Wednesday, May 14, 2008

“ஏண்டா எனக்குப் பின்னாடி பொறந்த?”

அத்தை மகள்.
முதல் முறையாக அவள் என்னை இழுத்து நிற்கவைத்து, “ஏன்டா எனக்குப் பின்னாடி பொறந்த?” என்று கேட்டபோது, எனக்கு வயது பதினொன்றிருக்கும். அவள் பத்தாவது எழுதியிருந்தாள். அவள் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல், அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்கத்தான் தெரியும் அப்போதெனக்கு.
சும்மா பார்த்துக் கொண்டு நிற்கிற என் கண் முன்னேயே அவள் வளையல்களையெல்லாம் கழற்றி, என் கையில் திணித்து
“போட்டு விடு” என்று கைகளை நீட்டிக் கொண்டு நிற்பாள்.
சின்னச் சின்னதாக ஈரம் ஒட்டியிருக்கிற உடையில் என்னை வந்து எழுப்பி... காபி கொடுப்பாள். குடித்துக் கொண்டிருக்கையில்
பிடுங்கிக் குடிப்பாள்.
குளித்துவிட்டு வருகிற என்னை அருகில் வைத்துத் தலை துவட்டி விடுவாள்.
“ஏண்டி முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கிட்டுப் பொறந்த... பொறுத்துப் பொறந்திருந்தா இந்த வீட்டுக்கே
ராணியாயிருக்கலாமில்ல...” அம்மா அவளிடம் சொல்லும்போதெல்லாம் அவள் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். அது
சிரிப்பில்லை என்பது எனக்குப் புரிய ரெம்ப வருடங்களானது.
அவள் கடைசியாக இங்கு வந்திருந்தபோது, நான் பத்தாவது எழுதியிருந்தேன். எப்போதும் இருக்கிற உற்சாகம் இல்லாதவளாக
இருந்தாள். அந்தச் சிரிப்புச் சத்தம் கேட்கவே முடியவில்லை.
“ஏன்டி உம்முனு இருக்கே வந்ததிலேர்ந்து?” - கேட்டது அம்மா.
“இல்லையே... நால்லாதானே இருக்கேன்...” அவள் சொல்லி முடிப்பதற்குள் அம்மாவை யாரோ கூப்பிட்டார்கள்.
அம்மா போனதும், “நீ கேட்கமாட்டியா, ஏன் உம்முனு இருக்கேனு” என்றாள் என்னைப் பார்த்து.
நான் பேசாமல் அமைதியாக அவள் முகம் பார்த்து நின்றேன்.
“எனக்குக் கல்யாணம் ஆகப் போகுதுடா...’’
அப்போதும் அப்படியே நின்றிருந்தேன்.
“உங்கிட்ட போய்ச் சொன்னேனே” - நெற்றியில் அடித்துக் கொண்டு போனாள்.
அப்புறம் சத்தமற்றவளாக சில நாள் இருந்துவிட்டு, ஊருக்குக் கிளம்பும் அன்று...
நான் முற்றத்தில் காலைத் தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தேன். கொலுசுச் சத்தத்துடன் என்னருகில் வந்து நின்றாள்.
“டேய்... இந்த வீட்டில் உனக்குப் பிடிச்ச இடம் எதுடா?” என்றாள்.
பீரோவின் பக்கத்தில் இருக்கிற இருட்டைக் கைகாட்டினேன்.
என் கையைப் பிடித்து இழுத்துப் போய் அங்கே நிற்க வைத்து... கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று என்னை இழுத்து அணைத்துக் கொண்டாள். தன் இரு கைகளாலும் என் முகத்தை ஏந்தி, “ஏண்டா எனக்குப் பின்னாடி பொறந்த?” கேட்டபோது, என் முகத்தில் சில சொட்டுக் கண்ணீர் விழுந்தது. சட்டென்று விலக்கிவிட்டுப் போய்விட்டாள்.
காலத்தின் போக்கில், அந்த நேர அற்புதம் நெஞ்சில் ஊற ஊற... அதன் அர்த்தம் விளங்க விளங்க... என் முகத்தில் சிந்திவிட்டுப் போன அவளின் கண்ணீர் துளிகளில் கரைந்துகொண்டிருப்பேன் அந்த இடத்தில். அவள் இங்கிருந்து போயிருந்தாலும், எனக்கான
அவளை மட்டும் விட்டுவிட்டுப் போயிருந்தாள் அந்த இருட்டின் வெளிச்சத்தில்.


