Wednesday, June 4, 2008

சந்தேகம்

தரணியின் நடத்தையில் கடந்த ஒருவாரமாக மாற்றங்களைக் கண்டாள் சங்கீதா.

இன்று இரவு கேட்டும் வைத்தாள். “ஏங்க, இன்னிக்கு பூ வாங்கிட்டு வரலையா?” ரொம்பவும் ஆசையுடன் கேட்டாள்.

“இல்ல, மறந்துட்டேன். நாளைக்கு வாங்கிட்டு வாரேன்” எந்தவொரு அக்கறையும் இல்லாமல் சொன்னான் தரணி. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வாங்கிவரவில்லை.

திருமணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து, தனிக்குடித்தனம் நடத்தும் சங்கீதாவுக்க மனதே சரியில்லை.

முதன் முறையாக கணவனின் நடத்தையில் சந்தேகம் கொண்டாள். ‘வேலை முடித்து வீட்டுக்கு சீக்கிரம் வருபவர், கொஞ்ச நாளா ரொம்ப லேட்டா வர்ராரே?’ மனதின் எண்ணங்கள் தப்பாக கணக்குப் போட்டது.

ஒருநாள் இரவு தாமதமாக வந்த சமயம் பார்த்து சங்கீதா தாண்டவமாடத் துவங்கினாள்.

“எவ கூட சுத்திட்டு வர்ரீங்க... ஒரு மாசமா பார்க்கிறேன், உங்க நடத்தையே சரியில்லை. யாரு அந்த சக்களத்தி..” தலையணையில் முகம் புதைத்து அழுதுவிட்டாள்.

இப்போதும் எதுவுமே கேட்காமல் தரணி தூங்கிவிட்டான்.

மாதத்தின் முதல்நாள். மாலை சீக்கிரமே வீ்ட்டுக்கு வந்த தரணி கையில் ஸ்வீட்பாகஸ், சேலை, மல்லிகைப்பூ சகிதமாக வீட்டிற்குள் நுழைந்தான்.

சங்கிதா முகம் கொடுக்காமல் திரும்பியிருந்தாள். தரணி வாய் திறந்தான்.

“சங்கீ... போன மாதத்தி்லேர்ந்து வேற கடையில சேர்ந்துட்டேன். ”

அவன் பேசிக் கொண்டிருக்க சங்கீதா அமைதியாயிருந்தாள்.

“ஏற்கனவே வேலை செய்த டெய்லி சம்பளம் தரும் கடையலிருந்து நின்னுட்டதால கையில காசு இல்லாம உனக்கு எதுவுமே வாங்கி வர முடியலை.”

சங்கீதா அவனைப் பார்க்க, “இப்ப மாதச் சம்பளம் தரும் கடையில் வேலை செய்கிறேன். நமக்கு குழந்தை பிறந்தவுடன் செலவு அதிகமாயிருக்கும், பின்ன அதை நல்ல படிக்க வைக்கனும் இப்படி எல்லாத்துக்கும் சேர்த்து இப்பவே அதிகமாக சம்பாதிக்கனும் சேர்த்து வைக்கனும். எக்ஸ்ட்ரா டைம் ட்யூட்டி பார்த்தால் அதிக சம்பளம் கிடைக்கும். அதான் டெய்லி லேட்டா வர்ரேன்” என்றான்.
அவள் கண்கலங்கினாள். அவள் கண்களைத் துடைத்தவனாக, “இன்னிக்கு சம்பள நாள், உனக்கு....” என்று வாங்கி வந்த அனைத்தையும் நீட்டினாள்.
ஆக்கம்: மால்கம்
பதித்தது: புகழன்.
நானும் சொந்தமா கதை எழுதலாம்னு நினைக்கிறேன். ஆனா அதை இந்தப் பதிவுலகம் ஏத்துக்குமான்னு நினைச்சாத்தான் ரெம்ப யோசனையா இருக்கு. அதனாலதான் என் நண்பன் எழுதிய கதைகள் இங்கே பதிவாக...
வெகு விரைவில் நானும் கதை எழுதுவேன் (அந்தக் கஷ்டத்தையும் நீங்க சகிச்சுக்கிட்டுதான் ஆகனும்).

25 comments:

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் புகழன்.

// அதை இந்தப் பதிவுலகம் ஏத்துக்குமான்னு நினைச்சாத்தான் ரெம்ப யோசனையா இருக்கு.//

விதி வலியது :)

மங்களூர் சிவா said...

comment moderation
testtu

மங்களூர் சிவா said...

