Thursday, July 17, 2008

இங்கிதமில்லாத இளையராஜா

ஸ்ரேயா கோஷல் பாடும் இந்தப் பாடலிலும் இந்தக் காட்சியிலும் பாராட்ட வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றது.

குரல் அழகு

மேனரிஸம்

புத்திசாலித்தனம்

புரிந்துணர்வு

தன்னடக்கம்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜானகியின் அதே குரலில் கேட்பதைவிட இந்தப் பாட்டை ஸ்ரேயாவின் குரலில் கேட்பதற்கு இன்னும் நன்றாக இருக்கிறது.

பல்லவியை ஒவ்வொருமுறை முடிக்கும் போதும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதுபோல் ஒரு சுற்று சுற்றிவருவது மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.

அந்நிய மொழியில் அற்புதமாக பாடுகிறார்.

பிறமொழிப் பாடகர்கள் தமிழில் பாடும் போது தமிழை மட்டுமல்ல எதை எதையெல்லாமோ கொலை செய்கின்றார்கள். “ஈஸ்வரா வானும் மண்ணும் ஹேண்ட்ஷேக் பன்னுது உன்னால் ஈஸ்வரா” என்ற பாடலைப் பாடச் சொல்லும் போது அந்தப் பாடகர் (பெயர் தெரியவில்லை) “பிரியமான பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லே” என்று பாடுவதற்கு பதில் பெரியம்மாவின் பொண்ணை ரசிக்கலாம்” என்று பாடினாராம்.

அந்த அளவு மோசமாகப் பாடாவிட்டாலும் ரெம்பவே அழகாகப் பாடியிருக்கிறார் ஸ்ரேயா.

இதில் ஒரு சிறிய தவறு “காணாத ஒன்றைத் தேடுதே” என்பதற்கு பதில் ‘தோடுதே’ என்று பாடிவிட்டார். ஆனால் பார்வையாளர்களின் ரியாக்ஸனைப் பார்த்து விட்டு அதனை கடைசியாகப் படிக்கும் போது சரியாக ‘தேடுதே’ என்று படித்து விட்டார். ரசிகர்கள் கைதட்டியதும் சிரிக்கவும் செய்கிறார். எவ்வளவு அருமையான அப்ஸர்வேஷன். ரியலி கிரேட்.

இவருடைய இந்த திறமையைப் பாராட்டி இளையராஜா கூறியதுதான் சற்று அல்ல ரெம்பவே நெருடலான விஷயம்.

“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”

எதற்கு எந்த உதாரணத்தைக் கூற வேண்டும் என்ற முறையின்றி கூறியிருக்கிறார்.

நல்லவேளை ஸ்ரேயாவுக்கு தமிழ் தெரியாது. ஏதோ இளையராஜா தன்னை ரெம்பவே பாராட்டுகிறார் என்று சிரித்துக் கொண்டே நின்றார் ஸ்ரேயா. பின்னால் ஒருநாள் தமிழ் தெரிந்து இந்த கிளிப்பை பார்க்க நேரிட்டால் கண்டிப்பாக வருந்துவார்.
இதற்கு பதிலாக இளையராஜா பாராட்டாமலேயே இருந்திருக்கலாம்.

டிஸ்கி: எப்படியே ஸ்ரேயா ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவரின் தரிசனம் இந்தப் பதிவின் மூலம். என்ஜாய் மக்கள்ஸ்.

44 comments:

சென்ஷி said...

:((

உங்கள் பதிவிற்கான சோக ஸ்மைலிதான் இது..

மிகப்பெரும் வெற்றிப்பெற்ற பாடல்களை முறையாக பயிற்சி பெற்று பின்பு பாட வந்தும் சபை முன்னால் தவறாக பாடி அதை சால்ஜாப்பு செய்யாமல் தவறை உடனே திருத்து என்று கூறிய ராஜாவின் மேல் எந்த குற்றமும் சாட்ட முடியாது.

அந்த நிகழ்ச்சியை நேரில் அமர்ந்து பார்த்து ரசித்தவன் என்ற முறையில் ஷ்ரேயா கோஷலை மட்டுமல்ல தவறாகப் பாடிய அத்தனைப் பேரையும் திருத்தமாக பாடி எங்களை மகிழ்வித்தார் ராஜா.. :))

சென்ஷி said...

உங்க லேபிளில் விமர்சணம் என்று உள்ளது..

