Sunday, April 6, 2008

இழக்காமல் இழந்தது...

விதவிதமான மொபைல் வச்கிக்கிறதுக்கு எனக்கு ஆசையே கிடையாது. ஆனாலும் சைனா செட் புதிதாக வந்திருந்த சமயம் அது.
என் ஃபிரண்ட் தமீம் ஒரு செட் வச்சிருந்தான். செட் பெயர் NOKlA (இதை நீங்க எப்படி வாசிப்பீங்கன்னு பின்னூட்டத்துல சொல்லவும்)
அதை எடுத்து அடிக்கடி யூஸ் பண்ணுவேன். அதுல உள்ள வீடியோக்களை போட்டுப் போட்டு பார்த்துக்கிட்டு இருப்பேன்.
இதைப் பார்த்துட்டு டேய் கொஞ்ச நாளைக்கு நீயே இதை வெச்சுக்கோடான்னு எங்கிட்டயே கொடுத்துட்டு என்னோட ஓல்டு நோக்கியா 3310வை எடுத்துக்கிட்டான்.
பெருந்தன்மையா திருப்பிக் கேட்டகவே இல்லை.
அன்னைக்கு காலேஜுக்கு அதைக் கொண்டு போய் ஒரே ரவுசுதான்.
கிளாஸ் டைம் தவிர மத்த டைத்துல என்னேரமும் அதைக் கையிலயே வைச்சுக்கிட்டு திரிஞ்சேன்.
எங்கிட்ட உள்ள பெரிய கெட்ட பழக்கம் (சத்தியமா நம்புங்க எனக்கு தண்ணியடிக்கிறது, தம் அடிக்கிறது போன்ற பழக்கங்கள் எல்லாம் கிடையவே கிடையாது) கையில உள்ளதை பேசிக்கிட்டு இருக்கும் போது டேபிள் மேலேயே வைச்சிட்டுப் போயிருவேன். குறிப்பா மொபைல்.
எங்கப்பா அடிக்கடி என்னைத் திட்டுவார். மொபைலை டேபிள் மேலே வைக்காதே. எடுத்து பாக்கெட்டில் வை. எத்தனை தடவை சொன்னாலும் கேட்காமல் அப்படியே டேபிள் மேலேயே வைக்கிற பழக்கத்தை மட்டும் மாத்த முடியலை இன்னைக்கு வரைக்கும்.
அன்னைக்கும் இப்படித்தான் கையில வெச்சுக்கிட்டே அப்பல்லோல மருந்து வாங்கப் போனேன்.அப்படியே மொபைல மறந்து வைச்சிட்டுப் போயிட்டேன்.கடையை விட்டு ஒரு இருபதடி நடந்ததும்தான் மொபைலைக் காணோம்னு மண்டைல உதைத்தது.
வேகவேகமா திரும்பி அப்பல்லோக்குள்ள போனதும் அங்க ஒரு ‘குடிமகன்’ கையில என் மொபைல். சார் இந்தாங்க சார் உங்க மொபைல்னு எங்கிட்ட குடுத்தான்.... ஆனா குடுக்கல. ஙஅ மொபைலை மறந்து விட்டுட்டுப் போனதுக்கு ஃபைன் குடுங்க. நூறு ரூபாய் ஃபைன். என்ன சார் நான் சொல்றது சரிதான. இத நான் அப்படியே உங்கள்ட சொல்லாம இருந்திருந்தா உங்களுக்கு எவ்வளவு நஷ்டம்? பத்தாயிரம் ரூபாய் மொபைல விட்டுட்டுப் போறீங்கள்ள இத எடுத்துக் கொடுத்ததிருக்கேன். ஒரு நூறு ரூபாய் கொடுங்க நான் மொபைல தர்ரேன். (உண்மையிலேயே அந்த மொபைலோட ரேட்டு என்னன்னு எனக்கும் அப்ப தெரியாது. நானும் ரெம்ப அதிகமான விலைதான்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். பின்னாடிதான் அது 3000 ன்னு தெரிஞ்சது) அவர் என்னிடம் விளையாட ஆரம்பிச்சதும் எனக்கு என்ன பண்ணுறதுன்னே புரியல. பேசாம நூறு ரூபாயயைக் கொடுத்துரலாம்னு நெனச்சேன்.உள்ளுக்குள்ள அழுதாலும் வெளியில சிரிச்சிக்கிட்டே நின்னேன். தேறாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு சரி எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுங்கன்னு சொன்னார். சரி வாங்க வாங்கித் தர்ரேன்னு பக்க்ததுல உள்ள பேக்கிரிக்கு கூட்டிட்டுப் போனேன்.
என்ன வேணும்னு கேட்டதுக்கு நான் எதுவும் சாப்பிடல எனக்கு பப்ஸ் வாங்கித்தாங்க என் கூட 4 பேர் இருக்காங்க அவங்களுக்கும் சேர்த்து வாங்கித்தாங்கன்னு கேட்டார். சரி பத்தாயிரம் ரூபாய் மொபைலுக்கு ஒரு பத்து இருபது ரூபாய் செலவு பண்ணுறதுல தப்பே இல்லைன்னு வாங்கிக் கொடுத்தேன்.
இதெல்லாம் எனக்குப் பெரிசா தெரியல. ஆனா மொபைல அவரு திருப்பிக் கொடுத்ததுக்கு அப்புறமும் ஒரு அரை மணி நேரம் எங்கிட்ட வம்படியா பேசி அவராவே நன்றிய வாங்கிக்கிட்டாரு. ‘என்ன சார் நான் உங்கள்ட பப்ஸ் வாங்கிக் கேட்டதில தப்பில்லதான’ இதையே கிட்டத்தட்ட ஒரு நூறு தடவை சொல்லி என்னைய வெறுப்பேத்திட்டாரு. நம்ம குடிமகன்களோட பேச்சு எப்படி இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன். அன்னைக்குதான் முதல் தடவையா பார்த்தேன். இன்னும் அவரு அறுத்தது நிறைய. பேசாம மொபைல நீயே எடுத்துக்கிட்டு போயிருக்கலாம்னு சொல்லனும்னு தோனுச்சு
அதையெல்லாம் சொல்லி உங்களை அறுக்க வேணாம்னு இதோட நிறுத்திக்கிறேன்.
அப்புறம் மறக்காம பின்னூட்டத்துல நான் இழக்கமால் இழந்த மொலைல் பெயர் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா அறிவாளிங்களா!

