Wednesday, July 23, 2008
தமிழச்சிக்கு ஓர் வேண்டுகோள்
என்னமோ உங்களுக்கு மட்டும்தான் பெண்ணியம் தெரியும் என்பது போலவும் நீங்கள் மட்டும்தான் பெண்ணியத்தை உயர்த்திப் பிடிப்பது போலவும் ஏதேதோ கிறுக்கி விடுகின்றீர்கள். (கிறுக்கல் என்று சொன்னதற்கு மன்னிக்கவும். இது என் வார்தை அல்ல. இந்தப் பதிவில் கண்டது.) உங்களை விடவும் பெண்களைவிடவும் எவ்வளவோ பெண்களை மதிக்கும் ஆண்கள் உள்ளனர். பெண்ணியம் பேசுவது இன்று ஃபேஷனாகி விட்டது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அல்லது பெண்களே படிக்கக் கூசும் அளவு வக்கிரமாக எழுதி விட்டால் இன்று பெண்ணிய வாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். இந்த வக்கிரங்களை ரசிப்பதற்கும் புகழ்வதற்கும் (எனக்குத் தெரிந்து இளையகவி, லக்கி லுக் போல்) ஒரு கூட்டம் இந்த ஜொள்ளர்களின் ஜொள்ளுக்குப் பின் ஒழிந்திருக்கும் ஆணாதிக்கத்தைக்கூட அறியாத தமிழச்சியெல்லாம் பெண்ணியம் பேசும் போதாத காலம் இது.தமிழச்சி அவர்களே! உங்களை மதிக்கிறோம். உங்கள் கருத்துக்களைப் போற்றுகிறோம். இந்த நவநாகரீக உலகில் பெண்களுக்கு எதிராய் பெண்களே செயல்படும்போது பெண்ணியம்பேச உங்களைப் போல் ஒருவர் இருக்கின்றார் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் அதில் சேற்றை வாரியிறைப்பதாக உங்கள் எழுத்துக்கள் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் தாழ்மையான வேண்டுகோள்.இந்த வேண்டுகோள் தமிழச்சிக்கு மட்டுமல்ல. பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகள் அனைவருக்கும்தான். அல்லது இப்படித்தான் பெண்ணியம் பேசுவோம் என்றால் அப்படிப்பட்ட பெண்ணியம் எங்களுக்குத் தேவையில்லை என்று பெண்கள் குரல் கொடுப்பார்கள்.எனது இந்தப் பதிவையும் கொஞ்சம் படித்துக் கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//இந்த வக்கிரங்களை ரசிப்பதற்கும் புகழ்வதற்கும் (எனக்குத் தெரிந்து இளையகவி, லக்கி லுக் போல்) ஒரு கூட்டம் //
யோவ் வெண்ணை!
லக்கிலுக்குன்னு எழுதி ஒரு சுட்டி கொடுத்திருக்கியே? அதுக்கும் லக்கிலுக்குக்கும் என்னய்யா சம்பந்தம்?
வந்துட்டானுங்க எழுத...
ஸாரி லக்கிலுக் அண்ணா!
உங்களுக்கு கொடுத்த லிங்கில் ஒரு சின்ன மிஸ்டேன் நடந்துருச்சி.
இப்ப சரிபண்ணிட்டேன்.
பாருங்க
இப்போ ஓக்கேண்ணா.... :-)
எப்பவும் தரவு தர்றப்போ சரியா தரணும்னுங்கிறது இங்கே எழுதப்படாத விதி.
:))
நண்பா!
உங்கள் கோபம் புரிகிறது.
வால்பையன்
:))
//இந்த வக்கிரங்களை ரசிப்பதற்கும் புகழ்வதற்கும் (எனக்குத் தெரிந்து இளையகவி, லக்கி லுக் போல்) ஒரு கூட்டம் //
!!!!!!!!!!!!!!!!!
அதிகமா ஆசைபட்ட ஆம்பளையும், ஆதிகமா கோவப்பட்ட பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை. தலைவர் சொன்னது எல்லோருக்கும் பொருந்துமுங்கோ..
புகழன் சார் ,
//நிறைய படிக்கனும் நிறைய படிக்க வைக்கனும் - அதற்காக நிறைய எழுதனும் //
எல்லாவற்றுக்கும் மூன்று சுழி "ணு "போடவும்!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
ARUVAI BASKAR said...
புகழன் சார் ,
//நிறைய படிக்கனும் நிறைய படிக்க வைக்கனும் - அதற்காக நிறைய எழுதனும் //
எல்லாவற்றுக்கும் மூன்று சுழி "ணு "போடவும்!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
--
நன்றி பாஸ்கர்
Post a Comment