அதை விமர்சனம் என்று திருத்திக்கொள்ளவும்..

இப்படி நான் சொல்லி அதையும் சென்ஷிக்கு இங்கிதம் இல்லைன்னு சொல்லிட்டா என்னாகறதுங்கற கவலையில நான் "த" ஆகிக்கறேன்.

ஆயில்யன் said...

ஸ்ரேயாவின் இந்த பாடல் உச்சரிப்பில் தான் நான் முதலில் உளம் மகிழ்ந்தேன் !

குழந்தைகளுக்கு மொழி சொல்லிக்கொடுக்கும்போது ஏற்படும் தவறுகளை திருத்தும் ஆசிரியர் பணிதான் செய்தார் ராசா! ஸோ எல்லாமே கிரேட்டூத்தான் :))))))))

சென்ஷி said...

//குரல் அழகுமேனரிஸம்புத்திசாலித்தனம்புரிந்துணர்வுதன்னடக்கம்இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.//

இதுக்குத்தானே ராசா இந்த பதிவே.. அப்புறம் எதுக்கு வேண்டா வெறுப்பா ராஜாவை இழுக்கற :)

ஆயில்யன் said...

மீண்டும் தலைவி தரிசனம் கண்ட மகிழ்ச்சியில்................!

சென்ஷி said...

//ஜானகியின் அதே குரலில் கேட்பதைவிட இந்தப் பாட்டை ஸ்ரேயாவின் குரலில் கேட்பதற்கு இன்னும் நன்றாக இருக்கிறது.//

என்ன கொடும சார் இது..... :((

சென்ஷி said...

//ஆயில்யன் said...
ஸ்ரேயாவின் இந்த பாடல் உச்சரிப்பில் தான் நான் முதலில் உளம் மகிழ்ந்தேன் !

//

அடுத்த ரித்தீஷ் படத்துல ஹீரோயின் அவங்கதான்.. ஓக்கேவா

ஆயில்யன் said...

//அந்நிய மொழியில் அற்புதமாக பாடுகிறார்//

தமிழ் என்று மட்டுமல்ல தலைவி தெலுங்குவிலும் கூட அசத்திக்கொண்டுதான் இருக்கிறார் :)))

புகழன் said...

தவறை சுட்டிக்காட்டுவதுதான் சரி.
ஆனால் அதனைக் கூறும் முறை சரியானதாக இருக்க வேண்டும்.
இளையராஜா சுட்டிக்காட்டாமலேயே தான் தவறாக எழுதியிருக்கிறோம் என்று உணர்ந்து தானாக திருத்திக் கொண்டது பாராட்டப்பட வேண்டியது.
ஆனால் அதற்கு .“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற இப்படிப்பட்ட உதாரணம் தேவையில்லையே

நான் அதைத்தான் இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//ஆயில்யன் said...
ஸ்ரேயாவின் இந்த பாடல் உச்சரிப்பில் தான் நான் முதலில் உளம் மகிழ்ந்தேன் !

//

அடுத்த ரித்தீஷ் படத்துல ஹீரோயின் அவங்கதான்.. ஓக்கேவா
//

என் மனத்துக்குள் ஒலியாய் ஒலிப்பவள்,

ஒளியாய் வந்து ஒளிரும்போது

மொத சீட்ல குந்திக்கினு விசில் அடித்து வெற்றி கொண்டாடுவேன் :)))))))

சென்ஷி said...

//தானாக திருத்திக் கொண்டது பாராட்டப்பட வேண்டியது.
ஆனால் அதற்கு .“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற இப்படிப்பட்ட உதாரணம் தேவையில்லையே
//

அடக்கால கொடுமையே...

அதையேத்தான் ராஜாவும் சொல்லியிருக்காரு. உனக்கே தெரிஞ்சு திருத்தினாத்தான் உண்டு.. மத்தவங்க எத்தனை தடவ படிச்சு படிச்சு காதுல சொன்னாலும் மண்டையில ஏறாதுன்னு :))

புகழன் said...

//ஆயில்யன் said...
ஸ்ரேயாவின் இந்த பாடல் உச்சரிப்பில் தான் நான் முதலில் உளம் மகிழ்ந்தேன் !

