Saturday, April 2, 2011

பாகிஸ்தான் VS இலங்கை - வெல்லப் போவது யார்?

ஹய் நண்பர்களே! மிக நீண்ட காலத்திற்குப் பின் மீண்டும் பதிவுலகிற்கு வந்துள்ளேன். எழுதவில்லை என்றாலும் அவ்வப்போது வந்து நண்பர்களின் பதிவைப் படிப்பதுண்டு. இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும்தானே விளையாடுகின்றன. தலைப்பில் பாகிஸ்தான் எப்படி வந்தது என்று கேள்வியும் கேட்கலாம். சும்மா ஒரு கற்பனைதான். ஆனால் இதில் ஒருவித அரசியல் இருப்பதால் இப்படித் தலைப்பிட்டுள்ளேன். அரையிறுதியில் இந்தியா வென்றது. எனவே பாகிஸ்தான் இறுதிக்கு செல்ல முடியவில்லை. ஒருவேளை பாகிஸ்தான் வென்றிருந்தால் என் தலைப்பில் இருப்பதுபோலவே பாகிஸ்தான் VS இலங்கை என்றுதான் இன்றைய ஆட்டம் இருந்திருக்கும். இப்படி இருந்திருந்தால்...
இந்தியாவும் இலங்கையும் விளையாடும் இந்நேரத்தில் எப்படியெல்லாம் மெஸேஜ் வருகிறது என்பதைப் பார்த்தால் அய்யோ ரெம்பக் கொடுமை. உதாரணத்திற்கு ஒன்று.

உலகக்கோப்பை சீதையாம்.இந்தியா ராமனாம்.1983ல் மணமுடித்தபின் 1996ல் ராவணன்(இலங்கை)அவளை கவர்ந்து போய்விட்டானாம்.இன்று மீட்பு யுத்தமாம். இப்படி ஒரு குறுஞ்செய்தி பரவிக்கொண்டிருக்கிறது... இதன் படி பார்த்தால் 96 க்குப்பின் சீதையை ஆஸ்திரேலியாக்காரன் கொண்டு போய் பனிரெண்டு ஆண்டுகளாக வைத்திருக்கிறானே? சரி அது போகட்டும். இன்றைக்கு மேட்சில் தோற்றுவிட்டால் ராவணன் ஜெயித்து சீதையை அவனே வைத்துக் கொண்டு விடுவான், ராமாயணமே தப்பாகி விடுமே! குறுஞ்செய்தி தேசபக்தர்களே...கொஞ்சம் திங்க் பண்ணுங்க...


என்றெல்லாம் மெஸேஜ் வருகிறது.அதிருக்கட்டும்.நம் தலைப்பின் படிஇப்படி இருந்தால்...

அதாவது பாகிஸ்தானும் இலங்கையும் இறுதிப் போட்டிக்கு வந்திருந்து... இப்போது விளையாடிக் கொண்டிருந்தால்...

நீங்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள்?


பாகிஸ்தான் தீவிரவாத நாடு, இந்தியாவுக்கு பரம எதிரி என்றெல்லாம் கருத்துப் பரவல் இங்கே அதிகம். அதுவும் நம் தமிழக பத்திரிகைகள் செய்தி வெளியிடும் தன்மையே உங்களுக்கு நன்கு தெரியும்.


இன்னொரு பக்கம் இலங்கை.

தமிழர்களை இனப்படுகொலை செய்த நாடு. இன்றும் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரங்களையே கேள்விக்குறியாக்கி வருகிறது.


இதையெல்லாம் தாண்டி நடுநிலையாக அதாவது விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கக் கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் இங்கே இந்தக் கேள்வியை முன் வைக்கிறேன்.


உங்கள் ஆதரவு யாருக்கு?

யார் வெல்ல வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள்?


பின்னூட்டத்திலும் சொல்லலாம். வலது புறம் உள்ள ஆப்ஷனிலும் கிளிக் செய்து விட்டுப் போகலாம்.


பதில் அவசியம்.


நன்றி.

மீண்டும் சந்திப்போம்.


இப்படிக்கு,

உங்கள் புகழன்.

3 comments:

புதுகைத் தென்றல் said...

இந்தியா மேல நம்பிக்கை இருக்கு. ஆனா இலங்கை அணியும் சோடை இல்லையே!!! மலிந்தவை எதிர்கொள்வது கஷ்டம். இருவரும் சமமான போட்டியாளர்கள் என்பது என் எண்ணம்
எனக்கென்னவோ 50=50 என்று தான் இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

இந்தியா வென்றது இந்த கணத்தில்.

baleno said...

தமிழர்களை இனப்படுகொலை செய்த நாடு. இன்றும் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரங்களையே கேள்விக்குறியாக்கி வருகிறது.

இது நீங்களும் பல தமிழக பதிவர்களும் செய்யும் கருத்து உருவாக்கம்.