/
Your comment has been saved and will be visible after blog owner approval
/

test failed

:(((

மங்களூர் சிவா said...

பெண்கள் என்றாலே சந்தேக பேர்வழிகள் என்பது போல சித்தரிக்கும் இந்த ஆணீய பதிவை கண்டிக்கிறேன்!!!!!

(அப்பாடா பத்தவெச்சாச்சு)

:)))))))))))))

புகழன் said...

\\ மங்களூர் சிவா said...
பெண்கள் என்றாலே சந்தேக பேர்வழிகள் என்பது போல சித்தரிக்கும் இந்த ஆணீய பதிவை கண்டிக்கிறேன்!!!!!

\\

பொண்டாட்டின்னா சந்தேகப்படனும். அப்பதான் அவ பொண்டாட்டி.
இதில ஆணீயம் பெண்ணீயம் என்று என்ன இருக்கிறது?
//
(அப்பாடா பத்தவெச்சாச்சு)
//

(பத்தவெச்சது எறிய வேணாமா?)

புகழன் நாம என்னத்த எறியனும்???

நம்ம மேல சந்தேகம் வந்தா பெண்கள்தான் கைல கிடைக்கறத எல்லாம் எடுத்து எறியுவாங்களாம் (இதுவும் நான் சொல்லலை காத்துவாக்குல கேள்விப்பட்டேன்)

நான் சொன்ன பத்த வெச்சது பத்தி எரியறதுக்கு
:))))))))))

புகழன் said...

எப்பா சிவா ஸ்பெல்லங் மிஸ்டேக்கெல்லாம் பார்த்து இப்படி கும்முறது சரியில்ல ஆமா.

அப்புறம் நான் அழுதுறுவேன்

Divya said...

கதை நல்லாயிருக்கு புகழன்.

\\வெகு விரைவில் நானும் கதை எழுதுவேன் (அந்தக் கஷ்டத்தையும் நீங்க சகிச்சுக்கிட்டுதான் ஆகனும்).\\

படிக்க[சகிச்சுக்க]நாங்க ரெடி.....நீங்க கதை எழுதுங்க புகழன், வாழ்த்துக்கள்!!

நிஜமா நல்லவன் said...

///மங்களூர் சிவா said...
பெண்கள் என்றாலே சந்தேக பேர்வழிகள் என்பது போல சித்தரிக்கும் இந்த ஆணீய பதிவை கண்டிக்கிறேன்!!!!!

(அப்பாடா பத்தவெச்சாச்சு)

:)))))))))))))///

ரிப்பீட்டேய்....

கோபிநாத் said...

\\புதுகைத் தென்றல் said...
வாழ்த்துக்கள் புகழன்.

// அதை இந்தப் பதிவுலகம் ஏத்துக்குமான்னு நினைச்சாத்தான் ரெம்ப யோசனையா இருக்கு.//

விதி வலியது :)
\\

ரீப்பிட்டே ;))

சுரேகா.. said...

//என் நண்பன் எழுதிய கதைகள் இங்கே பதிவாக...
வெகு விரைவில் நானும் கதை எழுதுவேன்//

நண்பனின் படைப்புகளை மதிக்கும் உங்களுக்கு , அற்புத படைப்புகள் உதிக்க வாழ்த்துக்கள்.!

கதை - நல்ல முயற்சி!
நண்பருக்கு பாராட்டுக்கள் !

Sumathi. said...

ஹாய்,

//பெண்கள் என்றாலே சந்தேக பேர்வழிகள் என்பது போல சித்தரிக்கும் இந்த ஆணீய பதிவை கண்டிக்கிறேன்!!!!!//

ஆமாம் நானும் இதை மிக மிக வண்மையாக கண்டிக்கறேன்.

இதே மாதிரி நீங்களும் எழுத ஆரபிச்சீங்கன்னா,
ஒரு பொண்ணு கூட வர மாட்டா இங்க ஞாபகம் இருக்கட்டும்

புகழன் said...

பரவாயில்லையே என்னோட பதிவுக்கு நிறைய பேர் ரிபீட்டு போடுறாங்களே!

புகழன் said...

வருகை தந்த அனைவருக்கும் முதலில் (விவாதத்திற்கு முன்) ஒரு நன்றி!

புகழன் said...

வாழ்த்துக்கள் கூறிய திவ்யாவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

உங்களைப் போன்ற கதாசிரியர்களின் வழிகாட்டுதலில்தான் நாங்கள் நன்றாக கதை எழுத முடியும்.