குழந்தைகளுக்கு மொழி சொல்லிக்கொடுக்கும்போது ஏற்படும் தவறுகளை திருத்தும் ஆசிரியர் பணிதான் செய்தார் ராசா! ஸோ எல்லாமே கிரேட்டூத்தான் :))))))))

//

தவறுகளைத் திருத்தும் ஆசிரியர் பணிதான் செய்தார் ராசா இல்லையென்று சொல்லவில்லை. அதை ஒரு ஆசிரியரின் ஸ்தானத்தில் இருந்து கொண்டு திருத்தும் முறை மாறி செய்திருக்கிறார்.
ராஜா கிரேட்தான் பட் எல்லாமே அல்ல. இது போன்ற சின்னச் சின்ன குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.

சென்ஷி said...

//நான் அதைத்தான் இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.//

அதற்கும் இங்கிதத்திற்கும் என்ன தொடர்பு என்பதையும் சொல்ல முடியுமா ?

புகழன் said...

@ சென்ஷி
// உங்க லேபிளில் விமர்சணம் என்று உள்ளது..

அதை விமர்சனம் என்று திருத்திக்கொள்ளவும்..
//

எல்லோருமே தவறு செய்பவர்கள்தான்.
எல்லாப் பதிவர்களும் என் தவறையும் பார்க்கட்டும் கடைசியில் திருத்திக் கொள்கிறேன்.

புகழன் said...

ஆயில்யன் said...
//அந்நிய மொழியில் அற்புதமாக பாடுகிறார்//

தமிழ் என்று மட்டுமல்ல தலைவி தெலுங்குவிலும் கூட அசத்திக்கொண்டுதான் இருக்கிறார் :)))
//

அதுதான் அந்நிய மொழியில் என்று சொல்லிவிட்டேனே. அதில் எல்லாமே வந்துவிடும்.

தமிழ்ப்பறவை said...

ஐயா புகழன்... ராஜா சரியாத்தான் சொன்னார்.. அடுத்தவங்க சொல்லிப் புரியறதுக்கு முன்னாடி தமக்கே புரிஞ்சா நல்லது.. அதுதான் நடந்தது..ஒரு ஆசிரியர் மாணவியிடம் கூறுவது போல,ஒரு அம்மா மகளிடம் கூறுவது போல ஒரு உரிமையில சொன்னார்..இப்போல்லாம் பதிவை விட பதிவுக்கு தலைப்பு வைக்கிறதுல மட்டும் நல்லா ரூம் போட்டு யோசிக்கிறீங்கப்பு.. நல்லாருங்க...
உங்க வாக்குப்படி அவர்கிட்ட குறை இருந்தாலுமே அதை மட்டுமே வைத்து ஒரே வரியில் கூறிவிடாதீர்கள் இங்கிதம் இல்லை என..
அப்படிப் பார்த்தால் இதுவே ஒரு இங்கிதம் இல்லா தலைப்பு தான்..

தருமி said...

முழுவதுமாகப் பார்த்த போது ராஜா பாடகியைப் புகழ்ந்து தான் சொல்லியுள்ளார் என்பதாகப் புரிகிறது. நீங்கள்தான் ஏதோ ஒரு "கண்ணாடி" வழியாகப் பார்த்து விட்டீர்களோ என்னவோ.
தமிழ்ப்பறவை சொன்னதைத்தான் //ஒரு இங்கிதம் இல்லா தலைப்பு// நானும் வழிமொழிகிறேன்.

மணிமொழியன் said...

இசைஞானி, ஸ்ரேயா கோஷால் செய்த பிழைய பொறுத்துக்கொண்ட மாதிரிதான் எனக்குத் தோனுது. “பாஷை தெரியாதவங்க பாடரதால... அனுமதிக்கலாம், பரவால்ல” னுதான் சொல்றாரு.

rapp said...

//அடுத்த ரித்தீஷ் படத்துல ஹீரோயின் அவங்கதான்.. ஓக்கேவா//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........சென்ஷி அண்ணே இதுல எங்க தலய ஏன் தேவையில்லாம இழுக்கறீங்க? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? தலயோட கம்பீரத்துல மயங்கித்தான் ஐஸ்வர்யா ராய் அபிஷேக்கோட சண்டை போட்டாங்களாம்.

கோவி.கண்ணன் said...

//இங்கிதமில்லாத இளையராஜா //

இங்கிதம் இல்லாவிட்டால் என்ன அவரிடம் சங்கீதம் இருக்கிறதே ?

