Wednesday, May 7, 2008

என்ன பதில்?

மலராத மொட்டே -
நீ பூக்க மாட்டாயா?

கசந்துவிட்ட கனியே -
நீ இனிக்க மாட்டாயா?

வளராத செடியே -
நீ உயரமாட்டாயா?

அணையாத விளக்கே -
நீ ஒளிரமாட்டாயா?

வாய் மூடிய குயிலே -
நீ கூவ மாட்டாயா?

வலுவிழந்த காற்றே -
நீ வீசமாட்டாயா?

இறங்காத மழையே -
நீ பொழியமாட்டாயா?

தளர்ந்து விட்ட அறிவே -
நீ உணர மாட்டாயா?


என்ன ஆயிற்று உங்களுக்கு?
காரணமென்ன தடைகளுக்கு?

நீங்களும் இன்று வேலை நிறுத்தமா?!

உங்கள் இயக்கம் எங்கே?
அகிலம் இருளுகிறது இங்கே!

பதில் ஒன்றைத் தாருங்கள் - இல்லையேல்
அழிந்து சாகுங்கள்!

தொடுத்த வினாக்களுக்கு
கிடைத்த விடை -
ஒரே விடை -

“மனிதனே இன்று அழிவுப் பாதையில்...
நாங்கள் மட்டும் ஏன் நேர் பாதையில்.....?”

16 comments:

Divya said...

கேள்வி கனைகள் நல்லாயிருக்கு புகழன்!

ஸ்ரீ said...

என்ன பதில் சொல்லலாம்னு யோசிக்கிறேங்க புகழன். நீங்களே சொல்லிடுங்களேன் :)

Thamiz Priyan said...

:)

நிஜமா நல்லவன் said...

பதில் சொல்லத்தெரியல:(

தமிழ் said...

இயற்கை
இயங்க மறுத்தால்
மனிதன்
மயானத்தில் தான்
இருக்க வேண்டும்

கேள்விக்கணைகளைத் தொடுத்து
விடை
வினாவிய விதம்
அருமை

புகழன் said...

// Divya said...
கேள்வி கனைகள் நல்லாயிருக்கு புகழன்!
//

வருகைக்கு நன்றி திவ்யா

புகழன் said...

வருகைக்கு நன்றி ஸ்ரீ
//
என்ன பதில் சொல்லலாம்னு யோசிக்கிறேங்க புகழன். நீங்களே சொல்லிடுங்களேன் :)
//

கேள்வி கேட்டது இயற்கையிடம் ஸ்ரீ
இயற்கை பதிலும் கொடுத்து விட்டது. (என் கற்பனையில்தான்)
உண்மையிலேயே இப்படி இருந்தால் என்ன ஆகும்?
சிந்திக்க வேண்டிய விஷயம்.

புகழன் said...

//தமிழ் பிரியன் said...
:)

//

வருகைப் பதிவு மட்டும்தானா தமிழ் பிரியன்
கருத்துக்கள் ஏதும் இல்லையா?

புகழன் said...

வருகைக்கு நன்றி!
// நிஜமா நல்லவன் said...
பதில் சொல்லத்தெரியல:(

//

பதில் தெரிந்திருந்தால் கேள்வியே எழுந்திருக்காது.

இனி இப்படிப்பட்ட கேள்விகள் எழக்கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கேள்விகளே

புகழன் said...

வருகைக்கு நன்றி திகழ்மிளிர்

//திகழ்மிளிர் said...
இயற்கை
இயங்க மறுத்தால்
மனிதன்
மயானத்தில் தான்
இருக்க வேண்டும்
//
கவிதைக்கு (அப்படின்னு சிலர் சொல்லிக்கிறாங்க) கவிதையிலேயே பதில் கூறிய விதம் அருமை.

//
கேள்விக்கணைகளைத் தொடுத்து
விடை
வினாவிய விதம்
அருமை
//
பாராட்டிற்கு நன்றி திகழ்மிளிர்

தாரணி பிரியா said...

நிறைய நேரம் யோசிக்க வைத்தது.
தப்பு செய்யறது எல்லாமே நாமதான்
அடி உதை மட்டுமல்ல
சுற்றுபுழ சீர்கேடு இயற்கை செல்வங்களை அழிக்கறது இப்படி நிறைய தப்பு செய்யறது எல்லாமே நாமதான்
நாம திருந்தலனா இப்படித்தான் நடக்கும்

புகழன் said...

வருகைக்கு நன்றி தாரணி
//
தாரணி பிரியா said...
நிறைய நேரம் யோசிக்க வைத்தது.
தப்பு செய்யறது எல்லாமே நாமதான்
அடி உதை மட்டுமல்ல
சுற்றுபுழ சீர்கேடு இயற்கை செல்வங்களை அழிக்கறது இப்படி நிறைய தப்பு செய்யறது எல்லாமே நாமதான்
நாம திருந்தலனா இப்படித்தான் நடக்கும்
//
அடி உதை என்பது ஒரு குறிச் சொல் மட்டுமே.
மனிதனின் அட்டூழியங்கள் அனைத்தையும் ஒரு சிறு கவிதையில் கூறிவிட முடியாதுதான்.
அடி உதை என்பதற்கு பதில் வேறுஏதாவது ரெம்பவே பொருத்தமான ஒரு சொல்லைக் கையாண்டிருக்கலாம்.
எனக்கு தெரியவில்லை யாராவது சொல்லுங்களேன்.

தமிழ் said...

/அடி உதை என்பது ஒரு குறிச் சொல் மட்டுமே.

மனிதனின் அட்டூழியங்கள் அனைத்தையும் ஒரு சிறு கவிதையில் கூறிவிட முடியாதுதான்./

உண்மை தான்


/மனிதனே இன்று அடி உதையில்
நாங்கள் மட்டும் ஏன் நேர் பாதையில்/

அல்லது

/மனிதனே இன்று அழிவு பாதையில்
நாங்கள் மட்டும் ஏன் நேர் பாதையில்/

இரண்டும் ஒன்று தான்

புகழன் said...

நன்றி திகழ்மிளிர்
மாற்றிக் கொண்டேன்.
நீங்கள் கூறியது பொருத்தமாக உள்ளது.

cheena (சீனா) said...

நல்ல கேள்வி பதில் - நல்ல மறுமொழிகள் - நல்வாழ்த்துகள்

அணையாத விளக்கே
நீ ஒளிர மாட்டாயா ?

அணையாத விளக்கெனில் ஒளிரும் விளக்கு தானே !

ஏற்றாத விளக்கே என்பது சரியாக இருக்குமோ

புகழன் said...

//
cheena (சீனா) said...
நல்ல கேள்வி பதில் - நல்ல மறுமொழிகள் - நல்வாழ்த்துகள்

அணையாத விளக்கே
நீ ஒளிர மாட்டாயா ?

அணையாத விளக்கெனில் ஒளிரும் விளக்கு தானே !

ஏற்றாத விளக்கே என்பது சரியாக இருக்குமோ
//

அணையாத விளக்கே இன்று அணைந்து விட்டது.
அதைப் பார்த்து கேட்கிறான் கேள்வியாளன்

அணையாத விளக்கே (நீ அணைந்து விட்டாயே)
(மீண்டும்) நீ ஒளிர மாட்டாயா?

என்று.