Saturday, June 20, 2009

ஜில்லென்று ஒரு ரயில் பயணம்

அன்பு நண்பர்களே!

ப்ளாக் பக்கம் வந்தே பல மாதங்கள் ஆகிவிட்டன. மீண்டும் எழுத வந்திருக்கிறேன். இந்த முறை நான் எழுதுவதோடு மட்டுமின்றி பிற பதிவர்களையும் எழுத வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவை இடுகின்றேன். (அவங்கள்லாம் ஏற்கனவே ரெம்ப எழுதிக்கிட்டுதான் இருக்காங்க - அது வேற விஷயம்)

இது ஒரு தொடர் பதிவு.

அய்யோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! தொடர் பதிவு என்றதும் ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள். என் அன்புக் கட்டளையை ஏற்று செயல்படுத்துவீர்கள் என்று நினைக்கிறேன். சரி விஷயத்திற்கு வருவோம். கீழே உள்ள வீடியோ கிளிப்பிங் சமீபத்தில் நான் பார்வையிட்டது.
நீங்களும் பார்வையிடுங்கள். பதிவிடுங்கள்.
ஆம்! இந்த கிளிப்பிங்கைப் பார்த்து விட்டு இதற்கு தகுந்த சிறுகதை ஒன்று (அது பெரிய சிறுகதையாகவும் இருக்கலாம், ஒருபக்க சிறுகதையாகவும் இருக்கலாம்) எழுதிப் பதிவிட வேண்டும். கண்டிப்பாக படத்திற்கு தகுந்த கதையாக இருக்க வேண்டும்.

வீடியோ கிளிப்பிங் போகலாமா!

இரத்தத்தை உறைய வைக்கும் இரயில் பயணம்!

முன் குறிப்பு: பெண்கள், குழந்தைகள், இதய பலவீனமுள்ளவர்கள் தயவு செய்து படக் காட்சியைப் பார்வையிட வேண்டாம்.


பின் குறிப்புகள்:
1. படக் காட்சிக்கு தகுந்த சிறுகதை எழுதிப் பதிவிட வேண்டும்.
2. நீங்கள் பதிவிடும் தளத்திலும் இந்த கிளிப்பிங்கை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது எனது தளத்திற்கும் லிங்க் கொடுக்கலாம்.
3. குறைந்தது அடுத்த இரண்டு பதிவர்களை அழைக்க வேண்டும்.
4. மறக்காமல் பதிவிட்டபின் எனக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
5. ரெம்ப முக்கியம் கமென்ட் போட்டுட்டுப் போங்க! (கேட்டு வாங்குறது அசிங்கமாத்தான் இருக்கு - இருந்தாலும் பரவாயில்லை)என்ஜாய் மக்கள்ஸ்!

நான் அழைக்கும் இரு பதிவர்கள்:
1. கதாசிரியை திவ்யா
2. சாத்தான் குளம் ஆசிப் மீரான்

பி.பி. குறிப்பு:
இரண்டாம் பதிவரை நான் அழைக்கக் காரணம் அடுத்த பதிவில்...

16 comments:

நிஜமா நல்லவன் said...

மீண்டும் உங்கள் பதிவுகள் வருவதில் மகிழ்ச்சி!

கோபிநாத் said...

\\நிஜமா நல்லவன் said...
மீண்டும் உங்கள் பதிவுகள் வருவதில் மகிழ்ச்சி!
\\

ரீப்பிட்டே ;)

சென்ஷி said...

welcome back!

தமிழ் பிரியன் said...

ஆகா.. திரும்பி வரும் போதே ஒரு தொடர் பதிவோட வருகிறீர்களே.. வாங்க வாங்க!

திகழ்மிளிர் said...

வருக நண்பரே

புதுகைத் தென்றல் said...

வாங்க வந்து கலக்குங்க.

கதையெல்லாம் எனக்கு எழுதத் தெரியாது. அதனால் அப்படி ஓரமா உக்காந்து என்ன நடக்குதுன்னு பாத்துக்கறேன்.

வால்பையன் said...

வீடியோ பார்த்தேன்!
மனநலம் குன்றியவர் போல!
பாவம் யாராவது காப்பாறி இருக்கலாம்!

புகழன் said...

பதிவர்களே மீண்டும் உங்களுடன் உலா வருவதில் மிக்க மகிழ்ச்சி

புகழன் said...

வருகை தந்த நிஜமா நல்லவன், கோபிநாத், சென்ஷி, தமிழ்பிரியன், திகழ் மிளிர், புதுகைத் தென்றல், வால்பையன் அனைவருக்கும் நன்றி.

புகழன் said...

// புதுகைத் தென்றல் said...
வாங்க வந்து கலக்குங்க.

கதையெல்லாம் எனக்கு எழுதத் தெரியாது. அதனால் அப்படி ஓரமா உக்காந்து என்ன நடக்குதுன்னு பாத்துக்கறேன்.

//

யக்கா கதையெழுத நான்தான் உங்களுக்கு அழைப்பு விடுக்கவி்ல்லை. ஆனால் யாராவது இந்த டேக்கில் கண்டிப்பாக உங்களையும் எழுத அழைப்பார்கள். நீங்க தப்பிக்க முடியாது.

புகழன் said...

//வால்பையன் said...
வீடியோ பார்த்தேன்!
மனநலம் குன்றியவர் போல!
பாவம் யாராவது காப்பாறி இருக்கலாம்!

//


நிறைய பேர் காப்பாத்த முயற்சி செய்தும் முடியவில்லை.
விடியோவை நல்லா பார்த்தா தெரியும்.

புதுகைத் தென்றல் said...

கூடிய சீக்கிரம் தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை அக்கானு சொல்லி பதிவு போடும் நிலை வரும்னு நினைக்கிறேன்.:)))) அம்புட்டு பேரும் என்னிய அக்கான்னு சொல்றீங்களே. சமீபத்துல தான் ரொம்ப் நாளா என்னிய அக்கான்னு கூப்பிட்டவரு என்னை விட மூத்தவரு!!!!ன்னு கண்டு பிடிச்சேன்.

புதுகைத் தென்றல் said...

கதை எழுத என்னை யாரும் டேக் பண்ண மாட்டாங்க. எனக்கு கதை எல்லாம் எழுத வராது, கட்டுரையே தொடரும் போட்டு எழுதற ஆளுன்னு எல்லோருக்கும் தெரியும் புகழன்.

:))))

வீணாபோனவன் said...

பெண் பதிவர் அனைவரும் ஆண் பதிவருக்கு "அக்கா" தானுங்க (அவங்க தங்கையாக இருந்தாலும்) :-)

-வீணாபோனவன்.

விருதுநகர் ஆனந்த் ராஜ் said...

...தனி ஆளாக தானே பிறந்தேன்..?! ஒரு நல்ல வெள்ளிகிழமையிலே கிளம்பு முடிவெடுத்தேன். ரயில் தான் சௌவ்கரியமாக இருக்கும்.. எல்லோரையும் அழைத்து பார்த்தேன். யாரும் என்னோடு வர தயாராய் இல்லை. . "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா.. போங்க",..னு கைவீசி..

காலனை துனைகழைத்தேன்.

இதோ.. அவனும் வந்தான். ஒரு வேளை "சனிகிழமை" கிளம்பியிருந்தால் யாரவது கூட "வந்திருப்பார்களோ"..!!

.......................இது போதும்...(ஜோக் பண்ண முடியவில்லை..!)

cheena (சீனா) said...

நல்லாத்தான் இருக்கு - தொடர்ந்து பார்த்துட்டுச் சொல்றேன் - சரியா - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா