Sunday, October 12, 2008

கா.மு - கா.பி. - ரிவர்ஸபுல் (Reversable)

பதிவுலக நண்பர் வால்பையன் அவர்களின் ர்ரிவர்ஸபுல்(irreversable) ஒரு புதிய முயற்சி என்ற இந்தப் பதிவையும் இதற்கு முந்தைய ர்ரிவர்ஸபுல் பற்றிய பதிவையும் படித்து விட்டு இதுபோல் ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

பாவம் சக பதிவர்களை கஷ்டத்திற்குள்ளாக்க வேண்டாம் என்ற நல்ல நோக்கத்தில் அந்த முயற்சியை மறந்திருக்கும் போது இன்று தினமணி இணைப்பு இதழான தினமணி கதிரில் ‘பேல் பூரி’ என்ற பகுதியைப் படித்தேன். அதில் வந்த ஒரு பகுதி மிகவும் பிடித்திருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இனி ரிவர்ஸபுல்

காதலிப்பதற்கு முன்

அவன்: “ஆம். எதிர் பார்த்துதான் காத்திருக்கிறேன்”.

அவள்: ‘‘என்னை விட்டு பிரிய நினைக்கிறாயா?”

அவன்: “இல்லை. அப்படி நினைக்காதே.”

அவள்: “என்னைக் காதலிக்கிறாய் தானே?”

அவன்: “நிச்சயமாக... நிச்சயமாக...”

அவள்: “உன்னை நம்பி மோசம் போய் விடமாட்டேனே?”

அவன்: “தயவு செய்து இப்படியெல்லாம் கேட்காதே...”

அவள்: “என்னை முத்தமிடுவாயா?”

அவன்: “வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்...”

அவள்: “எப்போதாவது என்னை அடிப்பாயா?”

அவன்: “உனக்கு என்ன பைத்தியமா? அப்படியெல்லாம் யோசிக்காதே”

அவள்: “எப்போதும் என்னோடுதானே இருப்பாய்?”

அவன்: “யெஸ்... யெஸ்...”

அவள்: “டார்லிங்!”

காதலித்ததிற்குப் பின்னான கதையைக் கீழே இருந்து மேலே படித்துப் போகவும்.

12 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இது ஒரு நல்ல உத்தி!

கோபிநாத் said...

:))

தமிழன்-கறுப்பி... said...

தமிழில் படிக்கவும் நல்லாருக்குது...

மங்களூர் சிவா said...

இருக்கு
நல்லா
ரொம்ப
ரிவர்ஸபுல்

நிஜமா நல்லவன் said...

இருக்கு
நல்லா
ரொம்ப
ரிவர்ஸபுல்

நிஜமா நல்லவன் said...

Nalla irukku...:)

வால்பையன் said...

அருமையா இருக்கு

pudugaithendral said...

கல்யாணத்துக்கப்புறம் நிலமை தலைகீழாக மாறிவிடுகிறது.

உங்க ரிவர்ஸபுல் சூப்பர்.

தாரணி பிரியா said...

:):):):):)

Divya said...

Intresting:))

பூச்சாண்டியார் said...

புகழன்,
உங்களை சினிமா தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரமிருப்பின் தொடருங்கள்.

http://boochaandi.blogspot.com

-பூச்சாண்டியார்

Sanjai Gandhi said...

அட வித்தியாசம இருக்கே.. எப்படி படிச்சாலும் பொருந்திப் போகுது.. அருமை.. தொடரட்டும்.. :)