நீங்க சொல்வது புரியல, வளரும் கலைஞர்கள், வளர்ந்த கலைஞர்களால் பாராட்டுப்படுவதைப் போல் குறையையும் மகிழ்வேடுதான் ஏற்றுக் கொள்வார்கள். பள்ளி மாணவனை ஆசிரியர் கண்டிப்பது அவனை மட்டம் தட்டுவதற்காகவா ?

எங்கும் குறை உண்டு, ஆனால் எங்கும் குறை மட்டுமே இல்லை.

தமிழ் பிரியன் said...

புகழன்,
இதை ஒரு ஆசிரியர் மாணவனை கண்டிப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு இங்கிதமில்லாத என்ற தலைப்பு சரியில்லை.. :(

நிஜமா நல்லவன் said...

தங்கத்தலைவியின் குரலை கேட்டு முடித்தவுடன் பின்னூட்டமிட வார்த்தைகளின்றி தவிக்கிறேன்:)

Anonymous said...

Totally disagree with your observation...

Raja in fact credited her more than he should have. Listen to his statement again few times. The saying he used not to accuse her but praise for the correction(which he helped).

She made not only that mistake, which is more visible due to obvious reason that word in that song plays very important role - Heroine was looking/waiting for Hero.

I noticed the below words...
Padall -> Podal
Nanchile -> Nanche
Getham -> Keetham

But as Raja credited - the person with out the language can make mistake(that too very difficult song to perform).

And after 3rd time(not 2 as Raja mentioned) she made the same mistake Raja corrected her by pointing the note which you can notice very little and editing person handled the rest.

But he gave her very good credit.

Thanks a lot for the topic...
Chan

புகழன் said...

வருகைதந்தவர்கள்
கருத்துச் சொன்னவர்கள்,
மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டு போனவர்கள்
என அனைவருக்கும் நன்றி

புகழன் said...

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது
தெரிந்தே செய்யக்கூடிய தவறுகளுக்கு கூறப்படுவது.
பின்விளைவுகளைப் பற்றி யோகிக்காமல் தவறு என்று தெரிந்தும் செய்பவர்களை திருத்தவே முடியாது அவர்களாகவே திருந்த வேண்டும் என்பதற்கு தான் மேலுள்ள உதாரணத்தைக் கூறுவார்கள்.
இந்த உதாரணம் இங்கு தேவையில்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது.
மீண்டும் நன்றாக பதிவைப் படியுங்கள்
பாட்டையும் கேளுங்கள் பாருங்கள்
புரியும்.

Sumathi. said...

ஹலோ புகழன்,

//“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”//

//எதற்கு எந்த உதாரணத்தைக் கூற வேண்டும் என்ற முறையின்றி கூறியிருக்கிறார்.//

இதெல்லாம் ரொம்ப ஓவராயில்ல உங்களுக்கு? இவ்வளவு பெரிய்ய மனுசன், ஒரு சின்ன தவற நாலு பேரு முன்னாடி திருத்திகிட்டதுக்கு இவ்ளோ அழகா பாராட்டியிருக்கார்.இந்த பழமொழிய சொன்னதுக்கு அடுத்த வரியிலேயே தானா திருத்துகறது எவ்ளோ பெரிய விஷயம்னு சொல்லி பெருமைபடுத்தி இருக்காரு,இத போயி இவ்ளோ பெரிய வார்த்தையா சொல்லி, ஏங்க உங்களுக்கு பொழுது போகலைனா இப்படியா சொல்றது? சரி, ஏன் இந்த
உதித் நாராயானன் பாடரத் கேக்க முடியுதா? வார்த்தைகலை எவ்ளோ அசிங்கம பாடராரு அத சொல்லி போடுங்களேன், அத உட்டுட்டு ஏங்க இப்படிலாம்.

//தவறை உடனே திருத்து என்று கூறிய ராஜாவின் மேல் எந்த குற்றமும் சாட்ட முடியாது.//

//ஐயா புகழன்... ராஜா சரியாத்தான் சொன்னார்.. அடுத்தவங்க சொல்லிப் புரியறதுக்கு முன்னாடி தமக்கே புரிஞ்சா நல்லது.. அதுதான் நடந்தது..//

//இதுவே ஒரு இங்கிதம் இல்லா தலைப்பு தான்//

ரிப்பீட்டூ..........

