Friday, April 4, 2008

இன்பத்தைத் தேடி...

அவர் ஒரு கம்பெனிக்கு மானேஜர். அவருக்கு அழகான ஒரு பெண் பி.ஏ.வாக வேலைக்குச் சேர்ந்தாள். அந்தப் பெண்ணுக்குத் தன்னிடம் ஒரு மயக்கம் இருப்பதாக மானேஜர் நினைக்கிறார். அது உண்மையாக இருக்கக்கூடாதா என்று அவர் உளமாற விரும்புகிறார்.
தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி ஒருநாள் மானேஜருக்கு அந்தப் பெண் அழைப்பு விடுக்க... இப்போது மானேஜருக்குச் சந்தேகமே இல்லை. “இந்தப் பெண் என்னைப் பார்த்து மயங்கிவிட்டாள்....’ என்று இவர் உறுதியான நம்பிக்கையோடு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அன்றிரவே விருந்து சாப்பிடப் போகிறார்.
அந்தப் பெண்ணின் வீட்டில் யாருமே இல்லை. டைனிங் டேபிளில் மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிக்கிறது. அந்தப் பெண் தன் மீது மோகம் கொண்டிருக்கிறாள் என்பது நூறு சதவிகிதம் உறுதி என்று தனக்குத்தானே மீண்டும் ஊர்ஜிதம் செய்து கொள்கிறார். இருவரும் விருந்து சாப்பிட உட்காருகிறார்கள். இரவு 11.30 மணி ஆகிறது. மானேஜரின் சந்தேகத்துக்குத் துளியும் இடமில்லை. ‘இவள் இன்று எனக்குத் தன்னையே கொடுக்கப் போகிறாள்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.
நள்ளிரவு 12.00 மணி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த அறைக்குப் போகலாம் என்று அந்தப் பெண் மானேஜரை அழைக்க... தான் அணிந்திருந்த கோட்டையும் சட்டையும் கழற்றிவிட்டு மானேஜர், அந்தப் பெண்ணின் பின்னே போகிறார். அந்த அறை இருட்டாக இருக்கிறது. ‘சரி, அவள் விளக்கைப் போடுவதற்கு முன்பே தயாராக இருக்கலாமே...’ என்று மிச்சமிருந்த அனைத்து உடைகளையும் மானேஜர் கழற்றிவிடுகிறார்.
அப்போது சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு அடிக்க... இருட்டைக் கிழித்துக் கொண்டு அந்த அறையில் விளக்குகள் பளிச்சென்று உயிர் பெருகின்றன. அந்த அறை முழுவதும் இவரின் ஆபீஸில் பணிபுரியும் எல்லா ஊழியர்களும் ‘ஹேப்பி பர்த்டே’ என்று கைதட்டிப் பாட்டுப் பாட ஆரம்பிக்கிறார்கள். மானேஜரோ, பர்த்டே என்று நிஜமாகவே பிறந்த மேனியுடன் அசடு வழிய நின்றிருக்கிறார்.
தனது பிறந்த நாளையே மறந்து அந்தப் பெண்ணின் பின்னால் சென்ற அந்த மானேஜரைப் போலத்தான் நாமும் பல சமயம் இன்பத்தை நமக்கு வெளியிலேயே தேடிக் கொண்டிருக்கிறோம்.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற நூலில் படித்தது.
இப்படிக்கு உங்கள் புகழன்

12 comments:

Divya said...

\\நாமும் பல சமயம் இன்பத்தை நமக்கு வெளியிலேயே தேடிக் கொண்டிருக்கிறோம்.\\

100% உண்மை!!

நகைச்சுவையாக சொல்லப்பட்டிருந்தாலும், சொல்ல வந்த கருத்து அருமை!

பகிர்விற்கு நன்றி!

[can u remove this word verification, hv to change font often....plssss]

புகழன் said...

வருகைக்கு நன்றி திவ்யா
தொடர்ந்து படியுங்கள்.
//[can u remove this word verification, hv to change font often....plssss]
//
எனக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது. தமிழிலேயே இதனைக் கூறியிருக்கலாம்.

