Monday, October 27, 2008

தமிழ் சினிமா இழந்தது...

முன் குறிப்பு: கடைசியில் பின் குறிப்பு உள்ளது தவறாமல் படித்து விட்டுச் செல்லவும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
5 வயதிருக்கும் (சரியாகத் தெரியவில்லை). முதலில் பார்த்த படம் நன்றாக நினைவு இருக்கின்றது. எங்க அப்பா வேலை செய்த கடையின் முதலாளி ஒரு தியேட்டர் வைத்திருந்தார். எங்கப்பா எங்களையெல்லாம் அங்கதான் கூட்டிட்டு போவாங்க. என்னைய முதல்ல கூட்டிட்டு போன படம் ரஜினி நடித்த பில்லா. படத்துல வர்றது எல்லாம் உண்மைதான்னு நினைக்கிற வயசுதான அது. அதனால எங்க அப்பாகிட்ட கேட்டேன். ரஜினி செத்த பிறகு மறுபடியும் எப்படி வந்து நடிக்கிறார்னு. அப்பத்தான் எங்க அப்பா டபுள் ஆக்ட் பற்றியும் சினிமா என்பது உண்மை அல்ல என்பது பற்றியும் விளக்கிச் சொன்னாங்க. அதனால எனக்கு விவரம் தெரிந்த பின் எந்த படமும் எந்த உணர்வையும் ஏற்படுத்தல. ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்காகத்தான் எடுத்துக்கிட்டேன். எனவே எந்தப் படமும் அவ்வளவாக மனசில் நிக்கல. அப்புறமா உமர் முக்தார் நினைவில் உள்ளது. தற்போது பழைய படங்களை மீண்டும் தற்கால அறிவு, அரசியல், சமூக நிலை இவற்றோடு ஒப்பிட்டு கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக பார்க்கிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
ரமணா - அழகி இரண்டில் எதுவென்று தெரியவில்லை. ஏனெனில் இரண்டுமே 5 வருடங்களுக்கு முன் பார்த்தது. அதன் பின் படம் ஏதும் பார்க்கவில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம் - விசிடிலதான்.
இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்களே. நாம ஜாலியா இங்க திருட்டு விசிடில பார்க்கிறோமேன்னு உணர்ந்தேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பழையதில் கிழக்குச் சீமை - இன்றுவரை அண்ணண் தங்கை பாசம் என்றால் பாசமலர் படத்தைத்தான் சொல்வார்கள். ஆனால் எனக்கு என்னவோ கிழக்குச் சீமை முன்னதை முந்திவிட்டதாகத் தோன்றுகிறது. ஏ.ஆர்.ஆர். இசையும் ஒரு காரணம். புதியதில் அரண் - படம், சினிமா கலை, நுணுக்கம் இதையெல்லாம் தாண்டி நம் நாட்டிலேயே நம் இராணுவத்தால் பாதிக்கப்படும் கஷ்மீரிகளின் சோகங்கள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
ரஜினியின் குசேலனைத் தொடர்ந்த கர்நாடகப் பிரச்சினை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
தொழில்நுட்பம் பற்றியெல்லாம் தெரியாது. தசாவதாரம் கொஞ்சம் திகைக்க வைத்தது. நல்ல பிரமாண்டம் (ஓசில பார்த்தா அப்படித்தான் இருக்கும் போல) :)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறையவே படிப்பேன். என் நண்பர்கள் கூட சொல்வார்கள். படமே பார்க்கிறதில்லைன்னு சொல்ற. பின்ன எப்படி எல்லா படத்தப் பத்தியும் கரெக்டா சொல்லுறன்னு. இப்பல்லாம் விமர்சணங்கள் படித்தாலே பாதி பார்த்தமாதிரி ஆகிடுது. அப்புறம் இருக்கவே இருக்கு ப்ளாக் முழுப்படத்தையும் இன்ஞ் பை இன்ஞ்சா விவரிச்சு எழுதி கண்ணு முன்னால கொண்டு வந்துடுறாங்க.