தபூ சங்கருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமோ இல்லையோ. அவர் கற்பனையில்கூட இப்படி எழுதியிருக்கலாம்.ஆனால் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதெல்லாம் (இதை மட்டும் அடிக்கடி எடுத்துப் படிப்பேன்) எனக்கு என் பழைய நினைவுகள் வந்துவிடும்.

என் அக்கா மகள்.

தூரத்து உறவுதான். ஆனால் பக்கத்து வீடு. அவர் வீட்டுக்கு நான் போகும்போதெல்லாம் என் அம்மாவிடம்
“கொஞ்சம் பெரிய பையனா இருந்தா நானே கட்டிக்கொள்வேன்” என்று கூறுவார்கள்.

என் அம்மாவிற்கு மொத்தம் 5 அண்ணன்கள் 1 தம்பி. சிலநாட்கள் கழித்து 10வது முடித்து மேலும் படிக்க வெளியூர் சென்று ஒருநாள் விடுமுறையில் திரும்பி வரும்போது என் அம்மாவின் தம்பிக்கு (என் மாமா)
திருமணம். எனக்கு அத்தையாக வந்தது ‘என்னைக் கட்டிக்கொள்கிறேன்’ என்று கூறிய என் அக்காவின் மகள்தான். என்னை மாமா என்று கிண்டலுக்காக அழைத்த அவங்க இன்று எனக்கு அத்தை. ஆனால் அப்படியே மாறாமல் இன்னமும் மாமா
என்றே அழைப்பார்கள். எனக்கே சங்கடமாக இருக்கும். என் ஆறு அத்தைகளை விட இவர்கள்தான் என் மீது அதிக அன்புடன்
இருப்பார்கள். மாமா வீட்டிற்கு சென்றால் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார்கள். ஹோட்டல், பார்க், பொருட்காட்சி, சினிமா என்று
எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வேன் என்று பிடிவாதமாக இருப்பார்கள். (அப்போதும் எனக்கு சின்னவயதுதான்). ஒருநாள் எங்க மாமா வீட்டில் ஒரு ஃபங்ஷன். எல்லா மாமா அத்தைகளும் ஒன்றாக இருக்கும் போது பேச்சு அவர்களின்
பிள்ளைகளைப் பற்றி போனது. எங்க வீட்டுலதான் உங்க மகனுக்கு பொண்ணு கட்டனும் என்று எல்லா அத்தையும் போட்டி
போட்டுக் கொண்டு சொன்னபோது, என் அக்கா மகள் என் அத்தை என்னிடம் “இங்க பாரு... என் மகளத்தான் நீ கட்டிக்கனும்.
இல்லை நடக்குறதே வேற” என்று ரெம்பவே சீரியஸாகக் கூறினார்கள். பின் பேச்சு வேறு பக்கம் சென்று எல்லோரும் இந்த
டாபிக்கையே மறந்து விட்ட நிலையிலும் எல்லோரும் சென்ற பின் என் அக்கா மகள் என்னிடமும் என் அம்மாவிடமும்
கூறினார்கள். என் மகளை நீ தான் கட்டிக்கனும். அதற்கு எம் அம்மா அவனுக்கே 17வயது
ஆகிவிட்டது இனிமேல் நீ பிள்ளை பெற்று அவளை கட்டிக்கவா? இதெல்லாம் நடக்குற காரியமா? சும்மா பேச்சுக்கு கிண்டல்
பண்ணு சரி. ஆனால் நீ ஏன் இவ்வளவு சீரியஸாகப் பேசுற

ஒரு நாள் லீவில் வந்திருக்கும் போது என் அம்மா சொன்னார்கள். மாமிக்கு கர்ப்பப்பையிலே கேன்சராம். ஆபரேஷன்
செய்தால்தான் பிழைக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். ஆனால் இது மாமிக்கு தெரியாது என்று சொன்னார்கள். அத்தையைப் பார்க்க மாமா வீட்டிற்கு சென்றபோது ஹாஸ்பிடல் சென்று கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் என் மாமி
கூறினார். “நான் கர்ப்பமாயிருக்கேன். எனக்கு கண்டிப்பாக பொம்பளப் பிள்ளைதான் பிறக்கும். நீதான் கட்டிக்கனும்.” என்று
சொன்னபோது எனக்கு வந்த அழுகையை அடக்கிக் கொள்ள ரெம்பவே கஷ்டப்பட்டேன். கடைசிநேரம் வரை கர்ப்பப்பையை எடுக்க சம்மதிக்காமலேயே இறந்து விட்டார். என் நினைவில் நின்றவர்களில் முதலிடம் அவருக்கு மட்டுமே என்றும்.

