சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு.
ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டேன். பின்புதான் தெரிந்தது இது எவ்வளவு கஷ்டம் என்று.
முன்பெல்லாம் 10, 12 ன் தேர்வு முடிவுகளை அறிவதற்காக ரெம்பவே கஷ்டப்பட்டிருக்கின்றோம்.
மாலை பேப்பரில்தான் முதலில் முடிவுகள் வெளியாகும்.
அன்றைய மாலை மலர் (அ) மாலை முரசு அமோக விற்பனையாகும்.
12, 1 மணிக்கெல்லாம் கடைக்காரரிடம் நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள் அண்ணே பேப்பர் வந்திருச்சா? அண்ணே பேப்பர் வந்திருச்சா? என்று.
அதில் முடிவுகளைப் பார்த்தாலும் தேறாத மாணவர்கள் ஏதாவது பிரிண்டிங் மிஸ்டேக் இருந்திருக்கும் நாளை காலை பத்திரிகையில் இறுதிமுடிவு வரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் சிலர்.
இன்டர்நெட் வந்த பிறகு எல்லாமும் ரெம்பவே சுலபமாகி விட்டது.
அது சரி இந்த வருட ரிசல்ட் பற்றி சில குறிப்புகள்.
கடந்த வருடங்களைப் போலல்லாமல் இந்த வருடம் வெற்றிபெற்றவர்களின் சதவிகிதம் அதிகரி்த்துள்ளது.
முதல் இரண்டு இடத்தைப் பெற்றவர்கள் ஆண்கள் - பெண்களும்தான்.
1182
1181
முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்கள் தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்தவர்கள் என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
கணிதவியல் கவிழ்த்து விட்டது. நிறைய பேர் அதில்தான் தோல்வியுற்றுள்ளனர்.
தோல்வியுற்றவர்கள் ஒருமாதத்திற்குள் மறுதேர்வு எழுதலாம்.
இது போன்ற வசதி முன்பு இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு வருடமே வேஸ்ட்டாகும் நிலை மிக வருத்தத்திற்கு உரியது.
கல்வித்துறை இதுபோன்ற நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அப்படியே கல்விமுறையையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவி்ட்டால் நல்லது.
சிறு வயதிலிருந்தே நீ என்னவாகப் போற? என்று கேட்டு கேட்டு (தன் கருத்தைத் தினித்து, சுய விருப்பத்தைத் தொலைத்த) குழந்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் பெற்றோர்கள்.
எங்க மாமா மகன் ஒருத்தன்ட நீ இன்ஜினியராக ஆகனும் என்று கூறியே வளர்த்தனர். அவன் 10வது வந்ததும் “அசோகர் மரம் நட்டதும், கஜினி முஹம்மது படையெடு்த்ததும் படிச்சா எப்படி இன்ஜினியர் ஆக முடியும்”னு கேட்டான்.
நல்ல கேள்விதான்.
இந்த வரலாறையெல்லாம் 10வது வரை படிச்சுக் கொடுக்கனுமா?
அப்புறம்................................
+2 என்பது பள்ளி இறுதிதானே தவிர கல்வி இறுதியல்ல.
இதை நிறைய பேர் தவறாக விளங்கி படிப்பை நிறுத்தி விடுகின்றார்கள்.
குறிப்பாக பெண்களுக்கு முதலில் 8வது வகுப்போடு நிறுத்தினார்கள். பின் 10வது வகுப்புடன் நிறுத்தினார்கள். தற்போது +2 உடன் நிறுத்தி விடுகின்றனர்.
கல்விக்கு எந்த வரம்பும் இன்றி விருப்பப்படி படிக்க வைக்க வேண்டும். படிக்கும் ஆர்வத்தையும் விருப்பத்தையும் தூண்ட வேண்டும்.
அடுத்த முக்கியமான விஷயம், கற்றல் என்பது இன்று வேலைசெய்வதற்கும் சம்பாதிப்பதற்கும் என்று ஆகி விட்டது. கற்பித்தல் என்பது வியாபாரமாகிவிட்டது.
அறியவேண்டும் என்பதற்காக கற்க வேண்டும். ஆராய வேண்டும். அப்படிப்பட்ட தலைமுறையை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் இந்தக் கல்வியாண்டிலிருந்து உறுதிஎடுப்போம்.
என்றும் மனதோடு மனதாய்...
உங்கள் புகழன்
15 comments:
நல்ல கண்ணோட்டம்... :)
\\பெண்களுக்கு முதலில் 8வது வகுப்போடு நிறுத்தினார்கள். பின் 10வது வகுப்புடன் நிறுத்தினார்கள். தற்போது +2 உடன் நிறுத்தி விடுகின்றனர்.
