மன்மத ராசா... மன்மத ராசா..” இசை, ரிங் டோனாக அந்த வாலிபனின் செல்போன் சினுங்கியது. அவன் இன்னும் உட்காரவில்லை.
“ஹலோ... டேய் மாப்ளே சொல்றா...” இங்கிதம் கொஞ்சமுமில்லாமல் அவன் அலறினான்.
பயணிகள் அனைவரின் பார்வையும் இப்பொழுது அந்த வாலிபனின் மீது!
“யெஸ்.. வந்திட்டிருக்கேன்டா...”
“ஆமா...”
“உனக்கு கொழுபபு ஜாஸ்திடா. நான் அவளை ஒன்னும் பண்ணலடா.. ஜஸ்ட் டேட்டிங் ஒன்லிடா...’ உரையாடல் தொடர ரயில் அடுத்த நிறுத்ததில் நின்றது.
ராஜேஸ்வரிக்கு காட்டுமிராண்டி யார் என்பது புரிந்தது. பயணிகளுக்கும்தான்!
ஆக்கம் : மால்கம்
பதிவு : உங்கள் ‘புகழன்’

என் நண்பன் ஒருவனின் கதை

அன்பு நண்பர்களே!எழுதக் கற்றுக் கொள்வதற்கு முன் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். சிறந்த படிப்பாளி மட்டுமே சிறந்த படைப்பாளியாக முடியும் என்பது என் கருத்து.இது வரை யாராலும் படிக்கப்படாத படைப்புகள் படிக்கப்பட வேண்டும் என்பதே வலைதளங்களின் நோக்கம்.
இந்த வகையில் என் நண்பன் ஒருவன் (டாக்டர் மாத்ருபூதம் நடத்திய “புதிரா புனிதமா” நிகழ்ச்சியில் வரும் “என் நண்பன் ஒருவன்” என்பது போல் நினைத்து விட வேண்டாம். உண்மையிலேயே என் நண்பன் ஒருவன்) எழுதிய சிறுகதைகள் சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.
படியுங்கள்! பாராட்டுங்கள்! படைப்பாளியாக்குங்கள்!