Wednesday, August 6, 2008

ஆத்துல போட்டாலும் அளந்து போடு...

இந்த தலைப்பு ஒரு பழமொழி.
இதற்கு என்ன விளக்கம் என்று பலரும் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
நான்கூட யோசிச்சேன்.
ஆனா ஒருநாள் ரேடியோ எஃப்.எம். (எந்தச் சேனல்னு மறந்து போச்சு)
கேட்கும்போது அதுல இந்த பழமொழிக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
தேங்காய ஆத்துக்குள் போடும்போது சைஸ அளந்து போடனும் அப்படி இப்படின்னு ஒரு கலாய்த்தல் நிகழ்ச்சி அது.
இந்த நிகழ்ச்சியைக் கேட்டதும் இந்தப் பழமொழியைப் பத்தி ரெம்ப சீரியஸா யோசிக்க ஆரம்பிச்சேன்.
அப்ப எனக்கு தோன்றிய கருத்தை இப்ப உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“ஆத்துல போட்டாலும் அளந்து போடு”
இதுக்கு பொதுவா சொல்லுற கருத்து என்னன்னா... ஆறு பிரம்மாண்டமானது அது தனக்கு தேவையில்லாத பொருட்களையெல்லாம் ஆத்துல போட்டுதான் கழிவை நீக்குவாங்க.
அப்போது அப்படி போடும் போது அளந்து அதாவது கவனித்து தேவையா இல்லையா என்பதைப் பார்த்து போடனும் என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்
அவாள்கள் பாஷையில்
ஆத்துல - வீட்டுல
இதன் படி
வீட்டுக்கே - குடும்பத்துக்கே செலவு செய்தாலும் கணக்கிட்டு செய்ய வேண்டும்.

டிஸ்கி: இதற்கு நீங்களும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

9 comments:

வால்பையன் said...

ஆறு- ஆத்து
அளந்து-கவனித்து

இவ்வளவு ஆழமா நுண்ணரசியல் பண்ண எங்களுக்கு சரக்கு பத்தாது தலைவா

வால்பையன்

புகழன் said...

//
வால்பையன் said...
ஆறு- ஆத்து
அளந்து-கவனித்து

இவ்வளவு ஆழமா நுண்ணரசியல் பண்ண எங்களுக்கு சரக்கு பத்தாது தலைவா

//


எனக்கு அரசியலெல்லாம் தெரியாது.
எனக்கு தோன்றியது அவ்வளவுதான்.

மங்களூர் சிவா said...

ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது அப்படிங்கறதைத்தான் இப்படி சொல்றாங்களோ!??

புகழன் said...

//மங்களூர் சிவா said...
ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது அப்படிங்கறதைத்தான் இப்படி சொல்றாங்களோ!??

//

வாங்க தல...

நீங்க சொன்ன இந்தப் பழமொழிக்கும் ஏதாவது எஃப்.எம். கேட்டாதால் சீரியஸா(!) சிந்திக்க முடியும் போல

Iyappan Krishnan said...

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

ஆற்றுதல் - நற்காரியங்கள் செய்தல். அப்படிச் செய்வதில் செலவிட்டாலும் அதை முறையாக செய்யவேண்டும். தாம் தூம் என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கக் கூடாது.


ஹ்ம்ம்... திரிந்துப் போன பழமொழிகள் ஆயிரம்

Sumathi. said...

ஹலோ,

//குடும்பத்துக்கே செலவு செய்தாலும் கணக்கிட்டு செய்ய வேண்டும்.//

இது தான் கரெக்ட்.

புகழன் said...

// Jeeves said...
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

ஆற்றுதல் - நற்காரியங்கள் செய்தல். அப்படிச் செய்வதில் செலவிட்டாலும் அதை முறையாக செய்யவேண்டும். தாம் தூம் என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கக் கூடாது.


ஹ்ம்ம்... திரிந்துப் போன பழமொழிகள் ஆயிரம்

//

வாங்க ஜீவ்ஸ்
புதிய கருத்துக்கு நன்றி

புகழன் said...

வாங்க சுமதியக்கா
வருகைக்கு நன்றி

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஓ, கார்பன் கிரெடிக்ட் சொல்றாங்களே, அதுமாதிரி அந்தக்காலத்துல (ஆத்துல) குப்பை கிரெடிட் ஏதேனும் இருந்திருக்குமோ? =)))