//எல்லோருமே தவறு செய்பவர்கள்தான்.
எல்லாப் பதிவர்களும் என் தவறையும் பார்க்கட்டும் கடைசியில் திருத்திக் கொள்கிறேன்.//

ஏன், உங்க தவறு உங்களுக்கே தெரியலையா? இத கூட மத்தவங்க சொல்லி தான் அதுவும் கடைசியில ?

இப்ப உங்களுக்கு தான் ராஜா சொன்ன
அந்த பழமொழி தேவைனு நினைக்கிறேன்.இனியாவது இங்கிதமில்லாமல் நீங்க ஒரு நல்லபதிவா போடுங்க.

//

மங்களூர் சிவா said...

/
எப்படியே ஸ்ரேயா ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவரின் தரிசனம் இந்தப் பதிவின் மூலம்.
/

நன்றி

மங்களூர் சிவா said...

சென்ஷி, ஆயில் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு
ராஜா தி க்ரேட்டு

பரிசல்காரன் said...

அன்பு நண்பரே...

அவர் இசையால் அடைந்த இன்பங்களுக்காக என்ன செய்து நம்மால் அவருக்கு நன்றிக்கடன் செலுத்தமுடியும்?

குறைந்தபட்சம் இதுபோன்று ச்சின்னத்தனமாய் அவர் பெயரை இழுக்காமலிருந்தாலே போதுமே?

கொஞ்சம் கோபமாகத்தான் இந்தப் பதிவைத் திறந்தேன். ஆனால், பின்னூட்டங்களைப் பார்த்து நெகிழ்ந்தேன்!

ராஜா ராஜாதான்!

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
:((

உங்கள் பதிவிற்கான சோக ஸ்மைலிதான் இது..
\\

ரீப்பிட்டே ;((

சென்ஷி said...

//எல்லோருமே தவறு செய்பவர்கள்தான்.
எல்லாப் பதிவர்களும் என் தவறையும் பார்க்கட்டும். கடைசியில் திருத்திக் கொள்கிறேன்.//

நிறைய்ய பேரு வந்து பார்த்து உங்க பதிவு ஜூடான இடுகையில கூட வந்துடுச்சு.. தப்ப எப்ப திருத்திக்கப் போறீங்க...

தருமி said...

//தப்ப எப்ப திருத்திக்கப் போறீங்க...//

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் ...?

ஸ்ரீசரண் said...

//ஜானகியின் அதே குரலில் கேட்பதைவிட இந்தப் பாட்டை ஸ்ரேயாவின் குரலில் கேட்பதற்கு இன்னும் நன்றாக இருக்கிறது.//
இது என்ன கொடுமை
ஷ்ரேயா அழகு என்பதால் இப்படி எல்லாம் பேசக்கூடாது
50 சதவீதம் பாடினார் என்று சொல்லுங்கள் ஒத்துக்கொள்ளலாம்.

Ravi said...

அவர் கூறியதில் எந்த தவறும் இருப்பதாக தெரிய வில்லை. பிடிச்ச முயலுக்கு 3 கால்கள் என்று நீங்கள்தான் தவறாக புரிந்திருக்கிறீர்கள். உங்கள் தலைப்பை மாத்துவது நல்லது.

புகழன் said...

//மணிமொழியன் said...
இசைஞானி, ஸ்ரேயா கோஷால் செய்த பிழைய பொறுத்துக்கொண்ட மாதிரிதான் எனக்குத் தோனுது. “பாஷை தெரியாதவங்க பாடரதால... அனுமதிக்கலாம், பரவால்ல” னுதான் சொல்றாரு.

//

பாஷை தெரியாதவங்க பாடரதால ... அனுமதக்கலாம்.
இந்த இடத்தில் விடுபட்ட வார்த்தையை கவனிக்கத் தவறிவிட்டீர்களே மணி மொழியன்

மன்னிக்கலாம் என்று கூறிவிட்டு பிறகுதான் அனுமதிக்கலாம் என்று சொல்கிறார் சங்கீத மேதை இசைஞானி இளையராஜா.
மன்னிக்கும் அளவு ஸ்ரேயா செய்தது என்ன அவ்வளவு பெரிய தப்பா?

விஜய் said...

இசைஞானி இளய ராஜா ஓர் இயல்பு மனிதர்.ஆடம்பர அல்ங்காரங்களில் நாட்டம் இல்லா ஞானத்தை. அடந்தவர்.பணமும் பவுசும் வந்த போதும் மாறாக் குணமுடையோன்.
இறை நம்பிக்கையிலும் உறுதி.
வாழ்க .

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

ஸ்ரீ said...

புகழன்,
சில பழமொழிகளை நான் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கோம். உதா. "கல்லை கண்டா நாய காணோம்." , "பந்திக்கு முந்தி படைக்கு பிந்தி...". அப்படி ஒன்று தான் நீங்க சொன்ன இந்த "திருடனாய் பர்த்து...". தவறு செய்பவர் தாமே திருந்தாவிட்டால் ஒழிய தவறுகளை திருத்த முடியாது என்பது தான் பொருள். அதனால் இளையராஜா சொன்னதில் தவறொன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை நண்பா. அவர் பாவலரின் சகோதரர். தமிழும் இங்கீதமும் தெரிந்திருக்காதா சகா? நான் தவறாக சொல்லி இருந்தால் தெரியபடுத்தவும் :)

தமிழ்ப்பறவை said...

//இதை ஒரு ஆசிரியர் மாணவனை கண்டிப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு இங்கிதமில்லாத என்ற தலைப்பு சரியில்லை.. :(
//
//இதெல்லாம் ரொம்ப ஓவராயில்ல உங்களுக்கு? இவ்வளவு பெரிய்ய மனுசன், ஒரு சின்ன தவற நாலு பேரு முன்னாடி திருத்திகிட்டதுக்கு இவ்ளோ அழகா பாராட்டியிருக்கார்.இந்த பழமொழிய சொன்னதுக்கு அடுத்த வரியிலேயே தானா திருத்துகறது எவ்ளோ பெரிய விஷயம்னு சொல்லி பெருமைபடுத்தி இருக்காரு,இத போயி இவ்ளோ பெரிய வார்த்தையா சொல்லி, ஏங்க உங்களுக்கு பொழுது போகலைனா இப்படியா சொல்றது? //
//இப்ப உங்களுக்கு தான் ராஜா சொன்ன
அந்த பழமொழி தேவைனு நினைக்கிறேன்.இனியாவது இங்கிதமில்லாமல் நீங்க ஒரு நல்லபதிவா போடுங்க.
//
//நிறைய்ய பேரு வந்து பார்த்து உங்க பதிவு ஜூடான இடுகையில கூட வந்துடுச்சு.. தப்ப எப்ப திருத்திக்கப் போறீங்க...
//அவர் கூறியதில் எந்த தவறும் இருப்பதாக தெரிய வில்லை. பிடிச்ச முயலுக்கு 3 கால்கள் என்று நீங்கள்தான் தவறாக புரிந்திருக்கிறீர்கள். உங்கள் தலைப்பை மாத்துவது நல்லது.////சில பழமொழிகளை நான் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கோம். உதா. "கல்லை கண்டா நாய காணோம்." , "பந்திக்கு முந்தி படைக்கு பிந்தி...". அப்படி ஒன்று தான் நீங்க சொன்ன இந்த "திருடனாய் பர்த்து...". தவறு செய்பவர் தாமே திருந்தாவிட்டால் ஒழிய தவறுகளை திருத்த முடியாது என்பது தான் பொருள். அதனால் இளையராஜா சொன்னதில் தவறொன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை நண்பா. அவர் பாவலரின் சகோதரர். தமிழும் இங்கீதமும் தெரிந்திருக்காதா சகா? //

புக‌ழ‌ன் இதுக்கு மேல‌யுமா த‌லைப்பை மாற்ற‌ அட‌ம் பிடிக்கிறீங்க‌..

//அன்பு நண்பரே...

அவர் இசையால் அடைந்த இன்பங்களுக்காக என்ன செய்து நம்மால் அவருக்கு நன்றிக்கடன் செலுத்தமுடியும்?

குறைந்தபட்சம் இதுபோன்று ச்சின்னத்தனமாய் அவர் பெயரை இழுக்காமலிருந்தாலே போதுமே?

கொஞ்சம் கோபமாகத்தான் இந்தப் பதிவைத் திறந்தேன். ஆனால், பின்னூட்டங்களைப் பார்த்து நெகிழ்ந்தேன்!

ராஜா ராஜாதான்!

//

ப‌ரிச‌ல்கார‌ரே அனைவ‌ரின் சார்பாக‌வும் சொல்கிறேன் இந்த‌ ரிப்பீட்டை...

பரமார்த்த குரு said...