28 comments:

ரசிகன் said...

பீல் பண்ண வைச்சுட்டிங்களே மக்கா:((

ரசிகன் said...

நல்லாயிருங்க:)

ரசிகன் said...

//அவள் இங்கிருந்து போயிருந்தாலும், எனக்கான
அவளை மட்டும் விட்டுவிட்டுப் போயிருந்தாள் அந்த இருட்டின் வெளிச்சத்தில்//

தபு சங்கர் ரியலி கிரேட் தான்:)

Thamiz Priyan said...

நல்ல நினைவுகள்.. அனைவருக்கும் இது போல் உருகிவிடக்கூடிய உறவுகள் இருக்கத்தான் செய்கின்றனர்....

நிஜமா நல்லவன் said...

:((

புகழன் said...

\\
ரசிகன் said...
பீல் பண்ண வைச்சுட்டிங்களே மக்கா:((

\\

நினைவலைகள் எப்பொழுதும் ஃபீல் பண்ண வைக்கும்
வருகைக்கு நன்றி ரசிகன்

புகழன் said...

//தமிழ் பிரியன் said...
நல்ல நினைவுகள்.. அனைவருக்கும் இது போல் உருகிவிடக்கூடிய உறவுகள் இருக்கத்தான் செய்கின்றனர்....

//
கருத்துக்களுக்கு நன்றி தமிழ் பிரியன்

புகழன் said...

// நிஜமா நல்லவன் said...
:((
//
என்ன பாரதி வாயடைத்துப் போய்விட்டீர்களா?

PPattian said...

தபூ சங்கரோடது ரொமாண்டிக் பீலிங்னா, உங்களோடது அதையும் தாண்டி புனிதமான பீலிங்..

மொத்தத்தில் நல்ல ஒரு படைப்பு..

புகழன் said...

//
PPattian : புபட்டியன் said...
தபூ சங்கரோடது ரொமாண்டிக் பீலிங்னா, உங்களோடது அதையும் தாண்டி புனிதமான பீலிங்..

மொத்தத்தில் நல்ல ஒரு படைப்பு..

//

வாங்க பட்டியன்
உங்கள் முதல் வருகைக்கு நன்றி!
அது சரி என்னோடதுல அப்படி என்ன புனிதம் தெரியலையே!

தமிழன்-கறுப்பி... said...

///பீல் பண்ண வைச்சுட்டிங்களே மக்கா:((///


ரிப்பீட்டு..

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

//அவள் இங்கிருந்து போயிருந்தாலும், எனக்கான
அவளை மட்டும் விட்டுவிட்டுப் போயிருந்தாள் அந்த இருட்டின் வெளிச்சத்தில்//

தபு சங்கர் ரியலி கிரேட் தான்:)///

இதுக்கொரு பலமான ரிப்பீட்டு...

தபூ சங்கரின் ஆக்கங்கள் எனக்கு வாசிக்க கிடைத்தது மிகக்குறைவு... ஆனால் அவருடையதில் நான் முதலில் வாசித்ததாக நினைவில் இருப்பது இனிமேல் எனக்கு பரிசு தராதேஎன்கிற ஆக்கம்தான்...
உண்மையிலேயே பெரிய ஆள்தான்...

தமிழன்-கறுப்பி... said...

நிறைய உறவுகளோடு பழகியிருந்தாலும் சில உறவுகள் நம்மில் ஏற்படுத்திப்போகும் தாக்கங்கள் ஆழமானதும் இனம்புரியாததுமாக இருக்கிறது...

புகழன் said...

//
தமிழன்... said...
நிறைய உறவுகளோடு பழகியிருந்தாலும் சில உறவுகள் நம்மில் ஏற்படுத்திப்போகும் தாக்கங்கள் ஆழமானதும் இனம்புரியாததுமாக இருக்கிறது...
//

எல்லோருக்கும் இதுபோன்ற உறவுகள் இருக்கும்போல் தோன்றுகிறது.
வருகைக்கு நன்றி தமிழன்

Divya said...