இப்படிக்கு உங்கள் புகழன்

9 comments:

Thamiz Priyan said...

நோக்1ஏ ? எப்படியோ திரும்பி கிடைச்சுதேனு சந்தோசப்படுங்க! ஆமா அதுல அடி இடி மாதிரி இருக்குமே?

புகழன் said...

தமிழ் பிரியன் said...
//நோக்1ஏ ?//
தமிழ் பிரியன் வருகைக்கு நன்றி
அது நோகக்1ஏ அல்ல.
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்கிறீர்களா? அல்லது சொல்லி விடவா?

ஜி said...

:))))

ஒரு மொபைல வச்சி இம்புட்டு மொள்ளமாரித்தனம் பண்ணிட்டானா??? ;))

ரசிகன் said...

//என்ன சார் நான் உங்கள்ட பப்ஸ் வாங்கிக் கேட்டதில தப்பில்லதான’ இதையே கிட்டத்தட்ட ஒரு நூறு தடவை சொல்லி என்னைய வெறுப்பேத்திட்டாரு. நம்ம குடிமகன்களோட பேச்சு எப்படி இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன். அன்னைக்குதான் முதல் தடவையா பார்த்தேன்.//

ஹா..ஹா...:))))))

நல்லா ரசிக்கும்படியா எழுதியிருக்கிங்க:)
வாழ்த்துகள்.
(இந்த வேர்ட் வெரிப்பிக்கேஷனை எடுத்துடலாமே)

நிஜமா நல்லவன் said...

(சத்தியமா நம்புங்க எனக்கு தண்ணியடிக்கிறது, தம் அடிக்கிறது போன்ற பழக்கங்கள் எல்லாம் கிடையவே கிடையாது)

சத்தியமா நம்பிட்டேன்.

நிஜமா நல்லவன் said...

///அப்புறம் மறக்காம பின்னூட்டத்துல நான் இழக்கமால் இழந்த மொலைல் பெயர் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா அறிவாளிங்களா!///


என்னை கேக்கல அப்புறம் எப்படி நான் சொல்லுறது. என்ன கேக்கலைன்னா நான் அறிவாளி இல்லை. ஆனா எனக்கு தெரியும். அப்ப நான் யாரு?(எப்படியோ பதில் சொல்லாம தப்பிச்சாச்சு)

புகழன் said...

ஜி, ரசிகன், நிஜமா நல்லவன் அனைவரின் வருகைக்கும் நன்றி

cheena (சீனா) said...

ஓஒ குடிகாரன் கிட்டே நான் நெரெய பேசி இருக்கேன் - நல்லாத்தான் இருக்கும் - ம்ம்ம்ம - No Minor Vices - நல்வாழ்த்துகள்

நோ - க்யா ? இத அவன் கிட்டே கேட்டிருந்தா ஓடிப்போய் இருப்பான்ல

புகழன் said...

NOKLA என்பதே சரியானது.

இதில் L ஐ ஸ்மால் லெட்டரில் l என்று போட்டு

NOKlA என எழுதப்பட்டிருக்கும்.
பார்ப்பதற்கு NOKIA போலவே இருக்கும்.