7. தமிழ்ச்சினிமா இசை?
இசை என்றாலே இளையராஜாதான் சட்டென்று ஞாபகத்துக்கு வரும்.
அடுத்து ஏ.ஆர்.ஆர்.
ஆனா இப்பல்லாம் நிறைய இசைக்கு பஞ்சமாகிவிட்டதுபோல் தமிழ் இசையமைப்பாளர்கள் நடந்து கொள்கின்றனர். காப்பி பேஸ்ட் பண்ணுற பிளாக்கர்கள் பரவாயில்லையோ என்று தோனுது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஹிந்தியில் - லகான்,
ஆங்கிலம், ஈரானியப் படங்கள் எப்பவாவது பார்ப்பதுண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படி ஒரு வாய்ப்பை தமிழ் சினிமா இழந்து விட்டது. இனிமேலும் அந்த பாக்கியம் தமிழ் சினிமாவிற்கு இல்லை என்றே தோன்றுகிறது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொழுதுபோக்குக்காக என்றால் எதிர்காலம் நன்றாகவே இருக்கும் (எவ்வளவு மோசமாக இருந்தாலும் தலிவா என்று கையசைத்து விசிலடிக்கும் ரசிகர்கள் இருக்கும்வரை). ஆனால் மக்கள்ஸ் அதை மட்டும் எதிர்பார்த்து படம் பார்க்கச் செல்வதில்லையே.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அந்த நாளை ரெம்பவே எதிர்பார்க்க வேண்டும் நாம். வாசிப்புப் பழக்கம் குறைந்ததற்கு தற்கால அதிவேக கலாச்சாரத்துடன் சினிமாவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே வாசிப்புப் பழக்கம் பெருகும்.

பின்குறிப்பு: எல்லோரும் தொடர் பதிவு எழுதி வெளையாடுறாய்க. நம்மல சேத்துக்கவே மாட்டிங்கிறாய்களேன்னு ரெம்பவே வருத்தமா இருந்திச்சு. யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ஒவ்வொரு தொடர்பதிவையும் விடாம படிப்பேன். ஆனா பூச்சாண்டி என்னைய எழுத அழைத்ததும் எனக்கு திக்குனு ஆகிப் போச்சு. (தொடர்பதிவு எழுத அழைத்தால் மறுக்கக் கூடாது என்பது பதிவுலகில் எழுதப்படாத விதியாமே) அப்பறம்தான் யோசிச்சேன். ஆசைப் பட்டது ரெம்பத் தப்புன்னு. என்ன எழுதுறது. நாம என்ன பெரிய்ய எழுத்தாளரா என்ன?

சினிமா பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
இசை பத்தி என்ன நினைக்கிறீங்க?
தொழில்நுட்பம் பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று விழாக்காலங்களில் பிரபல்ய ஹீரோ ஹீரோயின்களிடம் பேட்டி எடுப்பது போல் இருந்தால் என்ன பதில் சொல்றதுன்னு திகைச்சுப் போயிட்டேன். (மவனே மத்தவங்க எழுதுனத படிக்க மட்டும் தெரியுது எழுதமாட்டியோன்னு யாரும் திட்டாதீங்க) இப்படியான சிக்கல்கள் ஒருபுறம் அதிகப்படியான ஆபீஸ் வேலைகள் மறுபுறம் (ஆமா... அப்படியே வேளை இல்லைன்னாலும் எழுதிக் கிழிச்சன்னு யாரோ சொல்றது கேட்குது)
இப்ப தீவாளி லீவுல அதுனால இதுக்கு ஒரு முடிவு கட்டிறனும்னு எழுதிட்டேன்.

அதுக்கப்புறம் முக்கியமான விஷயம் இந்த ஆட்டத்தைத் தொடர யாரையாவது அழைக்கனுமாமே? என்னதான் ரூல்ஸ் இருந்தாலும் பரவாயில்லை அய்யோ பாவம் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு சும்மா இருக்கலாம்னு நினைச்சா சட்டுன்னு ஒன்னு தோனி்ச்சு...
(ஏற்கனவே நிறைய பேர் எழுதிட்டாங்கடா சோம்பேறி... நீ யாரைக் கூப்பிட்டாலும் அவங்க எழுதியிருப்பாங்க)
அய்யோ யாரு திடீர்னு திட்டுறது? (ஓ! மனசாட்சியா?)

நம்மல மாதிரியே தொடர்பதிவு எழுத ஆசைப்பட்டு யாராலும் அழைக்கப்படாமல் சிலர் இருப்பாங்க. அப்படித் தேடி மூன்று பேரை மட்டும் அழைக்கிறேன்.

மின்னல் - சுமதி
ஊஞ்சல் - தாரணி பிரியா
நல்ல நண்பன் - பாபு

29 comments:

cheena (சீனா) said...

