விசித்திரமானது!
எப்போதும் அது
முரணாகவே சிந்திக்கிறது!
நீ கல்லை எத்தியதும்
கல் உன்னைத்
தட்டிவிட்டது என்கிறார்கள்!
நீ முள்ளை மிதித்தாய்
முள் உன்னைக்
குத்தியது எனக் கூறுகிறார்கள்!
அடியே!
இப்போதும் என்னை
விரும்பியது நீதான்!
உன் மனதைக் கெடுத்து விட்டேன்
நான் என்கிறார்கள்!
பழி என் மீது என்றாலும்
வலி எப்போதும்
உனக்கு மட்டும்
என்பதால் தானோ...?
என்றும் அன்புடன்
உங்கள் புகழன்
4 comments:
அழகான கவிதை...
Senthil Kumar
Bangalore
//அழகான கவிதை...//
வருகைக்கும்
வாழ்த்துக்கும்
நன்றி செந்தில்
\\பழி என் மீது என்றாலும்
வலி எப்போதும்
உனக்கு மட்டும்
என்பதால் தானோ...?\\
Nice lines!!
simple and cute 'kavithai'!!
வலி எப்பொழுதும் அவளுக்க்குத் தான் புகழன். நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள்
Post a Comment