புகழன் அவர்களே.. எல்லோரும் உங்களை புகழ வேண்டுமென நினைத்து நீங்கள் இந்த பெயரை உங்களுக்கு சூட்டிவிட்டீர்கள். இசை ஞானி இளையராஜாவை விமர்சி க்க எந்த ஒரு தகுதியோ தாரதரமோ இல்லாத உங்களுக்கு நான் எழுதுவது நெருடலாக இருக்கும். நீங்கள் எழுதுவதை விமர்சிக்க சில கைத்தடிகள் வேறு. தவறுகளை சுட்டிக்காட்டி மேடையிலேயே விளக்கம் கொடுத்துள்ளார் இளையராஜா. தவறுகளை திருத்திக் கொள்வது மனித இயல்பு. அதனை பொறுத்துக் கொள்ளாதது ஐந்தறிவு படைத்தவர்களது விளக்கம். இதில் நீங்கள் எந்த இடம்?

cheena (சீனா) said...

பதிவும் பதிவினைத் தொடர்ந்த விவாதமும் கண்டேன். என்னைப்பொறுத்த வரையில் எனக்கு வருத்தத்தை உண்டு பண்ணிய பதிவு. அவ்வளவு தான்

SurveySan said...

//////ஜானகியின் அதே குரலில் கேட்பதைவிட இந்தப் பாட்டை ஸ்ரேயாவின் குரலில் கேட்பதற்கு இன்னும் நன்றாக இருக்கிறது.////////

kannaa pinnaaa kandanangal!
:(

;)

Anonymous said...

//தவறுகளைத் திருத்தும் ஆசிரியர் பணிதான் செய்தார் ராசா இல்லையென்று சொல்லவில்லை. அதை ஒரு ஆசிரியரின் ஸ்தானத்தில் இருந்து கொண்டு திருத்தும் முறை மாறி செய்திருக்கிறார்.
ராஜா கிரேட்தான் பட் எல்லாமே அல்ல. இது போன்ற சின்னச் சின்ன குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.//

oki. oki vidu .. nee piditha muyalukku munu kalthan... othukiran othukiran...

உண்மை said...

எப்போதுமே, அதிகம் தெரிந்தவர்கள், விவரமானவர்கள், எது சொன்னாலும் அது குற்றமாகவே பார்க்கப்படும். இது உண்மை.

குற்றம் என்பது நமக்கு முன்னால் ராசாவுக்கு தெரிந்திருக்கின்றது. அதனால் அவர் அவருக்கே உரிய முறையில் அதை கூறி இருக்கின்றார்.

இதை குற்றமாக பார்க்க வேண்டாமே!

Sujitkumar said...

இளையராஜா ஒரு இசை மேதை என்பதற்காக அவர் சொல்வதெல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்பதுவும், அவர் தவறாக ஏது சொன்னாலும் அதைக் கண்டு கொள்ளக்கூடாது என்பதுவும் தவறு...
இளையராஜாதான் முன்மாதியாக விளங்க வேண்டிய ஒருவர்...
இங்கே இளையரா்ஜா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரியைக் கூறியது தவறு...

உண்மையில் அது பாராட்டே அல்ல...
அந்த வரியை அவர் ஆங்கிலத்திலும் அந்தப் பெண்ணுக்குப் புரியும் வண்ணம் சொல்லியிருக்கலாமே...

அந்த அந்நிய மொழிப் பெண் எழுத்துப் பிழையாகப் பாடியதை, எந்த ஒரு மேதை ஒரு திருட்டுக்கு அல்லது ஒரு திருடனுக்கு ஒப்பிடுவான்...?

மாணவன் பிழையை ஆசிரியன்தான் திருத்த வேண்டும், ஆனால் அந்த மாணவன் மனம் புண்படும் படியான வார்த்தைகளைச் சொல்வதும், மாணவன் அவமானப் படும் படியான தண்டனையை ஆசிரியன் மாணவனுக்கு வழங்குவதும் சட்டப்படி குற்றமாகும்.

"அந்தப் பெண் அவமானப் படல்லயே புன்னகையோ டேற்றுக் கொண்டாளே" என்போர், அந்த வரியை அப்படியே அந்தப் பாடகியின் தாய் மொழிக்கு மாற்றி சொல்லிவிட்டு பார்க்கட்டும் அவள் கண் கலங்கி, கதி கலங்கிப் போய் "இவ்வளவு பெரிய பிழையையா நான் பண்ணிட்டேன்" கதறி அழுவாள்...