நன்றாக இருக்கிறது கேள்வி பதில் - யதார்த்தமான பதில்கள் - ஐந்து வயதில் ஆரம்பித்த சினிமா கசந்ததேன் - சினிமா உலகம் இழந்த வாய்ப்பினைத் திரும்பத் தர முயற்சி செய்யுங்களேன். நல்வாழ்த்துகள் - தீபாவளித் திருநாள் வாழ்த்துகளுடன்

புகழன் said...

//
cheena (சீனா) said...
நன்றாக இருக்கிறது கேள்வி பதில் - யதார்த்தமான பதில்கள் - ஐந்து வயதில் ஆரம்பித்த சினிமா கசந்ததேன் - சினிமா உலகம் இழந்த வாய்ப்பினைத் திரும்பத் தர முயற்சி செய்யுங்களேன். நல்வாழ்த்துகள் - தீபாவளித் திருநாள் வாழ்த்துகளுடன்
//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

//
சினிமா உலகம் இழந்த வாய்ப்பினைத் திரும்பத் தர முயற்சி செய்யுங்களேன்.
//

இன்னுமா என்ன நம்புறீங்க?

நிஜமா நல்லவன் said...

யதார்த்தமாக இருக்கிறது.....பின் குறிப்பு சூப்பர்!

புகழன் said...

நன்றி நிஜமா நல்லவன்

Thamiz Priyan said...

நிறைய பதில்கள் சேம் பிள்ட்டா இருக்குதே... :) குட்.. :)

தமிழ் said...

/சினிமா பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
இசை பத்தி என்ன நினைக்கிறீங்க?
தொழில்நுட்பம் பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று விழாக்காலங்களில் பிரபல்ய ஹீரோ ஹீரோயின்களிடம் பேட்டி எடுப்பது போல் இருந்தால் என்ன பதில் சொல்றதுன்னு திகைச்சுப் போயிட்டேன்./

அருமை

சென்ஷி said...

Good :)!

pudugaithendral said...

அப்பாடி இந்தத் தடவை தொடர் பதிவிலிரிந்து நான் தப்பிச்சிட்டேன்.

:))))))))))))))

உங்கள் பதிவு யதார்த்தமாக இருந்ததுன்னு மத்தவங்க சொல்லியிருக்காங.

நான் “படு யதார்த்தமா” இருக்குன்னு சொல்லிக்கிறேன்.

(டேக்லை உங்களை யாரும் மாட்டறது இல்லைன்னு சொல்லியிருக்கீங்க. நான் மாட்டிவைக்கிறேன் இருங்க.

திருக்குறள் கதை எழுத வாங்க)

புகழன் said...

//
தமிழ் பிரியன் said...
நிறைய பதில்கள் சேம் பிள்ட்டா இருக்குதே... :) குட்.. :)
//

எல்லாருமே ஒரே மாதிரியாத்தான் சிந்திக்கிறாங்க போல

புகழன் said...

//
திகழ்மிளிர் said...

அருமை

:)

புகழன் said...

--
சென்ஷி said...
Good :)!

--

எதுக்கு ஸ்மைலி பக்கத்துல ஒரு ஆச்சரியக் குறி?!

புகழன் said...

--
புதுகைத் தென்றல் said...
அப்பாடி இந்தத் தடவை தொடர் பதிவிலிரிந்து நான் தப்பிச்சிட்டேன்.

:))))))))))))))

உங்கள் பதிவு யதார்த்தமாக இருந்ததுன்னு மத்தவங்க சொல்லியிருக்காங.

நான் “படு யதார்த்தமா” இருக்குன்னு சொல்லிக்கிறேன்.

(டேக்லை உங்களை யாரும் மாட்டறது இல்லைன்னு சொல்லியிருக்கீங்க. நான் மாட்டிவைக்கிறேன் இருங்க.

திருக்குறள் கதை எழுத வாங்க)

--

அய்யய்யோ அக்கா உங்கள கவனிக்காம விட்டுட்டேனே.

நீங்கள்ளலாம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளு

நிறையபேர் உங்களை எழுதச் சொல்லிப்பாங்கன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்.
இனி விட மாட்டேன்.

Thamira said...

எனக்குத்தெரிஞ்சு கிரியேஷனுக்கு அதிக வேலை இல்லை எனினும் இவ்வளவு ஹிட்டான தொடர்பதிவு வேறெதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். உங்களோடதும் நன்றாக இருந்தது (எல்லோருடையதையும் போலவே). வாழ்த்துகள்.!

வால்பையன் said...