நிஜமா நல்லவன் said...

///டேபிள் மேலேயே வைக்கிற பழக்கத்தை மட்டும் மாத்த முடியலை இன்னைக்கு வரைக்கும்///


உங்க கைய டேபிள் மேல வச்சிட்டு எங்க போனீங்க(ப்ரோபைல் படம்)?

நிஜமா நல்லவன் said...

sign in

customize

settings

comments

Show word verification for comments? Yes No


இங்க நோ டிக் பண்ணுங்க தெய்வமே.. ரொம்ப கஷ்டமா இருக்கு கமெண்ட் போட.

புகழன் said...

// நிஜமா நல்லவன் said...
sign in

customize

settings

comments

Show word verification for comments? Yes No


இங்க நோ டிக் பண்ணுங்க தெய்வமே.. ரொம்ப கஷ்டமா இருக்கு கமெண்ட் போட.

//

எத்தனையோ பேர் (சாரி ஒரு சிலர்தான் என் பதிவுகளைப் படிக்கிறாங்க)
Word verificationஐ ரிமூவ் பண்ண சொல்லி கூறியிருந்தாலும் அதை எப்படி ரிமூவ் செய்வது என்பதைக் கற்றுக் கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நிஜமா நல்லவன் said...

////மனதோடு மனதாய் said...
எத்தனையோ பேர் (சாரி ஒரு சிலர்தான் என் பதிவுகளைப் படிக்கிறாங்க)
Word verificationஐ ரிமூவ் பண்ண சொல்லி கூறியிருந்தாலும் அதை எப்படி ரிமூவ் செய்வது என்பதைக் கற்றுக் கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.////


அட வேர்ட் வெரிபிகேஷன் காணல. உண்மையிலேயே உங்களுக்கு தெரியாதா? சும்மா கிண்டல் தானே????????

ஸ்ரீ said...

:))))

Thamiz Priyan said...

நல்லா சஸ்பென்ஸ் கதையெல்லாம் போடுறீங்களே! வாழ்த்துக்கள்..

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

sign in

customize

settings

comments

Show word verification for comments? Yes No


இங்க நோ டிக் பண்ணுங்க தெய்வமே.. ரொம்ப கஷ்டமா இருக்கு கமெண்ட் போட. ///
என்ன பொறுப்புணர்ச்சி எங்க நண்பருக்கு பாருங்க. உங்கள் சமூக சேவைக்கு வாழ்த்துக்கள் நண்பா!

புகழன் said...

தமிழ் பிரியன் said...

//நல்லா சஸ்பென்ஸ் கதையெல்லாம் போடுறீங்களே! வாழ்த்துக்கள்..

//

நான் எழுதிய கதை அல்ல இது.
ஒரு புத்தகத்தில் படித்தது.
விரைவில் நானும் ஒரு சஸ்பென்ஸ் கதை சொந்தமாக(?!) எழுதுவேன்.

புகழன் said...

\\
தமிழ் பிரியன் said...
///நிஜமா நல்லவன் said...

sign in

customize

settings

comments

Show word verification for comments? Yes No


இங்க நோ டிக் பண்ணுங்க தெய்வமே.. ரொம்ப கஷ்டமா இருக்கு கமெண்ட் போட. ///
என்ன பொறுப்புணர்ச்சி எங்க நண்பருக்கு பாருங்க. உங்கள் சமூக சேவைக்கு வாழ்த்துக்கள் நண்பா!

'\\

உங்களைப் போன்ற பொறுப்புணர்ச்சி உள்ள நண்பர்களால்தான் எங்களைப் போன்றவர்கள் பிளாக்கில் பிரகாசிக்க முடிகின்றது.

cheena (சீனா) said...

மனசே ரிலாக்ஸ் பிளீஸ் - நல்ல படிக்க வேண்டிய புத்தகம். இக்கதை அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது. முற்றிலும் உண்மை. மனமெனும் குரங்கு குதியாட்டம் போடுகிறதே - என்ன செய்வ்வது.