கல்விக்கு எந்த வரம்பும் இன்றி விருப்பப்படி படிக்க வைக்க வேண்டும். படிக்கும் ஆர்வத்தையும் விருப்பத்தையும் தூண்ட வேண்டும்.\\
Well said Pugazhan!!
//முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்கள் தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்தவர்கள் என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.//
நல்ல விஷயம் தான்.:)
//அவன் 10வது வந்ததும் “அசோகர் மரம் நட்டதும், கஜினி முஹம்மது படையெடு்த்ததும் படிச்சா எப்படி இன்ஜினியர் ஆக முடியும்”னு கேட்டான்.
.//
ஹா..ஹா..:)))
//அறியவேண்டும் என்பதற்காக கற்க வேண்டும். ஆராய வேண்டும். அப்படிப்பட்ட தலைமுறையை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் இந்தக் கல்வியாண்டிலிருந்து உறுதிஎடுப்போம்.//
நல்ல சிந்தனை.
அருமையா கருத்துக்களை தொகுத்துக்கொடுத்து,சிகரம் போல முடிவுரை சொல்லியிருக்கிங்க., வாழ்த்துக்கள்:)
//முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்கள் தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்தவர்கள் என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.//
தவறான தகவல். முதல் மதிப்பெண் (1191) எடுத்தவர் ஃப்ரெஞ்சு எடுத்து படித்துள்ளார். பலர் தமிழ் எடுக்காததால் 1185 மேல் வாங்கியும் முதல் இடங்களுக்கு தகுதி இழந்தனர்.
/
முதல் இரண்டு இடத்தைப் பெற்றவர்கள் ஆண்கள் - பெண்களும்தான்.
1182
1881
/
இது என்ன அவங்க மார்கா???
மார்க்குனா 1881 வாங்க முடியுமா?
தமிழ் பிரியனின் வருகைக்கு நன்றி
நன்றி திவ்யா மாஸ்டர்
ரசித்த ரசிகனுக்கு நன்றி
வாழ்த்துக்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி
\\
Anonymous said... //முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்கள் தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்தவர்கள் என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.//
தவறான தகவல். முதல் மதிப்பெண் (1191) எடுத்தவர் ஃப்ரெஞ்சு எடுத்து படித்துள்ளார். பலர் தமிழ் எடுக்காததால் 1185 மேல் வாங்கியும் முதல் இடங்களுக்கு தகுதி இழந்தனர்.
May 10, 2008 12:49 AM
\\
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
மங்களூர் சிவாவின் முதல் வருகைக்கு ஒரு நன்றி!
\\ மங்களூர் சிவா said...
/
முதல் இரண்டு இடத்தைப் பெற்றவர்கள் ஆண்கள் - பெண்களும்தான்.
1182
1881
/
இது என்ன அவங்க மார்கா???
மார்க்குனா 1881 வாங்க முடியுமா?
\\
கமென்ட்களை காப்பி பேஸ்ட் செய்யாமல் சொந்தமாக எழுதியதற்கு மேலும் ஒரு நன்றி!
தவறைச் சுட்டிக்காட்டியதற்காக மேலும் மேலும் நன்றி!
அப்புறம் ஒரு ஸ்பெஷல் நன்றி...
என் பதிவை நன்கு படித்ததற்காகக.
(படிச்சதாலதான தல தவறைச் சுட்டிக்காட்டி கமென்ட் குடுத்துருக்காரு இல்லைன்னா காப்பி பேஸ்ட்தான்)
புகழனுக்கு நன்றாக எழுத வருகிறது... இன்னும் மெனக்கெடுங்க...
\\
தமிழன்... said...
புகழனுக்கு நன்றாக எழுத வருகிறது... இன்னும் மெனக்கெடுங்க...
\\
சரிகண்ணா
இப்பத்தான் எழுதப் பழகுறேன்.
நிறைய கத்துக்கிட்டதுக்கு அப்புறம் நல்லா எழுதுவேன்.
நல்ல ஆராய்ச்சி
கற்றல் என்பது பணி புரியவும் பணம் சேர்க்கவும் என்பதற்காகத்தான் என்பது தான் யதார்த்தம். இர்ப்பினும் நாம் பணி புரிவதிலும் பணம் சேர்ப்பதிலும் ஆங்காங்கே கற்றுக்கொள்ளவும் செய்கிறோம். கற்றதனால் ஆன பயனைச் சிறிதாவது செயல் படுத்துகிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கற்கிறார்கள். கல்லாதாவரே கிடையாது.
Post a Comment