நீங்க என்னைவிட ரொம்ப பெரியவர்ன்னு நல்லாவே தெரியுது!
ஏன்னா நான் முதன் முதல் கட்டு அடிச்சு பார்த்த படம் பில்லா

வால்பையன் said...

//இரண்டுமே 5 வருடங்களுக்கு முன் பார்த்தது. அதன் பின் படம் ஏதும் பார்க்கவில்லை.//

நீங்கள் ரொம்ப நல்லவரு

வால்பையன் said...

//இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்களே. நாம ஜாலியா இங்க திருட்டு விசிடில பார்க்கிறோமேன்னு உணர்ந்தேன்.//

தவறை உணரும் போதே குற்றம் மன்னிக்கப்படுமாமே

வால்பையன் said...

//அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//

இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது!
ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு

புகழன் said...

--

வால்பையன் said...
நீங்க என்னைவிட ரொம்ப பெரியவர்ன்னு நல்லாவே தெரியுது!
ஏன்னா நான் முதன் முதல் கட்டு அடிச்சு பார்த்த படம் பில்லா

--

அதான் பதிவுகளில் சிலநேரம் உண்மைகளை எழுதக் கூடாதுங்கறது.

புகழன் said...

//

தாமிரா said...
எனக்குத்தெரிஞ்சு கிரியேஷனுக்கு அதிக வேலை இல்லை எனினும் இவ்வளவு ஹிட்டான தொடர்பதிவு வேறெதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். உங்களோடதும் நன்றாக இருந்தது (எல்லோருடையதையும் போலவே). வாழ்த்துகள்.!

//

நன்றி தாமிரா

புகழன் said...

//

வால்பையன் said...
//இரண்டுமே 5 வருடங்களுக்கு முன் பார்த்தது. அதன் பின் படம் ஏதும் பார்க்கவில்லை.//

நீங்கள் ரொம்ப நல்லவரு

//

ரெம்ப நன்றி!

புகழன் said...

---
வால்பையன் said...
//அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//

இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது!
ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு

---


ராமன் அப்துல்லா படத்துல என்ன பாட்டு வரும்?
நான் அந்தப் படம் பார்க்கவில்லை.

புகழன் said...

இப்பத்தான் கூகுள்ல தேடினேன்.

அந்தப் படத்தில் வரும் பாடல்
“உன் மதமா” பாடல்

அதுவும் பிடிக்கும்.

கேட்டிருக்கிறேன்.

வால்பையன் said...

நானும் அதைத் தான் சொன்னேன்.
மதத்தை தேடி நாம் போகவேண்டியதில்லை.
நல்லவர்களை தேடி மதம் வரும்.

புகழன் said...

அது சரி “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடலில் எங்கே மதம் வருகிறது?

இந்த அளவு கொஞ்சம்கூட புரியாமல் கண்ணில் கடவுள் மறுப்பு என்னும் திரையைப் போட்டு எல்லாவற்றையும் பார்ப்பது ஏன்?


எனக்குப் பிடிக்கும் என்று சொன்ன அந்தப் பாடலில் கஷ்மீரிகளின் துயரம் பற்றிய வரும் அவ்வளவே..


மதம் பற்றியோ, கடவுள் பற்றியோ அதில் குறிப்பிடப்படவே இல்லை.

யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வால்பையன் said...

அல்லா என்பதன் சரியான அர்த்தம் எனக்கு தெரியாது தான். ஆனாலும் பள்ளியில் படிக்கும் சிறுவனைக் கேட்டாலும் அல்லா என்பது முசல்மான்களின் கடவுள் என்று தான் சொல்லுவான். உண்மையில் அந்த பாட்டை நான் கேட்டதில்லை. அந்த பாட்டில் எங்கேயெனும் மக்களின் துயரம் இருக்கலாம். முதல் வரியில் அது எனக்கு தெரியவில்லை.

வால்பையன் said...

//யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.//

கடவுள் மறுப்பு என்பது திரை அல்ல. அதுவே விளிப்பு நிலை.

'Arnold' Bala said...

ungal karuththukkal nanraagha ullana, vaazhththukkal....

மங்களூர் சிவா said...

பதிவு சூப்பர்.

பின்குறிப்புதான் ரொம்ப சின்னதா போச்சு!!

:)))))))))))))))

Divya said...

\\காப்பி பேஸ்ட் பண்ணுற பிளாக்கர்கள் பரவாயில்லையோ என்று தோனுது.\\

:)))


பதிவு சுவாரஸியமா இருந்தது படிப்பதற்கு!