புகழன் said...

\\ சுரேகா.. said...
//என் நண்பன் எழுதிய கதைகள் இங்கே பதிவாக...
வெகு விரைவில் நானும் கதை எழுதுவேன்//

நண்பனின் படைப்புகளை மதிக்கும் உங்களுக்கு , அற்புத படைப்புகள் உதிக்க வாழ்த்துக்கள்.!

கதை - நல்ல முயற்சி!
நண்பருக்கு பாராட்டுக்கள் !

\\

வாங்க சுரேகா வருகைக்கு நன்றி!
முதல் வருகை என்று நினைக்கின்றேன்.
தொடர்ந்து வாருங்கள்! படியுங்கள்! கருத்துச் சொல்லுங்கள்!

புகழன் said...

\\Sumathi. said...
ஹாய்,

//பெண்கள் என்றாலே சந்தேக பேர்வழிகள் என்பது போல சித்தரிக்கும் இந்த ஆணீய பதிவை கண்டிக்கிறேன்!!!!!//

ஆமாம் நானும் இதை மிக மிக வண்மையாக கண்டிக்கறேன்.

இதே மாதிரி நீங்களும் எழுத ஆரபிச்சீங்கன்னா,
ஒரு பொண்ணு கூட வர மாட்டா இங்க ஞாபகம் இருக்கட்டும்

\\

சுமதியின் வருகைக்கு நன்றி!
முதல் வருகை என்று நினைக்கின்றேன்.

இப்படி எழுதுறத மாத்திகிறேன். தொடர்ந்து வாருங்கள்.
உங்கள் நண்பர்களையும் வரச்சொல்லுங்கள்.

(ஆனா ஒன்னு இந்த பொண்ணுங்களப் பத்தி தெரியும். அவங்களப் பத்தி எழுததினா - அது தப்பா இருந்தாலும் சரி, சரியா இருந்தாலும் சரி - என்னதான் எழுதான்னு பாக்குறதுக்காக கண்டிப்பா வரத்தான் செய்வாங்க!)

மங்களூர் சிவா கவனத்திற்கு இந்தப் பின்னூட்டமும் ஆணீயமா?

தமிழ் பிரியன் said...

சிறுகதை நல்லா தான் இருக்கு :)

தமிழ் பிரியன் said...

அட நீங்க எழுதலையா.... நீங்க எழுதினாலும் படிப்போம்.. கமெண்டுவோம்... தைரியமா எழுதுங்க.... :))

தாரணி பிரியா said...

பதிப்பாளர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் புகழன். சீக்கிரம் எழுத்தாளர் ஆவதற்கும் வாழ்த்துக்கள்

கயல்விழி முத்துலெட்சுமி said...

நிறைய எழுதுங்க படிக்க ஆளெல்லாம் இருக்காங்க..

ஆமா இந்த விசயத்தை கேட்டப்ப எல்லாம் சொல்லாம மௌனமா இருந்து அவளை கடுப்பேத்தியது தப்பு தானே..

நம்ம சினிமாக்களில் தான்.. இப்படி எல்லாம் நடக்கும்.. சொல்லவர்ரதை கேளு சொல்லவர்ரதை கேளூன்னு திரும்ப்ப திரும்ப சொல்லுவாங்களே தவிர சொல்லவந்ததை மட்டும் சொல்லிரமாட்டாங்க..

புகழன் said...

தைரியமூட்டியதற்கு நன்றி தமிழ் பிரியன்

புகழன் said...

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தாரணி

புகழன் said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
நிறைய எழுதுங்க படிக்க ஆளெல்லாம் இருக்காங்க..

ஆமா இந்த விசயத்தை கேட்டப்ப எல்லாம் சொல்லாம மௌனமா இருந்து அவளை கடுப்பேத்தியது தப்பு தானே..

நம்ம சினிமாக்களில் தான்.. இப்படி எல்லாம் நடக்கும்.. சொல்லவர்ரதை கேளு சொல்லவர்ரதை கேளூன்னு திரும்ப்ப திரும்ப சொல்லுவாங்களே தவிர சொல்லவந்ததை மட்டும் சொல்லிரமாட்டாங்க..

//

நன்றி தொடர்ந்து படியுங்கள்.

cheena (சீனா) said...

சிறிது இடைவெளிக்குப் பின் மறுபடியும் மால்கம் கதை - நன்றாய் இருக்கிறது - எழுத வேண்டும் என்று ஆசை இருந்தால் எழுதுங்கள் புகழன் - நல்வாழ்த்துகள்