சில உறவுகள் ஏற்படுத்தும் தாக்கம் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது, ஆழமாக பதிந்துவிடும் நினைவுகளைப் போல:))

கடைசி வரிகள் படிக்கும்போது, கண்கள் கலங்கின.

சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்று இயல்பாக எழுதியுள்ளீர்கள்.

Divya said...

தபுவின் கவிதை பகிர்வு அருமை:))

புகழன் said...

//Divya said...
சில உறவுகள் ஏற்படுத்தும் தாக்கம் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது, ஆழமாக பதிந்துவிடும் நினைவுகளைப் போல:))

கடைசி வரிகள் படிக்கும்போது, கண்கள் கலங்கின.
//
அய்யோ நிஜமாவா. எனக்கே இப்ப அந்த அளவு ஃபீலிங்க வருவதில்லை.

//
சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்று இயல்பாக எழுதியுள்ளீர்கள்.

//

நாங்க என்னதான் ரியலையே எழுதுனாலும் உங்க அளவு ரியாலிடியா எழுத முடியாதுதானே

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திவ்யா

rahini said...

urawukalin pirivu emaatam maranikka seithu vidum
nalla aakam
rahini

புகழன் said...

//

rahini said...
urawukalin pirivu emaatam maranikka seithu vidum
nalla aakam
rahini

//
வாங்க் ராகிணி
வாசிக்க ரெம்பவே கஷ்டமா இருக்கு
எனவே தமிழில் டைப் செய்ய முயற்சி செய்யவும்.
இல்லையெனில் சொல்ல வந்ததை ஆங்கிலத்திலேயே கூறிவிடுங்கள்.

ஜி said...

Nenjai thotta pathivu Pugazan...

புகழன் said...

வாங்க ஜி!
ரெம்ப நாளைக்கு பின்னால வந்ததுல ரெம்பவே சந்தோஷம்.
கருத்துக்கு நன்றி!

நவீன் ப்ரகாஷ் said...

மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது புகழன் !!!

புகழன் said...

\\நவீன் ப்ரகாஷ் said...
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது புகழன் !!!

\\

உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நவீன்

Anonymous said...

urawukalin pirivu emaatam maranikka seithu vidum
nalla aakam
rahini

=

உறவுகளின் பிரிவு,ஏமாற்றம் மரணிக்க செய்து விடும்.
நல்ல ஆக்கம்.
ராஹினி.

ராஹினி இதைத்தான் தமிழிஷ் யில் எழுதியிருக்கிறார்கள்......இப்போ புரிந்ததோ??

புகழன் said...

\\திவ்யா said...
ராஹினி இதைத்தான் தமிழிஷ் யில் எழுதியிருக்கிறார்கள்......இப்போ புரிந்ததோ??
\\
பரவாயில்லையே நல்லவே மொழியாக்கம் செய்கிறீர்கள்.
நீங்கள ஒரு தமிழிஷ் டிக்ஸ்னரி போடலாம் திவ்யா.

ஆமா இது எந்த திவ்யா கதாசிரியையா?

ஸ்ரீ said...

முதலில் கொஞ்சம் சுவாரசியமா போன பதிவு முடிவில் நெஞ்சை கொஞ்சம் பிடித்து பிழிந்துவிட்டது :(

Shwetha Robert said...

Hi Pughalan,
crawled in to your page from your detailed comments in Divya's blog,

have landed up in a worth reading page I hope:)

Very nice post which made me to feel the indepth feeling of the writer.

Good one:)

cheena (சீனா) said...

//அவளை மட்டும் விட்டுவிட்டுப் போயிருந்தாள் அந்த இருட்டின் வெளிச்சத்தில். //

தபூசங்கரின் இவ்வரிகள் ஆழமானவை.

புகழன், வாழ்க்கையில் என்ன வெல்லாம் நடக்கிறது. அக்கா மகள் அத்தையாவதும் - அத்தை மகள் (அக்கா பேத்தி ) மனைவியாவதும் .........ம்ம்ம்ம்ம்

சுற்றம் என்றுமே இனிக்கும் புகழன்